பி எம் டபிள்யூவின் ஸ்டைலான புதிய படைப்பு ‘BMW X3 30 xDrive M Sport Pro’!

சென்னை பி எம் டபிள்யூ குழும ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன எஸ்யூவி கார் வருகிற பிப்ரவரி 16 அன்று இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
BMW X3 30 xDrive M Sport Pro
BMW X3 30 xDrive M Sport Proimage credit-autocarindia.com
Published on

ஆடம்பர கார்களின் வகைகளில் ஒன்றான பி எம் டபிள்யூ (BMW - Bayerische Motoren Werke) உயர்தர சொகுசு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் உலகின் முன்னணி ஜெர்மன் நிறுவனமாகும். 1916-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், புதுமையான தொழில்நுட்பம், சிறந்த செயல்திறன் மற்றும் 'Sheer Driving Pleasure' என்பதற்குப் பெயர் பெற்றது. முதலில் விமான எஞ்சின் தயாரிப்பாளராகத் தொடங்கி, பின்னர் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்று விளங்கியது.

இந்தியாவில், குறிப்பாக சென்னையில் 2007-ம் ஆண்டு முதல் தனது ஆலையை தொடங்கிய, இந்நிறுவனம் சுமார் 92-93% கார்களை உள்ளூரிலேயே தயாரிக்கிறது.

அந்த வகையில் பிஎம்டபிள்யூ நிறுவனம் ‘எக்ஸ்3 30 எக்ஸ் டிரைவ் எம் ஸ்போர்ட்ஸ் புரோ’(BMW X3 30 xDrive M Sport Pro) காரை இந்தியச் சந்தையில் வரும் 16-ந் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த கார் 'ஐகானிக் க்ளோ' கிட்னி கிரில் போன்ற சிறப்பம்சங்களுடன், சென்னையில் உள்ள BMW குழும ஆலையில் தயாரிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட ஸ்டைலான மற்றும் சக்திவாய்ந்த சொகுசு SUV-ஆக வருகிறது. இது முந்தைய மாடல்களை விட அதிக சக்தி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வெளிவருகிறது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் சாதனை படைத்த Audi கார் விற்பனை!
BMW X3 30 xDrive M Sport Pro

இந்த காரில் 2 லிட்டர் டி.வி.என். டர்போ 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றிருக்கும். இது அதிகபட்சமாக 255 எச்.பி. பவரை வெளிப்படுத்தும். 48வி மைல்டு சிஸ்டம், 8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இது 6.3 நிமிடத்தில் 100 கி.மீ வேகத்தை எட்டும்.

கூர்மையான LED ஹெட்லைட்கள், மெலிதான பின்புறம், 1.8 மீட்டர் பனோரமா கண்ணாடி கூரை, 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரை, 12+ இன்ச் கன்சோல் டிஸ்ப்ளே மற்றும் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற சிறப்பு அம்சங்களும் இந்த காரில் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த எஸ்யூவி கார், M-ஸ்போர்ட் புரோ பேக்கேஜ் உடன் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட வெளிப்புற வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

8 ஏர்பேக்குகள், லெவல் 2 ADAS, 360-டிகிரி கேமரா ஆகிய பாதுகாப்பு வசதிகளை கொடுத்திருக்கிறது. யூரோ என்.கேப்(NCAP) பாதுகாப்பு தரச்சோதனையில் இந்த கார் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.

இந்த மதிப்பீடு, விபத்து மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு SUV உயர் மட்ட பாதுகாப்பை வழங்குகிறது என்பதைக் உறுதிபடுத்துகிறது.

தற்போது சந்தையில் உள்ள எக்ஸ்3 காரில் 2 வேரியண்ட்கள் உள்ளன. இதிலுள்ள என்ஜின் 197 எச்.பி. திறனை வெளிப்படுத்தக்கூடியது. எனவே, இதை விட திறன் மிகுந்ததாக புதிய கார் இருக்கும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சிறந்த வடிவமைப்பு, வசதி மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் கலவையாக, களம் இறங்கியுள்ள இந்த கார், Mercedes-Benz GLC, Audi Q5 மற்றும் Volvo XC60 போன்ற கார் மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இதையும் படியுங்கள்:
கார்களை மறுசுழற்சி செய்யும் BMW!
BMW X3 30 xDrive M Sport Pro

கடந்த ஜனவரி 30-ம்தேதி முதல் முன்பதிவு தொடங்கிய நிலையில் வரும் பிப்ரவரி 16-ம்தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. இதன் விலை தோராயமாக ரூ.87 லட்சம் (Ex-showroom) என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் https://www.bmw.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 30 எக்ஸ் டிரைவ் எம் ஸ்போர்ட்ஸ் புரோ காரை ஆன்லைனில் நேரடியாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ டீலர்ஷிப்கள் மூலமாகவோ முன்பதிவு செய்வதுடன் அதன் சிறப்பம்சங்களையும் பார்வையிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com