ITR தாக்கல் செய்யத் தவறி விட்டீர்களா? டிசம்பர் 31-க்குள் செய்யவேண்டியது என்ன?

தாமதமான வருமான வரித்தாக்கல்: அபராதக் கட்டணம் மற்றும் முக்கிய வழிமுறைகள்.
வருமான வரி
வருமான வரி
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆண்டுதோறும் ஜூலை 31 கடைசி நாளாக அறிவிக்கப்படும். தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் சமயத்தில் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும். ஒருவேளை குறித்த அவகாசத்திற்குள் வருமான வரிக் கணக்கை சமர்ப்பிக்காமல் போனால், அது உங்களுக்குத் தான் இழப்பை ஏற்படுத்தும்.

நடப்பாண்டு வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறியவர்களுக்கு கடைசி வாய்ப்பாக, 139(4) என்ற விதியின் கீழ் தாமதக் கட்டணத்துடன் டிசம்பர் 31-ககுள் தாககல் செய்யலாம்.

டிசம்பர் 31-க்குள் செய்ய வேண்டியவை: மத்திய அரசின் வருமான வரித்துறை இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் சென்று விதி 139(4) என்பதன் கீழ், வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே நிலுவையில் உள்ள வரி, வட்டி மற்றும் சடட்ப் பிரிவு 234F இன் கீழ் பொருந்தும் தாமதக் கட்டணத்தைச் செலுத்திய பிறகே படிவத்தை சமர்ப்பிக்க முடியும்.

(ITR) தாக்கல் செய்த அடுத்த 30 நாட்களுக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் OTP அல்லது நெட் பேங்கிங் மூலம் மின் சரிபார்ப்பு செய்ய வேண்டும்.

வருமான வரி - ITR FILE
ITR FILE - வருமான வரி
இதையும் படியுங்கள்:
இனி இதற்கெல்லாம் பான் கார்டு கட்டாயம்.! வெளியானது வருமான வரி புது விதிகள்.!
வருமான வரி

தாமதக் கட்டணம் எவ்வளவு?

* வருமான வரிச் சட்டப் பிரிவு 234F இன் கீழ் வருமான வரிக் கணக்கைத் தாமதமாக சமர்ப்பிக்கும்போது தாமதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உங்களின் ஆண்டு வருமானத்திற்கு ஏற்ப தாமதக் கட்டணம் வேறுபடும்.

* உங்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை இருந்தால், அடிப்படை விலக்கு வரம்பு அளிக்கப்படும். இதனால் இந்த வருமான வரம்புக்கு தாமதக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

* ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருந்தால் ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்தவேண்டும். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் ரூ. 5,000 தாமதக் கட்டணம் செலுத்தவேண்டும்.

கூடுதல் வட்டி:

* வரி நிலுவைத் தொகை ஏதேனும் செலுத்த வேண்டியிருந்தால், ஜூலை 31-க்கு பிறகு ஒவ்வொரு மாத கால தாமதத்திற்கும் நிலுவை வரித் தொகையில் ஒவ்வொரு மாதத்திற்கு 1% வட்டி வசூலிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
​இல்லத்தரசிகளே குஷியாகுங்க! தங்கம் விலை அதிரடி சரிவு.! இன்றைய விலை நிலவரம் இதோ.!
வருமான வரி

டிசம்பர் 31-க்குள் தாக்கல் செய்யாவிட்டால் என்ன ஆகும்?

ஜூலை 31 மற்றும் டிசம்பர் 31 ஆகிய 2 தேதிக்குள்ளும் வருமான வரித் தாக்கலை செயயாவிட்டால் Belated Return வசதியை இழக்க நேரிடும். ஆகையால் டிசம்பர் 31-க்குப் பின் சாதாரண Belated Return தாக்கல் செய்ய முடியாது.

ITR-U (Updated Return மட்டுமே சமர்ப்பிக்க முடியும். டிசம்பர் 31-க்குப் பிறகு கூடுதல் அபராத வரியுடன் மட்டுமே ‘Updated Return’ (ITR-U) மூலம் கணக்கு காட்ட முடியும். இம்முறையில் 25% முதல் 30% வரை அபராதத் தொகை உயரக்கூடும்.

வணிக நஷ்டங்கள் அல்லது முதலீட்டு நஷ்டங்களை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது. ஆகவே, அபராதத் தொகை மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்க வேண்டுமானால் உடனே வருமான வரித் தாக்கலை செய்துவிடுங்கள். கால அவகாசத்திற்குள் வரித் தாக்கலை சமர்ப்பிபபது, நிதியிழப்பைத் தடுப்பதோடு தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்க முடியும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.