இபிஎஸ் 2026 சட்டம் அமல்: இனி பிஎஃப் கிளைம் தாமதமானால் 12% வட்டியுடன் பணம்!

EPFO Services Tamil - இபிஎஃப்ஓ சேவைகள்
EPFO Services Tamil - இபிஎஃப்ஓ சேவைகள்AI Image
Updated on

70 ஆண்டுகளுக்குப் பிறகு, சமூக பாதுகாப்புச் சட்டம் 2020-ன் கீழ் 'ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தின் புதிய விதிகள் ஜூன் 29, 2026 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இதனால் PF சந்தாதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள், நடைமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

பிஎஃப் கணக்கில் இருந்து அவசர தேவைகளுக்காக பகுதி அளவு பணம் எடுக்கும் வசதி புதிய விதிகளின்படி எளிதாக்கியுள்ளதோடு , முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 25 % இருப்பு

சந்தாதாரர்கள் தங்களது கணக்கின் மொத்தத் தொகையில் ஒரு லட்சம் வைத்திருந்தால் 25 % (25,000) கணக்கில் எப்பொழுதும் வைத்திருப்பதோடு, 75% (75,000) பணத்தை மட்டும் குறிப்பிட்ட காரணங்களுக்கு எடுக்க முடியும். ஊழியர், நிறுவனத்தின் பங்களிப்பு இரண்டிற்கும் இந்த விதி பொருந்தும்.

*அவசர மருத்துவ தேவைகளுக்கு தகுதியான தொகையில் 12 மாத சந்தா முடிந்த பிறகு 100% வரை எடுக்கலாம்.

*குழந்தைகளின் கல்வி செலவிற்காக பணிக்காலத்தில் அதிகபட்சம் பத்து முறை 12 மாதங்களுக்குப் பிறகு, 100% பணம் எடுக்க அனுமதிக்கப்படும் .

*பணிக்காலத்தில் அதிகபட்சம் 5 முறை திருமணம் சார்ந்த செலவுகளுக்கு 12 மாதங்களுக்குப் பிறகு, 100% பணம் எடுக்கலாம்.

*புதிய வீடு அல்லது மனை வாங்குவதற்கு கடனை திருப்பி செலுத்துவதற்கு 12 மாதங்களுக்கு பிறகு தகுதியான தொகையை முழுமையாக எடுக்கலாம்.

EPFO Services Tamil - இபிஎஃப்ஓ சேவைகள்
EPFO Services Tamil - இபிஎஃப்ஓ சேவைகள்AI Image

வேலை இழப்பு அல்லது வெளியேற்றம்

புதிய விதிகளின்படி வேலைக்குச் சேர்ந்து 12 மாதங்கள் அல்லது அதற்கு முன்பாக வேலையை விட்டு நின்றால் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக 2 முறை குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் 100% வரை பகுதிப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

*பிஎஃப் கணக்கில் ஏற்கனவே உள்ள விதிகளின்படி ஊழியர், முதலாளி தலா 12 %தொகையை செலுத்த வேண்டும் என்பதில் மாற்றமில்லை.

*சட்டப்பூர்வ சம்பள வரம்பிற்கு (Wage Ceiling) மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு, வரம்பு வரையிலான தொகைக்கு மட்டுமே கட்டாயப் பங்களிப்பு கணக்கிடப்படும்.

*புதிய விதிகளின்படி விபிஎஃப் மூலம் ஊழியர்கள் விரும்பினால் 12% அதிகமாக கூடுதல் தொகையைச் சேமிப்பதோடு,அதனை குறைத்துக் கொள்ளவும் , நிறுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவசரகால சலுகை

இபிஎஸ்-95 மற்றும் 1971 ஆம் ஆண்டின் குடும்ப ஓய்வூதிய திட்டங்களுக்கு மாற்றாக பேரிடர்கள் பெருந்தொற்று போன்ற காலங்களில் மத்திய அரசு அதிகபட்சமாக 3 மாதங்கள் வரை தற்காலிகமாக பிஃஎப் பங்களிப்பை குறைக்கவும் ஒத்திவைக்கவும் புதிய 'இபிஎஸ் 2026' சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போதைய மாதாந்திர ஓய்வூதியதாரர்களுக்கு தொடர்ந்து தடையின்றி ஓய்வூதியம் வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்.! இன்று ஒரு சவரன் என்ன விலை தெரியுமா?
EPFO Services Tamil - இபிஎஃப்ஓ சேவைகள்

ஓய்வூதியக் கணக்கீட்டு முறை

பழைய ஓய்வூதியம் கணக்கிடப்படும் முறையில் எந்த மாற்றமும் இல்லாததோடு, மாதாந்திர குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை ₹1,000 ஆக நீடிக்கிறது.

ஆவணங்களில் குறைபாடு இருந்தால் 20 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு தெரிவிப்பதோடு, ஓய்வூதியக் கோரிக்கைகளை இபிஎஃப்ஓ அமைப்பு 20 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும். ஓய்வூதியம் வழங்குவதில் நியாயமான காரணம் இல்லாமல் தாமதம் ஏற்பட்டால், 12 % ஆண்டு வட்டியுடன் சேர்த்து அந்தத் தொகையை இபிஎஃப்ஓ வழங்க வேண்டும்.

இந்தத் தொகை தாமதத்திற்கு காரணமான அதிகாரியின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும்.

ஆன்லைன் ரிட்டர்ன்ஸ் தாக்கல், மின்னணு கணக்குகள் (Digital Accounts), டிஜிட்டல் பாஸ்புக் மற்றும் ஆன்லைன் கிளைம்கள் போன்ற இபிஎஃப் ஓ- வின் ஆன்லைன் சேவைகளை புதிய திட்டம் முழுமையாக முறைப்படுத்துகிறது.

புதிய விதிகள் அமலுக்கு வந்த 15 நாட்களுக்குள் நிறுவனங்கள் ஒருங்கிணைந்த படிவமான 'Form V'யை ஊழியர்களின் விவரங்களுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தணிக்கை மற்றும் முதலீட்டு விதிகள் தன்னாட்சி பெற்ற பிஎஃப் டிரஸ்டுகளை நடத்தும் நிறுவனங்களுக்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
நாமினி இல்லையா? முதலீட்டாளர் இறந்தபின் முடங்கிய பணத்தை சட்டப்பூர்வமாக மீட்பது எப்படி?
EPFO Services Tamil - இபிஎஃப்ஓ சேவைகள்

சந்தாதாரர்களின் நீண்டகால ஓய்வூதியப் பாதுகாப்பை உறுதி செய்து, அவசரத் தேவைகளுக்கான பணப்புழக்கம், நிர்வாக ரீதியான வெளிப்படைத்தன்மையை புதிய இபிஎஃப் மற்றும் இபிஎஸ் 2026 திட்டங்கள் அதிகரித்துள்ளன.

பிஎஃப் அலுவலகக் கிளைம்கள் தாமதமாவதற்கான அபராத விதிகளை நீங்கள் அறிந்துகொள்வதன் மூலம், உங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய நேரத்தில் தீர்வு பெற அதிகாரிகளைத் தார்மீக ரீதியாக அணுக முடியும். ஒருவேளை தாமதம் ஏற்பட்டால், அதற்கான 12% வட்டிப் பலனைப் பெற்று, உங்களின் உழைப்பின் பணத்திற்கு முழுமையான மதிப்பையும் நிர்வாக வெளிப்படைத்தன்மையையும் நீங்கள் அறுவடை செய்ய முடியும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com