கம்மி பட்ஜெட்... செம்ம மைலேஜ்! ரூ.10 லட்சத்திற்குள்... நடுத்தர குடும்பங்களுக்கான டாப் 5 CNG கார்கள்!

நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் ரூ.10 லட்சத்திற்குள் வாங்கக்கூடிய சிறந்த சிஎன்ஜி கார்களை பார்க்கலாம் வாங்க...
top 5 CNG cars|சிஎன்ஜி கார்கள்
top 5 CNG cars|சிஎன்ஜி கார்கள்

ந்தியாவில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான கார்கள் ரூ.3.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்குகின்றன. மாருதி சுசூகி , ஹூண்டாய் மற்றும் டாடா பன்ச் போன்ற நிறுவனங்கள் நடுத்தரக் குடும்பங்களுக்கு ஏற்ற பட்ஜெட் கார்களை விற்பனை செய்கின்றன.

குறிப்பாக, சிஎன்ஜி (CNG - Compressed Natural Gas) கார்கள் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக விளங்கும் சிக்கனமான, சுற்றுச்சூழல் நட்பு வாகனங்களாக இருப்பதோடு, குறைந்த செலவில் அதிக மைலேஜ் தருவதால் நடுத்தர குடும்பத்தினரிடையே மிகவும் பிரபலமாகி வருகின்றன.

சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வால், குறைந்த செலவில் காரை இயக்க விரும்புபவர்களின் முதல் தேர்வாக தற்போது சிஎன்ஜி கார்கள் மாறி வருகின்றன. தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி அமைப்பு, குறைந்த இயக்க செலவு மற்றும் சுற்றுக்சூழலுக்கு உகந்த எரிபொருள் என்பதால் இந்த வகை கார்கள் மீது மக்களுக்கு ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடுத்தர குடும்பங்களுக்கு ஏற்ற வகையில் ரூ.10 லட்சத்திற்குள் வாங்கக்கூடிய சிறந்த சிஎன்ஜி கார்களை பார்க்கலாம் வாங்க...

1. டாடா பன்ச் ஐ-சிஎன்ஜி

Tata Punch i-CNG
Tata Punch i-CNG|சிஎன்ஜி கார்கள்image credit-cardekho.com

டாடா பன்ச் ஐ-சிஎன்ஜி (Tata Punch i-CNG) என்பது இந்தியாவின் முதல் CNG மற்றும் AMT கியர்பாக்ஸ், ட்வின்-சிலிண்டர் தொழில்நுட்பம் கொண்ட மைக்ரோ-எஸ்யூவி (Micro-SUV) ஆகும். இது நம்பகமான பாதுகாப்பு, தாராளமான பூட் ஸ்பேஸ் மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவை வழங்குகிறது.

1.2 லிட்டர் ரெவோட்ரான் (Revotron) பெட்ரோல் எஞ்சின். என்ஜினுடன் வரும் இந்த மைக்ரோ எஸ்யுவி தொழிற் சாலையிலேயே பொருத்தப்பட்ட இரட்டை சிலிண்டர் CNG அமைப்பை பெறுகிறது. CNG பயன்முறையில் 73.5 PS ஆற்றலையும், 103 Nm டார்க்கையும் வழங்குகிறது. இரட்டை சிலிண்டர் (Twin-Cylinder) அமைப்பு தரையின் அடியில் பொருத்தப்பட்டுள்ளதால், சிஎன்ஜி கார்களில் பொதுவாக ஏற்படும் பூட் ஸ்பேஸ் பிரச்சினை இதில் இல்லை. சுமார் 26.99 km/kg மைலேஜை வழங்குகிறது. 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு, உயரமான தரைவெளி மற்றும் உறுதியான உடல் அமைப்பு ஆகியவை இதன் முக்கிய பலம்.

வேரியன்ட்களுக்கு ஏற்ப இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.7.10 லட்சத்தில் தொடங்கி ரூ.9.55 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விற்கப்படுகிறது.

2. மாருதி சுசூகி பலேனோ சிஎன்ஜி

Maruti Suzuki Baleno CNG|சிஎன்ஜி கார்கள்
Maruti Suzuki Baleno CNGimage credit-cardekho.com

மாருதி சுசூகி பலேனோ சிஎன்ஜி (Maruti Suzuki Baleno CNG) என்பது நெக்ஸா (NEXA) ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்யப்படும் ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் கார் ஆகும். இது சிக்கனமான மைலேஜ் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது.

1.2 லிட்டர் கே-சீரிஸ் டூயல்ஜெட் என்ஜினுடன் கிடைக்கும் பலோனோ சிஎன்ஜி விசாலமான கேபின், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பிரீமியம் வசதிகளால் கவனம் ஈர்க்கிறது. ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, மற்றும் இன்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன் போன்ற வசதிகளும் உள்ளன. 6 ஏர்பேக்குகள், தானியங்கி குளிர்சாதன வசதி, தொடுதிரை தகவல்-பொழுபோக்கு அமைப்பு, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), மற்றும் ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட அம்சங்களுடன் வருகிறது.

வேரியண்டைப் பொறுத்து தோராயமாக இதன் விலை ரூ.8.35 லட்சம் முதல் ரூ.9.35 லட்சம் வரை மாறுபடும்.

3. ஹூண்டாய் எக்ஸ்டர் ஐ-சிஎன்ஜி

Hyundai Exter Hy|சிஎன்ஜி கார்கள்
Hyundai Exter Hyimage credit-NDTV

இந்தியாவில் டாடா பன்ச் சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஹூண்டாய் எக்ஸ்டர் ஐ-சிஎன்ஜி.

1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் கொண்ட இந்த மாடல், எஸ்.யு.வி. போன்ற தோற்றத்துடன் வருகிறது. இந்த இன்ஜினானது, CNG எரிபொருளில் இயங்கும் போது 69 hp பவர் மற்றும் 95.2 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. டிரைவர் சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி, முன்பக்க பவர் விண்டோக்கள், மின்சார சன்ரூப், இரட்டை கேமரா டாஷ் கேம், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், பின்பக்க பார்க்கிங் சென்சார், EBD-யுடன் கூடிய ABS மற்றும் ஆறு ஏர்பேக்குகள் உள்ளிட்ட பல நவீன வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள்:
கார் வாங்க சரியான நேரம்! ஜூன் மாதத்தில் ரூ.3.50 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி - முழு விபரம்!
top 5 CNG cars|சிஎன்ஜி கார்கள்

வேரியண்டைப் பொறுத்து தோராயமாக இதன் விலை ரூ.7.50 லட்சம் முதல் ரூ.9.46 லட்சம் வரை.

4. ஹூண்டாய் ஆரா சிஎன்ஜி

Hyundai Aura CNG|சிஎன்ஜி கார்கள்
Hyundai Aura CNGimage credit-cardekho.com

ஹூண்டாய் ஆரா சிஎன்ஜி (Hyundai Aura CNG) என்பது குறைந்த பராமரிப்புச் செலவு மற்றும் பிரீமியம் வசதிகளைத் தேடும் குடும்பங்களுக்கு ஏற்ற ஒரு சிறந்த செடான் (sedan) காராகும். இது சிறப்பான மைலேஜ் மற்றும் நம்பகமான செயல்திறனை வழங்குகிறது.

1.2 லிட்டர் இரட்டை எரிபொருள் என்ஜினுடன் கிடைக்கும் இந்த செடான், 68 bhp பவர் மற்றும் 95 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும். சுமார் 22 km/kg வரை மைலேஜ் தருகிறது. 6 ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் (ABS), பின்புற ஏசி வென்ட்கள், 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், ஆண்ட்ராய்டு ஆட்டோ (Android Auto) மற்றும் ஆப்பிள் கார்ப்ளே (Apple CarPlay) உள்ளிட்ட வசதிகளுடன் வருகிறது. தனி டிக்கி வசதி இருப்பதால் நீண்ட பயணங்களுக்கும் ஏற்ற தேர்வாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
ஒரே சார்ஜில் 647 கி.மீ பயணம்! ஸ்கோடாவின் அதிரடி எலக்ட்ரிக் கார் அறிமுகம்!
top 5 CNG cars|சிஎன்ஜி கார்கள்

இந்தியாவில் ஹூண்டாய் ஆரா சிஎன்ஜி மாடலின் ஆன்-ரோடு விலை (On-road price) சுமார் ரூ.7.60 லட்சம் முதல் ரூ.8.80 லட்சம் வரை மாறுபடுகிறது.

5. மாருதி சுசூகி வேகன் ஆர் சிஎன்ஜி

Maruti Suzuki Wagon R CNG
Maruti Suzuki Wagon R CNGimage credit-cardekho.com

மாருதி சுசூகி வேகன் ஆர் சிஎன்ஜி (Maruti Suzuki Wagon R CNG) என்பது இந்தியாவின் மிகவும் பிரபலமான டால்-பாய் (tall-boy) ஹேட்ச்பேக் காராகும். இது சிறந்த இடவசதி, குறைந்த பராமரிப்புச் செலவு மற்றும் மிக அதிக மைலேஜ் ஆகியவற்றை வழங்குகிறது.

1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கும் இந்த கார் நகர பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது. ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு சுமார் 33.05 முதல் 33.54 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கும். தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் (Factory Fitted S-CNG) மற்றும் 6 ஏர்பேக்குகள் (Airbags) தரமாக வழங்கப்படுகின்றன. உயரமான கேபின், விசாலமான உட்புறம் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.

இதையும் படியுங்கள்:
LPG Vs CNG |என்ன வித்தியாசம்? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்!
top 5 CNG cars|சிஎன்ஜி கார்கள்

இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.5.94 லட்சம் முதல் ரூ.6.95 லட்சம் வரை மாறுபடும்.

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference: 40 CNG Cars in India - 2026 Best CNG Car Prices

logo
Kalki Online
kalkionline.com