மின்சார ஸ்கூட்டர்களில் எது சிறந்தது என்பதைப் பற்றி பேசும் பொழுது பல பிரபலமான பிராண்டுகள் சந்தையில் உள்ளன. Ola S1 Pro, Ather 450X மற்றும் TVS iQube போன்ற ஸ்கூட்டர்கள் அதிக தூரம் செல்லக் கூடியவை. வேகமாக சார்ஜ் ஆக கூடியவை மற்றும் சிறந்த ஸ்மார்ட் அம்சங்களைக் கொண்டவை. பஜாஜ் சேட்க் மற்றும் ஓகாயா ஃபாஸ்ட் எஃப்2 எஃப் போன்ற மாடல்களும் நல்ல தேர்வுகளாகும்.
இந்த ஸ்கூட்டர்கள் ஏன் மிகவும் பிரபலமாக உள்ளன என்பதற்கான ஒரு விரிவான பார்வை:
1) ஹோண்டா ஆக்டிவா இ (Honda Activa e):
ஹோண்டா ஆக்டிவா இ என்பது ஹோண்டாவின் முதல் மின்சார ஸ்கூட்டர். இது எளிமையான ஆனால் கண்கவர் ஸ்டைலிங்கைக் கொண்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டருக்கு மேல் செல்லும். இது மாற்றக்கூடிய பேட்டரி தொழில்நுட்பத்துடன் வருகிறது. மேலும் புளூடூத் இணைப்புடன் கூடிய TFT டிஸ்ப்ளே, உள்வரும் அழைப்பு எச்சரிக்கைகள் மற்றும் டாப் வேரியண்டில் வழி செலுத்துதல் (நேவிகேஷன்) போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் Eco, Standard மற்றும் sport ஆகிய மூன்று முறைகளுடன் வருகிறது. இதன் எரிபொருள் திறன், மென்மையான சவாரி மற்றும் ஒட்டுமொத்த நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்றது.
2) சுஸுகி இ ஆக்சஸ் 125 (Suzuki e Access 125):
இ ஆக்சிஸ் என்பது சுசுகியின் முதல் மின்சார ஸ்கூட்டராகும். முன்புறத்தில் LED ஹெட் லைட்கள் மற்றும் DRL ஆக செயல்படும் செங்குத்து LED பட்டையுடன் கூடிய நேர்த்தியான வடிவமைப்பு, அலாய் வீல்கள், முன் டிஸ்க் பிரேக்குகள், முன் ஏப்ரனுக்கு பின்னால் சார்ஜிங் போர்டு மற்றும் பலவற்றிற்கான ஸ்மார்ட் சாவியும் உள்ளது. இதன் சக்தி வாய்ந்த என்ஜின், ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் வசதியான சவாரி நிலை ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது.
3) டிவிஎஸ் iQube:
டிவிஎஸ் நிறுவனம் iQube என்னும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. iQube ஸ்கூட்டரில் பெரிய பேட்டரி பேக், மேம்பட்ட ரேஞ்ச் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இது மணிக்கு 120 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய, ஒரு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகக்கூடிய வசதியுடன் உள்ள மின்சார ஸ்கூட்டராகும். இவை பல வண்ணங்களில் கிடைக்கிறது. iQubeஆனது ஹில் ஹோல்டு போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது பாதுகாப்பை அதிகரிக்கிறது. மேலும் சிறப்பான ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் செயல்திறனை வழங்குகிறது. ஓலா எஸ் 1 ப்ரோ, ஏத்தர் 450X மற்றும் பஜாஜ் சேத்தக் போன்றவை இவற்றிற்கு போட்டியாக உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களாகும்.
4) டிவிஎஸ் எக்ஸ் (TVS X):
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டராகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 140 கிலோ மீட்டர் வரை செல்லும். மணிக்கு 105 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் என்றும் கூறப்படுகிறது. இதில் மூன்று ரைட்டிங் மோடுகள், 10.25 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே மற்றும் மேம்பட்ட சஸ்பென்ஷன் சிஸ்டம் உள்ளது. ஸ்போர்ட்டி மற்றும் கவர்ச்சிகரமான மேக்சி ஸ்கூட்டர் ஸ்டைலிங் வடிவமைப்பைக் கொண்டது.
5) Ola S1 Pro:
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இது ஒரு சக்தி வாய்ந்த மோட்டாரைக் கொண்டுள்ளது மற்றும் அதிக தூரம் செல்லக்கூடியது. இது இரண்டு பேட்டரி வகைகளில் வருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 195 கிலோமீட்டர் வரை செல்லும் என்று கூறப்படுகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 116 கிலோ மீட்டராகும். இதில் டூயல் சேனல் ஏபிஎஸ், 4 ரைட்டிங் மோடுகள் ஹைப்பர், ஸ்போர்ட், நார்மல், ஈகோ என நான்கு ரைடிங் மோடுகள் மற்றும் பிரேக்-பை-வயர் தொழில்நுட்பம் போன்ற வசதிகள் உள்ளன. பல வண்ணங்களில் கிடைக்கும் இவை மூன்று ஆண்டுகள் அல்லது 40,000 கிலோ மீட்டர் நிலையான உத்தரவாதத்துடன் வருகிறது.
6) Ather 450X:
இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள ஏத்தர் 450 X சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டதாகவும் உள்ளது. இது மின்சார ஸ்கூட்டர் பிரிவில் ஒரு பிரீமியம் தேர்வாக உள்ளது. மேம்பட்ட தொடுதிரை டிஜிட்டல் டிஸ்ப்ளே, நேவிகேஷன், புளூடூத் இணைப்பு மற்றும் பல ஸ்மார்ட் அம்சங்களை கொண்டுள்ளது. வெள்ளை மற்றும் சாம்பல் என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 146 கிலோ மீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது.
வேகமான சார்ஜிங், ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் செயல்திறன் காரணமாக வாங்குபவர்களிடையே ஒரு பிரபலமான தேர்வாக உள்ளது.
7) டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter):
டிவிஎஸ் ஜூபிடர் மின்சார ஸ்கூட்டர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு வசதியான சவாரி, விசாலமான ஃபுட்போர்டு மற்றும் பல்வேறு அம்சங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இது சந்தையில் ஒரு வலுவான போட்டியாளராகவும் அமையும். டிவிஎஸ்- ன் மின்சார ஸ்கூட்டர் ஓலா எலக்ட்ரிக் மற்றும் ஏத்தர் எனர்ஜி போன்ற நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருக்கும். டிவிஎஸ் ஜூபிடர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அக்டோபர் 28, 2025க்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பதற்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சில:
எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்பினால் அதன் விலை, சார்ஜ் செய்யும் நேரம் மற்றும் நமக்கு தேவையான அம்சங்களை கொண்டதாக உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது.
விரைவாக சார்ஜ் ஆகக்கூடிய ஸ்கூட்டரை தேர்ந்தெடுக்கலாம்.
ஒவ்வொரு ஸ்கூட்டருக்கும் ஒரு விலை உள்ளது. எனவே பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது அவசியம்.
ஸ்மார்ட் அம்சங்கள், பெரிய டிஸ்ப்ளே அல்லது வேறு ஏதேனும் அம்சங்கள் தேவைப்பட்டால் அதற்கேற்ப ஒரு ஸ்கூட்டரை தேர்ந்தெடுக்கவும்.
ஒவ்வொரு ஸ்கூட்டரின் சவாரி அனுபவமும் வேறுபட்டது. எனவே நமக்கு எது வசதியாக இருக்கும் என்பதை அறிந்து தேர்ந்தெடுப்பது முக்கியம்.
நம் தேவைகளை பூர்த்தி செய்யும் ஸ்கூட்டரை அதாவது நீண்ட தூரப் பயணம் அல்லது குறுகிய தூரப் பயணத்துக்கு ஏற்ற வண்டியை தேர்வு செய்வதுடன், வெவ்வேறு மாடல்களைப் பற்றி அறிந்து அவற்றை ஒப்பிட்டு பார்ப்பதும், டெஸ்ட் டிரைவ் எடுத்து பார்ப்பதும் பயனுள்ளதாக இருக்கும்.