நண்பரின் காரை இரவல் வாங்கி ஓட்டுகிறீர்களா? விபத்து நடந்தால் இன்சூரன்ஸ் கிடைக்காது..!

Delhi High Court Verdict - இன்சூரன்ஸ் இழப்பீடு
Delhi High Court Verdict - இன்சூரன்ஸ் இழப்பீடுAI Image
Updated on

ருவர் தனது நண்பர் அல்லது உறவினரின் காரை இரவல் வாங்கிச் சென்று விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டாலோ அல்லது காயமடைந்தாலோ வாகன உரிமையாளரின் தனிப்பட்ட இன்சூரன்ஸ் மூலம் இன்சூரன்ஸ் இழப்பீடு கோர முடியாது என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் படி, ஒருவர் தனது நண்பர் அல்லது உறவினரிடமிருந்து இரவலாகப் பெற்ற காரில் பயணம் செய்து விபத்தில் சிக்கும்போது, காரின் உரிமையாளரின் தனிப்பட்ட இன்சூரன்ஸ் பாலிசியின் மூலம் இழப்பீடு கோர முடியாது. காரை இரவலாகப் பயன்படுத்தியவரை மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒரு மூன்றாம் நபர் (third party) என்று கருதமுடியாது.

எனவே விபத்தில் சிக்கியவர் அல்லது அவரின் குடும்பத்தினர் அந்த வாகனத்தின் உரிமையாளரின் பாலிசியை நம்பி நுகர்வோர் நீதிமன்றத்திலோ அல்லது விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்திலோ இழப்பீட்டை கோர முடியாது. இந்த சூழலில் ஒப்பந்தம் சார்ந்த இழப்பீட்டு வழக்குகளை மட்டுமே சிவில் நீதிமன்றத்தில் தொடர முடியும்.

இருப்பினும் காரின் உரிமையாளரின் பாலிசியில் தனிநபர் விபத்துக் காப்பீடு (Personal Accident Cover) அல்லது ஓட்டுநருக்கான கூடுதல் காப்பீடு (Unnamed Passenger / Driver Cover) போன்ற பிரத்யேக இணைப்புகள் இருந்தால் மட்டுமே, குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் மருத்துவச் செலவுகள் அல்லது இதர இழப்பீடுகளைப் பெற வாய்ப்புள்ளது.

வாகன உரிமையாளரின் தனிப்பட்ட இன்சூரன்ஸ் பாலிசி என்பது, அந்த குறிப்பிட்ட உரிமையாளருக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கும் ஒப்பந்தமாகும். எனவே காரை இரவல் வாங்கி ஓட்டியவருக்கு விபத்து நேர்ந்தால் காப்பீட்டு நிறுவனம் அதற்கு பொறுப்பேற்காது. விபத்தின் பொழுது காரின் உரிமையாளர் வண்டியில் இருந்தால் மட்டுமே ஓட்டுநருக்கு இன்சூரன்ஸ் செல்லுபடியாகும். அவர் இல்லையென்றால் இழப்பீடு கிடைக்காது.

அதாவது காரின் உரிமையாளர் அந்த சமயத்தில் காரில் இல்லாமல் இருந்தால் அந்த தனியார் வண்டி வாடகைக்கு விடப்பட்டதாத்தான் சட்டம் சொல்லும். வண்டி ஓனர் வண்டியில் இருந்தால் மட்டுமே கண்டிப்பாக க்ளைம் பண்ண முடியும். மோட்டார் வாகனச் சட்டம் (161-ன்) கீழ், சாலை விபத்துகளில் ஏற்படும் நிலையான இழப்பீடுகளை மட்டுமே அரசிடம் கோர முடியும்.

மேலும் இதுபோன்ற விவகாரங்களை நுகர்வோர் நீதிமன்றம் அல்லது சிவில் நீதிமன்றத்தில் மட்டுமே கோர வேண்டுமே தவிர, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் (MACT) கோர முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Delhi High Court Verdict - இன்சூரன்ஸ் இழப்பீடு
Delhi High Court Verdict - இன்சூரன்ஸ் இழப்பீடுAI Image

சமீபத்தில் உதே சிங் என்பவர் தன் தந்தையுடைய இன்னோவா காரை ஓட்டிச் சென்ற பொழுது வேகமாக வந்த லாரி ஒன்று மோதியதால் விபத்துக்கு உள்ளானார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உதே சிங்கின் தாய் சிம்பல் சிங் தனது மகன் காரில் பயணித்தவர் என்பதால், அந்த காரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தார்.

இது ஒப்பந்தம் சார்ந்த விவகாரம் என்பதால் தங்களுக்கு அதிகார வரம்பு இல்லை என்று கூறி, அந்த மனுவை MACT தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனீஷ் தயாள் கூறியது - மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 166-ன் கீழ் இழப்பீடு கோருவதற்கு, மற்றொருவர் செய்த அலட்சியத்தையோ அல்லது தவறையோ நிரூபிக்க வேண்டும். விபத்தை ஏற்படுத்திய லாரி கண்டுபிடிக்காத நிலையில், காரை ஓட்டிய உதே சிங்கின் அலட்சியத்தை மட்டுமே ஆராய முடியும் என்றும், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் தனிப்பட்ட விபத்து காப்பீடு என்பது ஒரு ஒப்பந்தம் சார்ந்த பலனே தவிர மோட்டார் வாகனச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான கடமை அல்ல என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

ஒருவர் காரை இரவல் பெற்றதற்காக அவரை 'மூன்றாம் நபர் '(third party) என்று கருத முடியாது. மேலும் இது போன்ற ஒப்பந்தம் சார்ந்த இழப்பீட்டு விவகாரங்களை நுகர்வோர் நீதிமன்றம் அல்லது சிவில் நீதிமன்றத்தில் மட்டுமே கோர வேண்டுமே தவிர, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் (MACT) கோர முடியாது என்று கூறி, உயர்நீதிமன்றம் இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இதையும் படியுங்கள்:
ரூ.5,000 சரிவு.! இனி பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் தங்கம் வாங்கலாம்.!
Delhi High Court Verdict - இன்சூரன்ஸ் இழப்பீடு

இந்தத் தீர்ப்பின் பின்னணியைப் புரிந்துகொள்வதன் மூலம், அவசரத் தேவைகளுக்காக மற்றவர்களின் வாகனங்களைப் பயன்படுத்தும் போது ஏற்படும் சட்டரீதியான சிக்கல்களை நீங்கள் முன்கூட்டியே தவிர்க்கலாம். மேலும், விபத்துக் காலங்களில் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிராகரிப்புகளைத்தாண்டி, உங்களுக்கான சரியான இழப்பீட்டுப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் தெளிவைப் பெறமுடியும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com