வங்கி விரிக்கும் வலையில் விழாதீர்கள்! இந்த 5 'சீக்ரெட் கிரெடிட் கார்ட் ட்ரிக்ஸ்' உங்களை காப்பாற்றும்!

நம் செலவு செய்யும் பழக்கத்திற்கு ஏற்ற கிரெடிட் கார்டுகளை தேர்வு செய்து கொள்வது நல்லது.
Smart ways to use a credit card
credit cardimg credit - wasatchpeaks.com
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

கிரெடிட் கார்டு என்பது ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தால் வழங்கப்படும் பிளாஸ்டிக் அல்லது உலோக அட்டையாகும். இது ஒரு பயனர், முன் வரையறுக்கப்பட்ட ஒரு கடன் வரம்பு வரை கடன் வாங்குவதற்கு அனுமதிக்கிறது. இந்த கடன் அட்டை என்பது நுகர்வோரை மையப்படுத்திய தற்போதைய உலகத்தில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படக்கூடியது.

கிரெடிட் கார்டு ட்ரிக்ஸ் என்பது வட்டி கட்டாமல் அதிக நாட்கள் அவகாசம் பெறுவது, பாயிண்ட்ஸ் பெறுவது, கிரெடிட் ஸ்கோர் போன்றவற்றிற்காக புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதாகும்.

வட்டி இல்லாத நாட்களை பெருக்குதல்:

பில் வந்த பிறகு, அடுத்த பில்லுக்கு முன்பாக பொருட்களை வாங்குவதன் மூலம் 45 நாட்களுக்கு மேல் வட்டி இல்லாமல் பயன்படுத்தலாம். சம்பளம் வரும் தேதிக்கு ஏற்ப பில்லிங் தேதியை மாற்றிக் கொள்வதன் மூலம் வட்டி இல்லா கடன் காலத்தை (interest-free period) 45-50 நாட்கள் வரை பயன்படுத்த முடியும்.

இதையும் படியுங்கள்:
கிரெடிட் கார்டு பில் கட்டுறது கஷ்டமா இருக்கா? இந்த 5 ரகசிய ட்ரிக்ஸ் போதும், இனி பில் கட்டுவது ஈஸி!
Smart ways to use a credit card

கிரெடிட் பயன்பாட்டை குறைத்தல்:

மொத்த கடன் வரம்பில் 30%க்கும் குறைவாகவே பயன்படுத்துவது, CIBIL ஸ்கோரை மேம்படுத்த உதவும்.

முழுப் பணத்தையும் செலுத்துதல்:

வட்டி மற்றும் அபராதங்களைத் தவிர்க்க ஒவ்வொரு மாதமும் முழு பணத்தையும் குறித்த தேதிக்குள் செலுத்தி விடுவது நல்லது. தாமதக் கட்டணத்தை தவிர்ப்பதற்கு வங்கி கணக்கிலிருந்து தானாகவே பணம் செலுத்தும் ஆட்டோ-பே(Auto-pay) வசதியை செயல்படுத்தலாம்.

பயணங்களுக்குப் புள்ளிகளை பயன்படுத்துதல்:

வெகுமதி புள்ளிகளைப் பயணச் செலவுகளுக்கு பயன்படுத்துவது அதிக மதிப்பைத் தரும்.

ரிவார்டு பாயிண்ட்ஸ் மேலாண்மை:

நம் செலவு செய்யும் பழக்கத்திற்கு ஏற்ற கார்டுகளை (உதாரணமாக பெட்ரோல், ஆன்லைன் ஷாப்பிங் அல்லது பயணம்) தேர்வு செய்வது நல்லது. 2026ல் பல வங்கிகள் குறிப்பிட்ட பிராண்டுகளுடன் இணைந்து அதிக கேஷ்பேக் வழங்குகின்றன.

Rupay கார்டுகளைப் பயன்படுத்துதல்: UPI மூலம் பணம் செலுத்த Rupay கிரெடிட் கார்டுகள் மிகவும் பயனுள்ளவை. இது வெகுமதிப் புள்ளிகளைப் பெற உதவும்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை:

அதிக வெகுமதி புள்ளிகளுக்காக தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டாம்.

EMI சலுகைகள் கவர்ச்சியாகத் தோன்றினாலும், அதிக செலவு செய்யத் தூண்டலாம். எனவே இதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

பில்களைப் பிரித்துப் பார்ப்பதன் மூலம் செலவுகளை கண்காணிக்கலாம்.

வங்கிகள் பயன்படுத்தும் தந்திரங்களில் கவனமாக இருப்பது நல்லது. கடன் வரம்பு அதிகரிப்பு என்பது ஸ்கோரை மேம்படுத்த உதவுவது போல் தோன்றினாலும் அதிக செலவு செய்ய வழிவகுக்கும். எனவே இதில் கவனம் தேவை.

அதேபோல் கவர்ச்சியான சலுகைகள், இலவச விளம்பரங்கள் மற்றும் தள்ளுபடிகள் அதிக செலவு செய்யத் தூண்டும்.

இதையும் படியுங்கள்:
கிரெடிட் கார்டு என்னும் குதிரை: கடிவாளம் நம் கையில்!
Smart ways to use a credit card

கிரெடிட் கார்டை ஒரு கடன் கருவியாகப் பார்க்காமல், வசதிக்காக பயன்படுத்த வேண்டும். அதேசமயம் தேவைக்கு அதிகமாக பயன்படுத்தக் கூடாது என்பதை முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com