பணத்தை பீரோவில் வைத்தால் வளராது, சரியான இடத்தில் முதலீடு செய்தால் மட்டுமே வளரும்!

Exchange Traded Funds
Exchange Traded Funds
Published on

ந்தியாவில் 2026ல் முதலீடு செய்ய சிறந்த ஈடிஎஃப்கள் (Exchange Traded Funds) முக்கியமாக நிஃப்டி 50, தங்கம் மற்றும் வங்கித் துறையை சார்ந்தவை. குறைந்த செலவு விகிதம், அதிக பணப்புழக்கம் மற்றும் சிறந்த கண்காணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்தவற்றை தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.

இந்தியாவில் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் (SBI Mutual Fund) வழங்கும் நிப்டி 50 இடிஎஃப் திட்டங்களில் SBI-ETF Nifty 50 மிகவும் பிரபலமானது மற்றும் அதிக வர்த்தகம் செய்யப்படுவது. இது நிஃப்டி 50 குறியீட்டை (Nifty 50 Index) அப்படியே பின்பற்றுகிறது. இந்த ஈடிஎஃப்-ஐ பங்குச் சந்தையில் SETFNIF 50 என்ற பெயரில் வாங்கலாம். மார்ச் 2026 நிலவரப்படி, இதன் ஒரு யூனிட் விலை சுமார் ரூ. 264.49 ஆக உள்ளது.

இந்தியாவின் முன்னணி SBI Nifty 50 ETF என்பது குறைந்த செலவு விகிதத்தை (low expense ratio) கொண்டுள்ளது. இது நீண்ட கால முதலீட்டிற்கு ஒரு சிறந்த தேர்வாகும். இது நிஃப்டி 50 குறியீட்டை பின்பற்றி, இந்தியாவின் முதல் 50 நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.

இதன் முக்கிய சிறப்பம்சங்கள்:

இந்தியாவின் 50 முன்னணி நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் SBI மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் etf ஆகும். நிஃப்டி 50 குறியீட்டைப் பின்பற்றி, குறைந்த செலவில், பங்குச்சந்தையில் நேரடியாக பங்குகளைப்போல வர்த்தகம் செய்யக்கூடிய, பரவலாக்கப்பட்ட நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும்.

இதில் முதலீடு செய்ய ஒரு டிமேட்(Demat) மற்றும் டிரேடிங் கணக்கு இருக்க வேண்டியது அவசியம்.

குறைந்த செலவு விகிதம்:

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான SBI Nifty 50 ETF என்பது ஒரு செயலற்ற நிதி (Passive Fund) என்பதால், மிகக் குறைந்த மேலாண்மைக் கட்டணம் (Expense Ratio) மற்றும் கையாளுதல் செலவு, சுமார் 0.04% மட்டுமே உள்ளது.

சாதாரண பங்குகளைப் போலவே NSE/BSE ல் நேரலையில் (Real- time) எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம் அல்லது விற்கலாம்.

இந்தத் திட்டம் ஜூலை 2015 இல் தொடங்கப்பட்டது மற்றும் லார்ஜ்-கேப் (Large-cap) பிரிவின் கீழ் வருகிறது.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு ஜப்பானின் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விருப்பமா? 
Exchange Traded Funds

வெளிப்படைத்தன்மை:

நிதியின் நிகர சொத்து மதிப்பு மற்றும் பங்குகள் குறித்த விவரங்கள் தினமும் வெளியிடப்படுவதால் முதலீட்டாளர்கள் வெளிப்படையாகத் தெரிந்துகொள்ளலாம்.

பரவலாக்கப்பட்ட முதலீடு:

நிஃப்டி 50 குறியீட்டில் உள்ள நிதி, எரிசக்தி, தொழில்நுட்பம், வாகன உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளின் முதல் 50 முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

குறைந்த டிராக்கிங் பிழை (Tracking Error):

இது நிஃப்டி 50 குறியீட்டின் செயல் திறனை நெருக்கமாக பின்பற்றுகிறது. இதனால் நிதியின் வருமானம் குறியீட்டின் வருமானத்துடன் ஒத்திருக்கும்.

நிர்வாகம்:

SBI ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

வருமானம்:

இது சந்தையின் போக்கிற்கு ஏற்ப வருமானத்தை அளிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இது ஆண்டுக்கு சராசரியாக 10.6% முதல் 11% வரை வருமானம் தந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

மிகக் குறைந்த மேலாண்மை கட்டணத்தைக் கொண்டுள்ளது.

நிஃப்டி 50 டிஆர்ஐ(Total Return Index) உடன் மிக நெருக்கமான செயல்திறன் NSEஇல் அதிக வர்த்தக அளவு கொண்டது.

இந்த ETF, பெரிய நிறுவனங்களில் (Large-cap) முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கும், பங்குச் சந்தையில் நேரலை வர்த்தக வசதி தேவைப்படுபவர்களுக்கும் ஏற்றது.

இதையும் படியுங்கள்:
ஹோம் பட்ஜெட் மேனேஜ்மென்ட்: தேவையில்லாத செலவுகளைக் குறைப்பது எப்படி?
Exchange Traded Funds

இது முழுவதும் பங்குச்சந்தை சார்ந்தது என்பதால், சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது. செபியின்(SEBI) அளவுகோல்படி இது மிக அதிக இடர்(High Risk) கொண்ட பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் குறைந்த பட்சம் ஒரு யூனிட் என்ற அளவிலும் கூட முதலீடு செய்யலாம். நீண்ட கால செல்வ வளர்ச்சியை இலக்காகக் கொண்டிருந்தால் இந்த ETF ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com