

இன்று (நவம்பர் 10) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.360 குறைந்து ரூ.1,05,680-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.205-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலையில் ஒரு நிலைத்தன்மை இல்லாமல் ஏற்றமும், இறக்கமும் மாறி மாறி நிகழ்கிறது. தங்கத்தின் விலை இறங்கும் போது மகிழ்ச்சியாகவும், உயரும் போது கவலையாகவும் இருப்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாகி விட்டன. கடந்த வாரம் தங்கம் விலை உயர்வை சந்தித்து வந்த போதிலும், வார இறுதியில் ஓரளவு குறைந்தது.
தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு, இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. பண்டிகை நேரத்தில் விலை சரியும் என எதிர்பார்த்த மக்களுக்கு இந்த விலை உயர்வு அதிர்ச்சி தான். இருப்பினும் அடுத்து வரும் நாட்களில் விலை குறையும் என்ற நம்பிக்கையில் இல்லத்தரசிகள் காத்திருக்கின்றனர்.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்:
நேற்று (நவம்பர் 9) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.95 உயர்ந்து ரூ.13,255-க்கும், ஒரு சவரன் ரூ.760 உயர்ந்து ரூ.1,06,040-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலையும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.205-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 10) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 குறைந்து ரூ.13,210-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.360 குறைந்து, ரூ.1,05,680-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.205-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,05,000-க்கும் விற்பனையாகிறது.
நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
நடப்பாண்டின் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த தங்கம் விலை, சர்வதேச பொருளாதாரம் மற்றும் உள்நாட்டு நிலவரங்களால் சரிந்து வருகிறது. உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின் படி, 2026 ஜனவரி மாத உச்சபட்ச விலையில் இருந்து தங்கம் விலை 25% வரை சரிந்துள்ளது. வெள்ளி விலை அதன் உச்சபட்ச விலையில் இருந்து 50%-க்கும் மேல் குறைந்துள்ளது.
உலக நாடுகளில் உள்ள வங்கிகளின் தங்கம் வாங்கும் ஆர்வம் மற்றும் பண்டிகை காலத் தேவையால் தங்கத்திற்கு இப்போதும் மவுசு கூடியுள்ளது. இதனால் விலை உயரும் என்ற கணிப்புகள் வந்தாலும், விலை குறையும் என்ற கணிப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு வலுப்பெற்று வரும் சூழலில், தங்க முதலீடுகள் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
நடப்பாண்டு இறுதிக்குள் தங்கம் விலை மேலும் குறைந்தால், தங்க விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் விற்பனை அதிகரிக்கும் போது விலை உயரவும் வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.