
எதிர்மறைச் சிந்தனைகளை அறவே தவிர்த்து ஆக்கபூர்வமான சிந்தனைகளைத் தர உபரத்தினங்கள் வரிசையில் அருமையான கல் ஒன்று உண்டு.
அது தான் - ஃப்ளோரைட்! (Fluorite)
இதன் அருமை பற்றி பலருக்கும் தெரியாது. ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த கல் இது.
எல்லா நெகடிவ் எண்ணங்களையும் அகற்றி ஆக்கபூர்வமான சிந்தனைகளைத் தூண்டி, துடிதுடிப்பான அதிர்வலைகளை உடலிலும், நாம் வாழ்கின்ற சுற்றுப்புற சூழலிலும் ஏற்படுத்தும் கல் இது.
இது ஒரு மந்திரக் கல் என்றே இதன் அருமையை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
பலவித வண்ணங்களில் இது கிடைக்கிறது.
கால்ஸியம் ஃப்ளோரைட் என்ற இரசாயன தாது கொண்ட இதை ப்ளோராஸ்பார் (Fluorpar) என்றும் கூறுவதுண்டு.
'ஃப்ளோரைட்' என்ற வார்த்தை லத்தீன் மொழியில் உள்ள 'ஃப்ளூயர்' என்ற வார்த்தையிலிருந்து பிறந்த ஒன்று. இதன் அர்த்தம் 'பாய்வது' என்பதாகும்.
இதன் பளபளப்பும் வண்ணங்களும் அனைவரையும் வாங்கி அணியத் தூண்டும். மிக சுலபமாக இதை செதுக்கி ஆபரணங்களைச் செய்கின்றனர் ரத்தினக்கல் நிபுணர்கள்.
இதன் பளபளப்பும் வண்ணங்களும் அனைவரையும் வாங்கி அணியத் தூண்டும். மிக சுலபமாக இதை செதுக்கி ஆபரணங்களைச் செய்கின்றனர் ரத்தினக்கல் நிபுணர்கள்.
இதன் நன்மைகள்:
தன்னுள் மறைத்து வைத்திருக்கும் ஆற்றலால் இந்தக் கல்லானது மாற்று முறை மருத்துவத்தில் சிறந்து விளங்குவதோடு குழப்பமான மனத்தை அமைதியாக்கும் சிகிச்சைக்கும் உதவுகிறது.
ஒளிவட்டத்தை சீர்குலைக்காமல் பாதுகாக்க வல்லது இது.
ரெயின்போ ஃப்ளோரைட் என்ற வகைக் கல் மனதை நிலை நிறுத்துவதோடு ஆற்றலையும் துடிப்பையும் அதிகமாக்கி உள்ளுணர்வு ஆற்றலையும் தரும் சக்தி வாய்ந்தது.
ஒருமுனைப்பட்ட கவனம் இல்லையே என்று ஏங்குவோர் இதை அணிந்து பயன்பெறலாம்.
உடலில் வீக்கம் உள்ளவர்கள் இதை அணிந்தால் எந்த வித வீக்கமும் போய்விடும். அத்தோடு சளி பிடித்த ஜவ்வுப் படலத்தையும் இது சீராக்கி விடும்.
இது ஒரு புறமிருக்க அன்றாடப் பயன்பாட்டில் இது நூறு விதங்களில் மனிதர்களுக்கு உதவுகிறது.
பேட்டரிகளில் அதிக சக்திக்காக இதைப் பயன்படுத்துகின்றனர்.
ஃப்ளோரைட்டிலிருந்து கிடைக்கும் கூட்டுப்பொருள்களால் நீரைச் சுத்திகரித்து சுத்தமான நீரை சமூகத்திற்கு நகரசபைகளும் மாநகராட்சிகளும் தருகிறது.
பளபளப்பு எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் ஃப்ளோரைட்டும் உண்டு. கண்ணாடித் தயாரிப்பில் இது வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
பற்களில் பல் சிதையாமல் இருப்பதற்காக ஃப்ளோரைடிலிருந்து கிடைக்கும் மருத்துவப் பொருள்கள் ‘டெண்டல் ஃபில்லிங்கிற்காக’ (Dental Filling) உபயோகப்படுத்தப்படுகின்றன.
ஃப்ளோரைட் கிறிஸ்டல்கள் எக்ஸ்-ரே மற்றும் காமா-ரே கண்டுணர் கருவிகளில் (Detectors) பயன்படுத்தப்படுகிறது.
இப்படி பலவிதமாகப் பயன்படும் இந்த ஃப்ளோரைட் தென் ஆப்பிரிக்கா, சீனா, மெக்ஸிகோ, மங்கோலியா, பிரிட்டன், அமெரிக்கா, கனடா, டான்ஜானியா, ருவாண்டா, அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் கிடைக்கிறது.
ஃப்ளோரைடில் ப்ளூ ஜான் என்ற கல் உலகப் பிரசித்தி பெற்ற கல்லாகும்.
ஃப்ளோரைட் பற்றிய புகழ்பெற்ற பொன்மொழி இது: -
“ஒவ்வொரு சூரிய உதயத்திலும் நாங்கள் அதிக சக்தியையும் பளபளப்பையும் முந்தைய நாளைக் காட்டிலும் அதிகம் பெறுகிறோம்”
நல்ல ஒரு ஜெம்மாலஜிஸ்ட் உதவியோடு இது நல்ல ஃப்ளோரைட் கல் தானா என்பதை நிச்சயித்து தனக்கு இது உகந்தது தானா என்ற ஆலோசனையையும் பெற்று இதை வாங்கி அணிதல் வேண்டும்.