அமெரிக்கா, சீனாவுக்கே டஃப் கொடுக்கும் இந்தியா: பொருளாதார வளர்ச்சியின் 5 முக்கிய தூண்கள்!

Economic development
Economic development
Published on

ரு நாடு வளர்ச்சி அடைந்த நாடாக கருதப்பட வேண்டும் என்றால் அந்த நாட்டின் பொருளாதாரம் சிறந்த நிலையில் இருக்கவேண்டும். அதற்கேற்ப நம் இந்திய பொருளாதாரம் இன்று உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அப்படி இந்தியா பொருளாதார ரீதியாக சிறந்து விளங்கு வதற்கான முக்கிய காரணங்களை (Reasons for India's Economic Strength) விரிவாக இப்பகுதியில் காண்போம்.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம்:

இந்தியா தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) ஜெர்மனி மற்றும் ஜப்பானுக்கு போட்டியாக உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. 2030-க்குள் இது மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இளைய தலைமுறை ஆற்றல் (Demographic dividend) :

இந்தியாவின் மிகப்பெரிய பலம் அதன் மக்கள் தொகை. இந்தியாவில் சராசரி வயது 28. உழைக்கும் வயதில் உள்ள இளைஞர்கள் அதிகம் இருப்பதால் உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகிய இரண்டுமே இந்தியாவில் அதிகமாக உள்ளது. இது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கிறது.

டிஜிட்டல் புரட்சி (Digital Revolution):

இந்தியா டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது.

மலிவான இணையம்:

குறைந்த விலையில் டேட்டா கிடைப்பதால் கிராமப்புறங்கள் வரை ஆன்லைன் வர்த்தகம் மற்றும் கல்வி சென்றடைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆதரவற்ற முதியோர்களுக்கு மத்திய-மாநில அரசுகளின் நிதியுதவி! தகுதிகளும் விண்ணப்பிக்கும் முறைகளும்!
Economic development

ஆளுகை:

அரசின் சலுகைகள் நேரடியாக மக்களின் வங்கி கணக்கிற்கு செல்வது (DBT) ஊழலைக் குறைத்து பொருளாதாரத்தைச் சீராக்கியுள்ளது.

உள்நாட்டு நுகர்வு (Domestic Consumption)

இந்தியப் பொருளாதாரம் ஏற்றுமதியை மட்டும் நம்பி இல்லை. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் உள்நாட்டிலேயே பொருட்களுக்கான தேவை (Demand) அதிகமாக இருப்பதால் உலகப் பொருளாதாரம் மந்த நிலை ஏற்பட்டாலும் இந்தியா ஓரளவிற்குத் தப்பித்து விடுகிறது.

உள்கட்ட அமைப்பு வளர்ச்சி (Infrastructure Growth):

அதிவேக நெடுஞ்சாலைகள், வந்தே பாரத் ரயில்கள், புதிய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றில் அரசு அதிக முதலீடு செய்து வருகிறது. இது சரக்கு போக்குவரத்தை எளிதாக்கி வணிகத்தை வேகப்படுத்துகிறது.

சேவை மற்றும் தொழில்நுட்பத்துறை (Service &IT Sector):

உலகின் 'Back Office' என்று இந்தியா அழைக்கப்படுகிறது. மென்பொருள் ஏற்றுமதி (Software Export) மற்றும் சேவை துறையில் இந்தியா உலகத் தரம் வாய்ந்த வல்லமை பெற்றுள்ளது.

சவால்கள் (Challenges):

இந்தியா சிறப்பாக வளர்ந்தாலும் சில சவால்களையும் நாம் கவனிக்கவேண்டும்.

வேலைவாய்ப்பின்மை:

பெருகிவரும் இளைஞர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மிரட்டலான வேகம்... இந்திய சந்தையில் இன்று அறிமுகம்... 'Audi SQ8' சொகுசு கார்!
Economic development

வருமான ஏற்றத்தாழ்வு:

ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க வேண்டும்.

விவசாயம்:

இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் விவசாயத்தை நம்பியுள்ளனர். அத்துறையில் நவீன மாற்றங்கள் தேவை.

இப்படி இந்தியா "உற்பத்தி மையமாக" (Make in India) மாறி வருவதால், வரும் காலங்களில் உலகப் பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com