யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்.! இன்று ஒரு சவரன் என்ன விலை தெரியுமா?

தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தெடர் உயர்வை சந்தித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 2) ரூ.2,400 மற்றும் நேற்று (ஜூலை 3) ரூ.1,200 வரை தங்கத்தின் விலை உயர்ந்தது. இந்த தொடர் விலை உயர்வு இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது.

கடந்த மாதத்தில் பொருளாதார நிபுணர்கள் தங்கத்தின் விலை உயரும் என கணித்திருந்தனர். அதற்கேற்ப தற்போது தங்கத்தின் விலை ஏறுமுகத்தை சந்தித்து வருகிறது. தங்கத்தை நகையாக வாங்கி சேமிப்பதைக் காட்டிலும், முதலீடாக கருதி நல்ல பலன் கிடைக்கும்.

நேற்று (ஜூலை 03) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 அதிகரித்த நிலையில், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்தது.

இதன்படி நேற்று 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,09,600-க்கும், ஒரு கிராம் ரூ.13,700-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.2,60,000-க்கு விற்பனையானது.

நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 04) தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,09,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,700-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு இதே நாள் ஜூலை 4-ல் 1 சவரன் தங்கம் ரூ.72,400-க்கும், 1 கிராம் ரூ.9,050-க்கும் விற்பனையானது. இன்றைய விலையோடு இதனை ஒப்பிட்டால், ஓராண்டில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட பாதியளவு உயர்ந்துள்ளது.

2025 ஜூலை 4-ல் 1 கிராம் வெள்ளி ரூ.120-க்கு விற்பனையானது. இன்றைய விலையோடு ஒப்பிட்டால், ஓராண்டில் வெள்ளியின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது.

இதனால் தான் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டை பொருளாதார நிபுணர்கள் ஊக்குவித்து வருகின்றனர்.

தங்கம் விலை
Gold Price
இதையும் படியுங்கள்:
வேற லெவல் மாற்றம்: முன்னாள் மாணவர்களை களமிறக்கிய தமிழக அரசு.!
தங்கம் விலை

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 03: 1 கிராம் - ரூ.13,700 1 சவரன் ரூ.1,09,600

ஜூலை 02: 1 கிராம் - ரூ.13,550 1 சவரன் ரூ.1,08,400

ஜூலை 01: 1 கிராம் - ரூ.13,250 1 சவரன் ரூ.1,06,000

ஜூன் 30: 1 கிராம் - ரூ.13,200 1 சவரன் ரூ.1,05,600

ஜூன் 29: 1 கிராம் - ரூ.13,300 1 சவரன் ரூ.1,06,400

கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:

ஜூலை 03: 1 கிராம் - ரூ.260

ஜூலை 02: 1 கிராம் - ரூ.255

ஜூலை 01: 1 கிராம் - ரூ.245

ஜூன் 30: 1 கிராம் - ரூ.245

ஜூன் 29: 1 கிராம் - ரூ.245

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்திப்பதால் இதில் முதலீடு செய்வது நல்ல யுக்தியாகும். மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளுக்கு இணையாக, தங்கம் மற்றும் வெள்ளி முதலீடும் நல்ல லாபத்தைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

இதையும் படியுங்கள்:
பெட்ரோல் விலை குறையுமா? அமைச்சர் போட்ட '3 மாத' நிபந்தனை..!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com