ஆயுஷ்மான் பாரத் PMJAY: ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு – எப்படி அட்டை பெறுவது?

பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் PMJAY திட்டத்தில், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழிகளில் எளிதாக அட்டை பெறலாம்.
ayushman-bharat-pmjay
ayushman-bharat-pmjay
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

யுஷ்மான் பாரத் அட்டை (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana PMJAY) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு இலவச மருத்துவ காப்பீடு திட்டமாகும். இத்திட்டம் செப்டம்பர் 2018ல் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சகத்தின் உறுதுணையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இது பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை பணமில்லா(cashless) சிகிச்சை பெற வழி வகுக்கிறது. தகுதியுள்ள நபர்கள் beneficiary.nha.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து இந்த அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதன் முக்கிய அம்சங்கள்: 

70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் வருமான வரம்பின்றி இந்த மருத்துவக்காப்பீடு வழங்கப்படுகிறது. 

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நோய்களுக்கு சிகிச்சை(Secondary & Tertiary care) பெறலாம்.

மருத்துவமனையில் உள்நோயாளியாக 3 நாட்கள் வரையும், அதைத் தொடர்ந்து வெளியில் இருந்து 15 நாட்கள் வரையும் பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் உட்பட அனைத்து மருத்துவச் செலவுகளையும் இத்திட்டம் ஏற்கிறது.

இத்திட்டத்தில் சேர்வதற்கு முன்னரே இருக்கும் நோய்களுக்கும் இதன் மூலம் சிகிச்சை பெறலாம்.

காப்பீட்டுத்தொகை குடும்பத்திற்கு ஆண்டுக்கு ₹5 லட்சம். 50 கோடிக்கும் அதிகமான பின்தங்கிய மக்களுக்கு இந்தத் திட்டம் மருத்துவ நிதியுதவி வழங்குகிறது.

தேவையான ஆவணங்கள்: 

ஆதார் அட்டை, 

ரேஷன் கார்டு(குடும்ப அட்டை) 

கைபேசி எண் 

இந்த அட்டை மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன், பின் செலவுகள் மற்றும் மருத்துவச் செலவுகள் ஆகியவை காப்பீடு செய்யப்படும்.

இதையும் படியுங்கள்:
7.5% உறுதியான வருமானம், குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு: அனைவருக்குமான கிசான் விகாஸ் பத்ரா திட்டம்!
ayushman-bharat-pmjay

விண்ணப்பிக்கும் முறை: 

PMJAY என்ற இணையதளத்திற்கு செல்லவும். 

"Am I eligible?" என்ற பகுதியில் மொபைல் எண் மூலம் உள் நுழையவும். 

தகவல்களை பூர்த்தி செய்து சரி பார்த்த பின்பு அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.  அல்லது ஆஃப்லைனிலும் பதிவு செய்யலாம். அருகில் உள்ள பொது சேவை மையம்/எம்பேனல் செய்யப்பட்ட மருத்துவ மனைக்குச் சென்று பயோமெட்ரிக் முறையில் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை எடுத்துச்செல்லவும். ஆபரேட்டர் நம் தகுதியை சரிபார்த்து, பயோமெட்ரிக் (கைரேகை) மூலம் பதிவு செய்வார். பதிவு செய்தவுடன் அட்டை பிரிண்ட் செய்து வழங்கப்படும்.

ஆயுஷ்மான் அட்டையின் நன்மைகள்: 

இத்திட்டம் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நோய்களுக்கு, மருந்துச் செலவுகள், அறுவை சிகிச்சை மற்றும் பின்தொடர்தல் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் வழங்குகிறது.

ஒவ்வொரு தகுதியுள்ள குடும்பத்திற்கும் ஆண்டுதோறும் ₹5 லட்சம் வரை மருத்துவ செலவை ஏற்கிறது.

இந்தியாவின் எந்த அரசு அல்லது தனியார் மருத்துவ மனையிலும் சிகிச்சை பெறலாம். மருத்துவமனையில் முன்பணம் செலுத்தத் தேவையில்லை.

ஆனால் குடும்பத்தில் ஒருவர் அரசு வேலையில் இருந்தாலோ அல்லது மாத வருமானம் அதிகமாக இருந்தாலோ இந்த அட்டை கிடைக்காது.

logo
Kalki Online
kalkionline.com