மிரட்டலான வேகம்... இந்திய சந்தையில் இன்று அறிமுகம்... 'Audi SQ8' சொகுசு கார்!

ஆடி நிறுவனம், தனது புதிய ஆடி எஸ்.கியூ.8 (Audi SQ8), எஸ்.யு.வி மாடலை இந்திய சந்தையில் இன்று (மார்ச் 17-ம்தேதி) அறிமுகப்படுத்த உள்ளது.
Audi SQ8 launched today
Audi SQ8image credit-cardekho.com
Published on

ஆடி (Audi)என்பது ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம், சொகுசு கார் சந்தையில் உலகளவில் முன்னணியில் உள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு, இந்தியாவில் பிரீமியம் கார்களை விற்பனை செய்து வருகிறது. ஆடி லோகோவில் உள்ள நான்கு மோதிரங்கள், ஆடி நிறுவனத்தின் முன்னோடி நிறுவனங்களான ஆட்டோ யூனியனை உருவாக்கிய நான்கு கார் நிறுவனங்களை குறிக்கின்றன.

அதிநவீன தொழில்நுட்பம் (Vorsprung durch Technik), சொகுசு வசதிகள், நவீன மற்றும் நுணுக்கமான வடிவமைப்பு, சக்தி வாய்ந்த Quattro ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம், வலிமையான இன்ஜின் செயல்திறன் மற்றும் நேர்த்தியான ஜெர்மன் வடிவமைப்பு போன்ற அம்சங்களுக்காக ஆடி கார்கள் உலகளவில் பெயர் பெற்றது. ஆடம்பர கார் நிறுவனமான ஆடி, உயர்தர இன்டீரியர், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அதிவேக செயல்திறன் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கிறது.

இந்நிலையில் ஆடி நிறுவனம், தனது புதிய ஆடி எஸ்.கியூ.8 (Audi SQ8), எஸ்.யு.வி மாடலை இந்திய சந்தையில் இன்று (மார்ச் 17-ம்தேதி) அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆடி இந்திய நிறுவனத்தின் கார்கள் வரிசையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள கியூ8 மற்றும் ஆர்.எஸ்.கியூ8 மாடல்களுக்கு இடைப்பட்ட பதிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் ‘ஆடி கியூ 3’ காரின் அசத்தலான அம்சங்கள்...
Audi SQ8 launched today

எஸ்.கியூ.8 மாடலில், ஆர்.எஸ்.கியூ8-ல் பயன்படுத்தப்படும் 4.0 லிட்டர் ட்வின்-டர்போ சார்ஜ்டு வி8 என்ஜின், 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் குவாட்ரோ (quattro) ஆல்-வீல் டிரைவ் வசதியுடன் 4.1 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் தன்மை கொண்டது. மேலும் குவாட்ரோ ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தின் வாயிலாக என்ஜினின் ஆற்றல் காரின் நான்கு சக்கரங்களுக்கும் செல்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 507 bhp பவரையும், 770 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும்.

ஸ்டாண்டர்டு பதிப்பில் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும். இது 349 எச்.பி பவரையும், 500 என்.எம்.டார்க்கையும் வழங்கும்.

8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இதில் இடம் பெற்றுள்ளது. கூபே எஸ்.வு.வி.வடிவமைப்பில் உருவாகியுள்ள இந்த மாடலில் ஹனி-கோம் வடிவ கிரில், மாற்றியமைப்பட்ட ஹெட்லாம்ப் மற்றும் பம்பர் வடிவமைப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

காருக்கு உள்ளே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு 12.3 இன்ச்சில் இரட்டை ஸ்க்ரீன் செட்-அப் உள்ளிட்டவை டாஷ்போர்டில் வழங்கப்பட்டுள்ளன. உட்புற கேபின் முழுவதும் அல்காண்ட்ரா மற்றும் லெதரால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் காரின் உள் அமைப்பில் பெரிய கண்ணாடியுடன், பிரிமியம் கேபின், அட்ஜஸ்டபிள் இருக்கைகள், சிக்னேச்சர் S எக்ஸ்டீரியர், பிரிமியம் கேபின், 12.3 இன்ச் தொடுதிரை, குவாட் எக்ஸாஸ்ட் டிப்ஸ், பனோரமிக் சன்ரூப், 22-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் HD மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் 48-வோல்ட் மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் Quattro ஆல்-வீல்-டிரைவ் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது.

மேலும், ஆடியின் எஸ் ஸ்போர்ட்டின் மூலம் சிவப்பு நிற பிரேக் காலிபர்கள் மற்றும் கார் ஒருபக்கமாக சாய்வதை தடுக்கும் வசதி ஆகியவற்றையும் புதிய எஸ்க்யூ8 பெற்றுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களாக ஏர்பேக், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்டரோல், டிராக் ஷன் கண்டரோல், பார்க் அசிஸ்ட், 360-டிகிரி கேமரா, முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், டயர் காற்றழுத்த கண்காணிப்பு அமைப்பு உள்பட பல வசதிகள் இடம்பெறும்.

சொகுசு வசதிகளுடன் கூடிய ஸ்போர்ட்டி டிசைனை விரும்புவோருக்காக Audi SQ8 பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆடியின் முதலாவது டார்க்கெட் குறிப்பாக பெரும் பணக்காரர்களுக்குத்தான். ஏனெனில், ஏற்கனவே விற்பனையில் உள்ள க்யூ8 காரின் விலை ரூ.1.13 கோடியாக இருக்கும் பட்சத்தில், இந்த காரின் விலை எப்படியிருந்தாலும் ரூ.1.5 கோடிக்கு அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இனி எலக்ட்ரிக் கார் சர்வீஸ் வீட்டுக்கே வரும்.! மஹிந்திராவின் புதிய சேவை.!
Audi SQ8 launched today

இந்த புதிய Audi SQ8 காரை வாங்குவதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் MyAudi செயலி மற்றும் இணையதளத்தில் ரூ.5 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com