
டிரம்ப் போட்ட வரிகள் காரணமாக உலக சந்தை பதட்டத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லதா என்பதை பார்க்கலாம்.
தங்கத்தில் முதலீடு செய்வது நல்லதுதான். ஆனால், முழு முதலீட்டு தொகையையும் தங்கத்திலேயே முதலீடு செய்வது சிக்கலை ஏற்படுத்தும். பங்கு சந்தையுடன் ஒப்பிடும் பொழுது தங்கத்தை முதலீடாக கொண்டு முதலீடு செய்வது சிறந்த தீர்வாகத்தான் உள்ளது.
இந்தியர்கள் தங்கம் வாங்குவதற்கு இரண்டு நோக்கங்களை கொண்டுள்ளனர். ஒன்று தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் மற்றொன்று முதலீட்டிற்காகவும்.
தங்கத்தை பல வடிவங்களில் வாங்கலாம். தங்க பத்திரங்கள், டிஜிட்டல் தங்கம் பல வடிவங்களில் வாங்கலாம் அல்லது முதலீடு செய்யலாம்.
1) நகைகள்:
பண வீக்கத்திற்கு எதிராக தங்கம் ஒரு நல்ல முதலீடாக இருக்கலாம் என்று நினைத்தால் நாணயங்கள், நகைகளை வாங்குவது நிதி வெற்றியை அடைய உதவும்.
2) தங்க சேமிப்பு திட்டங்கள்:
சந்தையில் ஏராளமான தங்க திட்டங்கள் உள்ளன. முக்கியமாக நகைக்கடைக்காரர்கள் அறிமுகப்படுத்தும் திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி 11 மாதங்கள், இரண்டு ஆண்டுகள் போன்ற கால திட்டத்தில் சேர்ந்து முதிர்ச்சி அடைந்தவுடன் முதலீடு செய்த தொகைக்கு தங்கத்தை வாங்கலாம். இது சிறந்த திட்டமாக இருந்தாலும் இந்த வகையான முதலீட்டில் சிறிது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முதலீடு செய்வதற்கு முன்பு நகைக்கடையையும், அவர்களின் பாலிசிகளையும் பகுப்பாய்வு செய்வது நல்லது.
3) தங்க பிஸ்கட்கள், பார்கள், நாணயங்கள்:
தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் தனிநபர்கள் பிஸ்கட், பார்கள் அல்லது நாணயங்களை வாங்குவதன் மூலம் திட தங்கத்தில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதில் கட்டணங்கள் மிகக் குறைவு, மேலும் விற்கும் போதும் நல்ல வருமானத்தைப் பெற முடியும்.
இருப்பினும் தங்கத்தை வைத்திருப்பதில் ஒரு ஆபத்தான காரணி திருட்டு போவது என்பதாகும். எனவே தங்க பிஸ்கட்டுகள், பார்கள், நாணயங்கள் ஆகியவற்றை வாங்கும் போது அவற்றை பத்திரமாக சேமித்து வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.
4) டிஜிட்டல் தங்கம்:
தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான வழி இது. ஆன்லைன் தளங்கள் அல்லது மொபைல் பயன்பாடுகள் மூலம் வாங்கலாம். இதில் நம் முதலீடு காப்பீடு செய்யப்பட்ட பாதுகாப்பான இடங்களில் சேமிக்கப்படுகிறது. எனவே திருட்டு அல்லது இழப்பு பற்றிய கவலைகள் இல்லை.
5) தங்க பத்திரங்கள்:
தங்க பத்திரங்கள் என்பது தங்கத்தில் முதலீடு செய்வதற்கான ஒரு சிறந்த வழியாகும். முதலீட்டாளர்கள் இந்த பத்திரங்களை வாங்கி, முதுகு காலத்தில் இந்த பத்திரங்கள் பணமாக அல்லது தங்கமாக மாற்றப்படும். இந்த திட்டம் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படுகிறது.
தங்கத்தில் முதலீடு செய்வதற்கான காரணங்கள்:
தங்கம் ஒரு சக்தி வாய்ந்த 'பணவீக்க ஹெட்ஜ்' என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலைகள் அடிப்படையில் பண வீக்கத்தால் பாதிக்கப்படுவதில்லை. இதனால் சர்வதேச சந்தையில் அனைத்து நாணயங்களின் மதிப்பு குறைந்தாலும் பணவீக்கம் ஏற்படும்பொழுது பணத்தை இழக்க வேண்டி இருக்காது.
தங்கம் வாங்குவது குறைந்தபட்ச ஆபத்தைக் கொண்டிருப்பதால் முதலீடு செய்ய தொடங்குபவர்கள் பாதுகாப்பாக உணர முடிகிறது.
தங்கம் குடும்ப செல்வத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. தங்க நகைகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபுரிமையாக கடத்தப்படுகிறது.
தங்கத்தில் முதலீடு செய்வது லாபகரமானதா?
ஒவ்வொரு முதலீட்டிலுமே நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டும் உள்ளன. தங்க சுரங்க நிறுவனத்தில் பங்குகளை வாங்குவது பாதுகாப்பானதாக இருக்கிறது. பண வீக்கத்திற்கு எதிராக தங்கம் ஒரு நல்ல முதலீடாக இருக்கும். எனவே நாணயங்கள், நகைகளை வாங்குவது நிதி வெற்றியை அடைய உதவும். அதிகரித்து வரும் தங்க விலைகளில் இருந்து லாபம் ஈட்ட அந்நிய செலாவணியை பயன்படுத்துவது நம் முக்கிய இலக்காக இருந்தால் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்தது தான்.