உங்க UAN எண் மறந்து போச்சா? No worries... இதோ எளிய தீர்வு!

How to find your UAN?
UAN Number
Published on

தொழிலாளர்கள் அனைவரும் தங்களின் PF கணக்கு குறித்து தெளிவான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். பண மோசடிகள் அதிகம் நடக்கும் இன்றைய சூழலில், செயல்படாத PF கணக்குகளில் மோசடிகள் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பணியில் இருந்து விலகினாலோ அல்லது ஓய்வு பெற்றாலோ PF பணத்தை உடனே எடுத்து விடுவது தான் நல்லது.

ஒருசிலர் PF கணக்கை அப்படியே விட்டு விடுகிறார்கள். 3 ஆண்டுகளுக்கும் மேலாக PF கணக்கைப் பயன்படுத்தவில்லை என்றால், அது செயலற்று போய் விடும். ஆகையால் PF கணக்கை தொடர்ந்து செயலில் வைத்துக் கொள்வது அவசியம்.

இந்நிலையில் உங்களின் UAN எண்ணை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் உங்களது UAN எண்ணை மறந்திருந்தால், அதனை எப்படி அறிந்து கொள்வது என இப்போது பார்ப்போம்

நாட்டில் மாதச் சம்பளம் வாங்குவோர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) திட்டம். இத்திட்டத்தின் படி, தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தில் தொழிலாளரும், நிறுவனமும் ஒரு குறிப்பிட்ட தொகையை தொழிலாளரின் பெயரில் வரவு வைப்பார்கள். இந்தத் தொகை தொழிலாளர்களின் அவசர காலத்தில் பேருதவியாக இருக்கும். இதுதவிர இத்திட்டம் ஓய்வு காலத்தில் பென்சன் கிடைப்பதையும் உறுதி செய்கிறது.

உங்கள் PF கணக்கின் UAN எண் மறந்து விட்டால், அதனை ஆன்லைனிலேயே மிக எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம்.

UAN எண்ணை தெரிந்து கொள்ளும் வழிமுறை:

1. தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (https://www.epfindia.gov.in/) சென்று, ‘Service’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

2. பிறகு ‘For Employees’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, Member UAN / Online Services என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

3. இப்போது PF கணக்கு உரிமையாளரின் பெயர், பிறந்த தேதி, ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண்ணை உள்ளிட வேண்டும்.

4. உடனே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும்.

5. ஓடிபி-யை உள்ளிட்டதும், திரையில் தெரியும் ‘Know Your UAN’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், ‘Show My UAN’ என்று வரும்.

6. இதனை கிளிக் செய்ததும், திரையில் உங்கள் PF கணக்கின் UAN தெரியும். இதனை நீங்கள் குறித்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
LIC பாலிசியை PF கணக்குடன் இணைத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?
How to find your UAN?

UAN (Universal Account Number) எண் என்பது, 12 இலக்கங்களைக் கொண்ட தனிப்பட்ட அடையாள எண்ணாகும். வேலை மாறும் போது PF கணக்கு எண் மாறும். ஆனால் UAN எண் மட்டும் மாறது. பல PF கணக்குகளை UAN எண்ணின் கீழ் இணைப்பதன் மூலம், PF விவரங்களை ஆன்லைனில் அணுகவும், நிதியை மாற்றவும் முடியும். நிறுவனங்களின் தலையீடு இல்லாமல் PF கணக்கு புத்தகத்தைப் பதிவிறக்கம் செய்தல் மற்றும் கேஒய்சி அப்டேட் ஆகியவற்றைச் செய்ய UAN எண் உதவுகிறது.

தொழிலாளர்களுக்கு நிறுவனங்களில் மாதந்தோறும் சம்பளச் சீட்டு (Pay Slip) வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் நீங்கள் பணிபுரிந்த நிறுவனத்திலும் சமபளச் சீட்டு வழங்கப்பட்டிருக்கும். இந்த சம்பளச் சீட்டை நீங்கள் பாதுகாப்பாக வைத்திருந்தால், மிக எளிதில் UAN எண்ணை தெரிந்து கொள்ளலாம். ஏனெனில் சம்பளச் சீட்டில் UAN எண் கட்டாயம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதையும் படியுங்கள்:
குடும்ப பென்சன் யாருக்கு..? 2 மனைவிகள் இருந்தால் PF குடும்ப பென்சன் யாருக்கு கிடைக்கும்?
How to find your UAN?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com