ஒரே சார்ஜில் 647 கி.மீ பயணம்! ஸ்கோடாவின் அதிரடி எலக்ட்ரிக் கார் அறிமுகம்!

Skoda PEAQ EV
SkodaImage Credit: Autocar India
Updated on

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் மின்சார வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இருசக்கர மற்றும் கார் போன்ற எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகமான ஆரம்ப கட்டத்தில் சில பிரச்சனைகள் இருந்தாலும், தற்போது அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, புதுப்புது மாடல்களுடன் அதிநவீன எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்ந்து சந்தையில் அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறது. அவ்வகையில் தற்போது SKODA-வின் அதிநவீன வசதி கொண்ட பிளாக்ஷிப் எஸ்யூவி எலக்ட்ரிக் காரான PEAQ EV அறிமுகமாகியுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரின் சிறப்பம்சமே ஒருமுறை சார்ஜ் செய்தால் 647 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் என்பதுதான்.

பொதுவாக வாகன ஓட்டிகள், தங்களது வாகனம் அதிக மைலேஜ் கொடுக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதற்கேற்பவே தற்போது 647 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும் புதிய எலக்ட்ரிக் கார் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் தற்போது இங்கிலாந்தில் அறிமுகமாகியுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை:

7 இருக்கைகள் கொண்ட PEAQ EV காரின் விலை இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இங்கிலாந்தில் 50,000 முதல் 60,000 பவுண்ட் வரை விற்பனையாகும் என சொல்லப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.53 லட்சம் முதல் ரூ.65 லட்சம் ஆகும்.

வேரியண்டுகள்:

PEAQ 60, PEAQ 90x, PEAQ 90 என 3 வகையான வேரியண்டுகளில் SKODA-வின் புதிய எலக்ட்ரிகல் கார் கிடைக்கிறது.

* PEAQ 60 காரில் 63 kWh பேட்டரி பயன்படுத்தப்படுவதால், ஒரு முறை சார்ஜ் செய்தால், 459 கி.மீ. வரை பயணிக்கலாம்.

* PEAQ 90x காரில் 91 kWh பேட்டரி AWD பயன்படுத்தப்படுவதால், ஒரு முறை சார்ஜ் செய்தால், 613 கி.மீ. வரை பயணிக்கலாம்.

* PEAQ 90 91 kWh பேட்டரி பயன்படுத்தப்படுவதால், ஒரு முறை சார்ஜ் செய்தால், 647 கி.மீ. வரை பயணிக்கலாம்.

சார்ஜிங் வசதி:

91 kWh பேட்டரி கொண்ட கார் மாடல்களில் 199 kW DC அதிவேக சார்ஜிங் வசதி உள்ளது. இதன்மூலம் 80% சார்ஜ் ஏறுவதற்கு வெறும் 28 நிமிடங்களே போதும்.

PEAQ EV கார் Modern Solid design மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 7 இருக்கைகள், 13.6-இன்ச் தொடுதிரை மற்றும் அதிநவீன உட்புற வசதிகள் உள்ளன.

உலகளாவிய வாகன சந்தையில் கியா இவி9 மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 9 ஆகிய கார்களுக்கு போட்டியாக SKODA PEAQ EV களத்தில் இறங்கியுள்ளது.

Skoda Peaq EV
Skoda EVImage Credit: CarExpert
இதையும் படியுங்கள்:
#JUST IN: குட் நியூஸ்.! ரூ.10,000 சரிவு.! தங்கம் வாங்க துடிப்போருக்கு அடித்தது ஜாக்பாட்.!
Skoda PEAQ EV

இந்தியாவில் PEAQ EV காரை விரைவில் அறிமுகப்படுத்த SKODA நிறுவனம் ஆலோசித்து வருகிறது. இதன்படி அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இந்த கார் அறிமுகமாகும் போது, இறக்குமதி வரி மற்றும் பிற உள்ளூர் வரிகளை சேர்த்தால் ரூ.60 முதல் ரூ.70 லட்சம் வரை விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அதிநவீன ஸ்கோடா PEAQ EV கார் அறிமுகமானால், விற்பனை அமோகமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வாட்ஸ்அப்பை ஆளப்போகும் இந்தியர்: யார் இந்த குணால் ஷா.?
Skoda PEAQ EV
logo
Kalki Online
kalkionline.com