

சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய பாஸிவ் பண்ட் திட்டம் செப்டம்பர் 9, 2026 முதல் செப்டம்பர் 22, 2026 வரை முதலீட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சந்தையின் தற்போதைய கடுமையான ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ளும் வகையில் சில புதிய பாஸிவ் ஃபண்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. முன்பெல்லாம் பாஸிவ் ஃபண்ட் என்றால் நிஃப்டி 50 அல்லது சென்செக்ஸ் குறியீடுகளை அப்படியே நகலெடுப்பதாக மட்டுமே இருந்தது.
ஆனால் தற்போதைய செப்டம்பர் 2026 சூழலில், சந்தை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப முதலீட்டைத் தானாகவே மாற்றி அமைக்கும் (Dynamic Asset Allocation) மற்றும் குறைந்த ஏற்ற இறக்கம் கொண்ட (Low Volatility) நவீன ஸ்மார்ட்-பீட்டா பாஸிவ் திட்டங்கள் அறிமுகமாகியுள்ளன. அந்த வகையில் ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் (Axis Mutual Fund) நிறுவனம் புதிய Axis Nifty 500 Low Volatility 50 Index Fund என்ற பாஸிவ் இன்டெக்ஸ் ஃபண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
என்.எஃப்.ஓ காலம் (NFO Period):
இந்தத் திட்டம் செப்டம்பர் 9, 2026 முதல் செப்டம்பர் 22, 2026 வரை முதலீட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சமாக ரூபாய் 100 முதல் முதலீடுத் தொடங்கலாம்.
முதலீட்டு உத்தி மற்றும் சிறப்பம்சங்கள்:
குறைந்த ஏற்ற இறக்கம் (Low Volatility):
இந்த இன்டெக்ஸ் ஃபண்ட், இந்தியாவின் முன்னணி 'நிஃப்டி 500' குறியீட்டில் உள்ள நிறுவனங்களில் இருந்து மிகக் குறைந்த ஏற்ற இறக்கத்தைக்கொண்ட 50 பங்குகளை மட்டும் தேர்ந்தெடுத்து இந்த ஃபண்ட் முதலீடு செய்கிறது. இதனால் சந்தை சரியும்பொழுது இந்த ஃபண்டின் மதிப்பு பெருமளவு சரிவதில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.
லார்ஜ் கேப் பங்குகள்:
இத்திட்டத்தின் முதலீடில் சுமார் 81% பங்குகள் லார்ஜ் கேப் (Large Cap) பிரிவைச் சேர்ந்தவை. மீதமுள்ளவை மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளிலும் முதலீடு செய்யப்படும். இதில் TCS, SBI, Sun Pharma, Bharti Airtel மற்றும் NTPC போன்ற இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் முக்கிய இடம் வகிக்கின்றன.
நிதி மேலாளரின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடம் தராமல், விதிகளுக்கு உட்பட்ட இன்டெக்ஸ் (Nifty 500 Low Volatility 50 TRI) முறையைப் பின்பற்றுவதால் இதன் கட்டண விகிதம் (expense ratio) மிகக் குறைவாக இருக்கும்.
பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களை சமாளிக்கும் வகையில் குறைவான விலை மதிப்பீடு மற்றும் குறைவான ஏற்ற இறக்கம் கொண்ட பங்குகளில் முதலீடு செய்யும் இந்த பாசிவ் ஃபண்ட் திட்டங்கள் (Nifty500 Low Volatility 50 குறியீடு) கடந்த காலங்களில் சந்தை சரிவின் போதும் சீரான லாபத்தை வழங்கியுள்ளது.
சந்தை கடுமையாகச் சரியும் போது, ஏற்படும் தாக்கத்தைக் குறைத்து முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டில் இருக்க உதவுகிறது. இந்தப் பங்குகள் பெரிய அளவில் பாதிக்கப் படுவதில்லை. இதனால் முதலீட்டாளர்கள் பயமின்றி நீண்ட காலம் முதலீட்டில் தொடரலாம். சந்தை உச்சத்தில் இருக்கும் பொழுது பதட்டமின்றி முதலீடு செய்யவும், நீண்ட காலத்தில் நிலையான வருவாயைப் பெறவும் விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த லோ-வொலாட்டிலிட்டி (Low Volatility) உத்தி பயனுள்ளதாக இருக்கும்.
சந்தை ஏற்ற இறக்கத்திற்கு இது எப்படி உதவும்?
வழக்கமான இன்டெக்ஸ் ஃபண்டுகள் சந்தையின் முழுப் போக்கையும் பிரதிபலிக்கும். ஆனால் இந்த 'லோ வோலடிலிட்டி' (Low Volatility) பாஸிவ் ஃபண்ட், சந்தை வீழ்ச்சி அடையும் காலங்களில் மற்ற ஃபண்டுகளைவிடக் குறைவான நஷ்டத்தையும், சந்தை மீளும்போது நிலையான வருமானத்தையும் கொடுக்கக்கூடிய உத்தியைக் கொண்டுள்ளது. எனவே பங்கு சந்தையின் தற்போதைய ஏற்ற இறக்கமான சூழலில், அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத மற்றும் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக அமையும்.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை:
இது ஒரு பாஸிவ் ஃபண்ட் மற்றும் குறைந்த ஏற்ற இறக்கம் கொண்டது என்றாலும், முழுமையாக ஈக்விட்டி (பங்கு சந்தை) சார்ந்த திட்டம் என்பதால் சந்தை வீழ்ச்சியின் போது மூலதன இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஃபண்ட் ஒதுக்கப்பட்ட 15 நாட்களுக்குள் முதலீட்டைத் திரும்பப் பெற்றால் 0.25% வெளியேற்றக் கட்டணம் விதிக்கப்படும். 15 நாட்களுக்குப் பிறகு கட்டணம் ஏதுமில்லை.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: