வீட்டுக் கடனை அடைக்க EPF பணத்தை எடுப்பது புத்திசாலித்தனமா? இழப்பைத் தடுக்கும் ரகசியம்!

EPF withdrawal - கூட்டு வட்டி
EPF withdrawal - கூட்டு வட்டிAI Image
Updated on

எந்த ஒரு கூட்டு வட்டி திட்டத்திலும் நடுவில் பணத்தை எடுத்து கடனை அடைப்பது தவறான விஷயம்.‌ அது தங்க முட்டையிடும் வாத்தை வெட்டுவதற்கு சமமானது.

உதாரணமாக, கூட்டு வட்டி திட்டமான தொழிலாளர் சேமநல நிதியைப் பயன்படுத்தி வீட்டுக் கடனை அடைப்பது சரியான தீர்வு அல்ல. அது தவறான தீர்வு.

அதனைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்:

EPF (Employees' Provident Fund) அதாவது தொழிலாளர் சேம நல நிதி என்பது தங்க முட்டையிடும் வாத்தினைப் போன்றது. அதில் நடுவில் எடுப்பதென்பது, தங்க முட்டையிடும் வாத்தினை வெட்டுவதற்கு சமமானது. அது ஒரு அருமையான கூட்டு வட்டித்திட்டம். அதில் நடுவில் எடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏனென்றால், அது ஒருவரது ஓய்வுகாலத்திற்கானது.

தொழிலாளர் சேமநல நிதியை நடுவில் எடுப்பது, நடுவில் எடுக்காமலிருப்பது - ஒரு ஒப்பீடு;

உதாரணமாக, 18 வயதுடைய ஒருவர் வருடம் 30 ஆயிரம் ரூபாய் தொழிலாளர் சேம நல நிதியில் முதலீடு செய்வதாக கணக்கில் கொள்வோம். அவர் 18 ஆவது வயது முதல் 60 ஆவது வயது வரை, தொடர்ந்து முதலீடு செய்கிறார் எனக் கொள்வோம். அவரது முதலீடு வருடா வருடம் 5% அதிகரிப்பதாக கணக்கில் கொள்வோம். வருடா வருடம் கூட்டு வட்டி 8% எனக்கொள்வோம்.

அவரது 60 ஆவது வயதில், அவரது தொழிலாளர் சேம நல நிதி, ₹ 1,76,34,204.28/- (1 கோடியே 76 இலட்சத்து 34 ஆயிரத்து 204 ரூபாய்) என பெருகியிருக்கும். இதில் முக்கியமான அம்சம், இது முழுவதும் வரி இன்றி, சுளையாக கையில் கிடைக்கும்.

EPF withdrawal - கூட்டு வட்டி
EPF withdrawal - கூட்டு வட்டிAI Image

இதற்கு மாறாக, அவர் தனது 40 ஆவது வயதில் 75% பணத்தை (அதிகபட்சம் 75% எடுக்க முடியும்) வீட்டுக் கடனைக்கட்ட பயன்படுத்தி இருந்தால், அவரது பணம் எப்படி வளர்ந்திருக்குமெனப் பார்ப்போம்.

அவர் தனது 40 ஆவது வயதில் கிட்டத்தட்ட 25 இலட்சத்தை பகுதியாக வீட்டுக் கடனை அடைக்கப் பயன்படுத்தி விடுகிறார். மீதமுள்ள பணம் கூட்டு வட்டியில் வளர்கிறது. அவரது 60 ஆவது வயதில் கிட்டத்தட்ட 56 இலட்ச ரூபாயாக வளர்கிறது.

நடுவில் எடுத்த காரணத்தினால், மொத்தமாக வளர்ந்த பணம் = 25 இலட்சம் + 56 இலட்சம் = 81 இலட்சம்.

நடுவில் எடுக்காத காரணத்தினால், மொத்தமாக வளர்ந்த பணம் = ₹ 1,76,34,204.28 ( 1 கோடியே 76 இலட்சத்து 34 ஆயிரத்து 204 ரூபாய்).

எனவே, தொழிலாளர் சேம நல நிதியை நடுவில் எடுத்த காரணத்தினால், கிட்டத்தட்ட 1 கோடி ரூபாயினை அவரது ஓய்வு காலத்தின் சேமிப்பில் இழக்கிறார்.

எனவே, இத்தகைய கூட்டு வட்டித் திட்டங்களில் நடுவே பணத்தை எடுப்பதென்பது தங்க முட்டையிடும் வாத்தினை வெட்டுவதற்கு சமமானது. வீட்டுக் கடனை சீக்கிரமாக அடைக்க மற்ற முகாந்திரங்களை யோசிக்க வெண்டும். உதாரணமாக, பகுதி நேரத்தில் மற்றொரு வேலைக்கு போவது, அலுவலகத்தில் ஊதிய உயர்வு பெறுவது, வீட்டிலுள்ள அவசியமற்ற சாமான்களை விற்பது, மனைவியும் வேலைக்கு போவது, சிக்கனமாக வாழ்க்கை நடத்தி பணத்தைச் சேமிப்பது போன்றவை.

இதையும் படியுங்கள்:
சொந்த வீடு கனவை நனவாக்கும் PMAY திட்டம்: நீங்களும் விண்ணப்பித்து பயன்பெறுவது எப்படி?
EPF withdrawal - கூட்டு வட்டி

இது தொழிலாளர் சேம நல நிதி மட்டுமல்ல, பொது சேமநல நிதி (public provident fund) என எந்த ஒரு கூட்டு வட்டி திட்டத்திற்கும் பொருந்தும். 

கூட்டு வட்டி திட்டத்தில் நடுவில் பணத்தை எடுப்பது தங்க முட்டையிடும் வாத்தை வெட்டுவதற்கு சமமானது. அதை நாம் செய்யக்கூடாது.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், அவசரப்பட்டு எடுக்கும் தவறான நிதி முடிவுகளிலிருந்து உங்கள் வாழ்நாள் சேமிப்பைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். உங்கள் ஓய்வுகாலத்தில் எவ்விதப் பண நெருக்கடியும் இன்றி, நிம்மதியான மற்றும் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமான வாழ்க்கையை வாழ்வதற்கான தெளிவான வழிகாட்டுதலைப் பெறுவீர்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com