ரூ.5,000 சரிவு.! இனி பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் தங்கம் வாங்கலாம்.!

தங்கம் விலை நிலவரம்
Gold And Silver
Updated on

தங்கத்தின் விலை இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து 4 நட்களாக சரிவை சந்தித்தது. இதனையடுத்து ஜூலை 9-ம் தேதியன்று மாலையில் திடீரென தங்கத்தின் விலை உயர்ந்தது. நேற்றும் (ஜூலை 10) தங்கத்தின் விலை சிறிய அளவில் உயர்ந்தது.

வார இறுதியில் விலை உயர்ந்தாலும், இந்த வாரத்தில் இதுவரை தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.350 மற்றும் சவரனுக்கு ரூ.2,800 வரை குறைந்துள்ளது. அதேபோல் இந்த வாரத்தில் வெள்ளியின் விலை ரூ.15 வரை குறைந்துள்ளது.

இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,06,800-க்கும், ஒரு கிராம் ரூ.13,350-க்கும் விற்பனையானது. 1 கிராம் வெள்ளி ரூ.245-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையானது.

இதையும் படியுங்கள்:
30 நாளில் 120 பேர்! அதிரடி வேட்டையில் சிங்கப்பெண்கள்!
தங்கம் விலை நிலவரம்

நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 11) தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து, ரூ.1,06,400-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.13,300-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது.

2025-ம் ஆண்டு இதே ஜூலை 11-ல் 1 சவரன் தங்கம் ரூ.72,600-க்கும், 1 கிராம் ரூ.9,075-க்கும் விற்பனையானது. இன்றைய விலையோடு இதனை ஒப்பிட்டால், ஓரே ஆண்டில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 50% உயர்ந்துள்ளது.

2025 ஜூலை 11-ல் 1 கிராம் வெள்ளி ரூ.121-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், ஓரே ஆண்டில் வெள்ளியின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

இந்த அபரிமிதமான விலை உயர்வால் தான் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர்.

Gold and Silver Price
Gold & Silver

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 10: 1 கிராம் - ரூ.13,350 1 சவரன் ரூ.1,06,800

ஜூலை 09: 1 கிராம் - ரூ.13,320 1 சவரன் ரூ.1,06,560

ஜூலை 08: 1 கிராம் - ரூ.13,250 1 சவரன் ரூ.1,06,000

ஜூலை 07: 1 கிராம் - ரூ.13,400 1 சவரன் ரூ.1,07,200

ஜூலை 06: 1 கிராம் - ரூ.13,560 1 சவரன் ரூ.1,08,480

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 10: 1 கிராம் - ரூ.245

ஜூலை 09: 1 கிராம் - ரூ.245

ஜூலை 08: 1 கிராம் - ரூ.245

ஜூலை 07: 1 கிராம் - ரூ.250

ஜூலை 06: 1 கிராம் - ரூ.250

தங்கத்தின் விலை உயர்வு ஒருபுறம் இருந்தாலும், இப்போதும் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஏனெனில் கடந்த ஆண்டு தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 50% லாபமும், வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு 100% லாபமும் கிடைத்துள்ளது.

மேலும் அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கியுள்ளதால், தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
வேலை மாறினாலும் இனி கவலை வேண்டாம்! ஊழியர்களுக்கு சூப்பரான பென்ஷன் அப்டேட்!
தங்கம் விலை நிலவரம்
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com