

தங்கம் மற்றும் வெள்ளி (Gold vs Silver) ஆகியவை பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் கருதப்படுவதால் பல தலைமுறைகளாக முதலீட்டாளர்கள் இடையே பிரபலமாக உள்ளது. இந்தியாவில் அவை செழிப்பு மற்றும் நிலைத்தன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வெள்ளி இரண்டிற்கும் இடையே முதலீட்டுக்கு எது சிறந்தது என்பது நம் முதலீட்டு இலக்குகளைப் பொறுத்தது. தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. அதே சமயம் வெள்ளி அதிக ஏற்ற இறக்கத்துடன் அதிக வருமானத்தை அளிக்கும் திறன் கொண்டது.
தங்கம்
சந்தை மாறும்போது தங்கமும், வெள்ளியும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இருப்பினும் தங்கம் மிகவும் நிலையானது மற்றும் நிச்சயமற்ற காலங்களில் 'பாதுகாப்பான புகலிடமாக' பார்க்கப்படுகிறது. ETFகள், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவை தங்கத்தை முதலீடு செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் டிஜிட்டல் வழிகளாகும். இவை பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையையும் வழங்குகின்றது. இவை பாதுகாப்பு மற்றும் குறைந்த இடர்பாடுகளைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாகும்.
வெள்ளி
சந்தை மாறும்போது தங்கமும், வெள்ளியும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வெள்ளியின் விலை அதிகமாக ஏற்ற இறக்கமாக இருக்கலாம். ஏனெனில், அதன் தேவை பெரும்பாலும் மின்னணுவியல் மற்றும் உற்பத்தி போன்ற தொழில்களில் இருந்து வருகிறது. அவை பொருளாதாரத்தை சார்ந்துள்ளன. ETFகள், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவை வெள்ளியை முதலீடு செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் டிஜிட்டல் வழிகளாகும். அதிக ஏற்ற இறக்கத்துடன், வரலாற்று ரீதியாக நல்ல வருமானத்தை அளிக்கும் திறன் கொண்டவை. இவை அதிக இடர் எடுக்கத் தயாராக இருக்கும் மற்றும் அதிக வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
(Gold vs Silver) முதலீடு செய்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
தங்கம் மற்றும் வெள்ளி இரண்டையும் தேவைப்படும் பொழுது வாங்கவும், விற்கவும் எளிதானது. ஆனால், தங்கத்திற்கு உலகளவில் அதிக தேவை உள்ளது. அத்துடன் அதிக மதிப்பையும் கொண்டுள்ளது. இது தங்கத்தை அதன் விலையை அதிகம் பாதிக்காமல் பணமாக மாற்றுவதை எளிதாக்குகிறது. அதனால்தான் பல முதலீட்டாளர்கள் இதை விரும்புகின்றனர்.
பணவீக்கத்திற்கு எதிராக பாதுகாக்க விரும்பினால் தங்கத்தை தேர்ந்தெடுக்கலாம். அதுவே அதிக ஏற்ற இறக்கத்துடன் கூடிய அதிக வருமானத்தை எதிர்பார்ப்பதாக இருந்தால் வெள்ளியைத் தேர்ந்தெடுக்கலாம். தங்கத்திலும், வெள்ளியிலும் முதலீடு செய்வது முதலீட்டு போர்ட்ஃபோலியோவிற்கு ஏற்றதாக இருக்கும்.
நீண்டகால பாதுகாப்பைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு தங்கம் ஒரு சிறந்த விருப்பமாக அமைகிறது. தொழில்துறை தேவையால் பெரிதும் பாதிக்கப்படும் வெள்ளியைப் போல் அல்லாமல் தங்கத்தின் மதிப்பு பெரும்பாலும் நிதி சொத்தாக அதன் பங்கால் இயக்கப்படுகிறது.
வெள்ளி அதன் வளர்ச்சித் திறனுக்காக தனித்து நிற்கிறது. ஏனெனில் இது தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற தொழில்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குறுகிய கால வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்களுக்கு இது கவர்ச்சிகரமானதாக அமைகிறது. தங்கமா? வெள்ளியா? என்பதை முடிவு செய்வது உண்மையில் நம் முதலீட்டு இலக்குகளை பொறுத்தது. நிலையான பாதுகாப்பை தேடுகிறோமா அல்லது அதிக வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டிருக்கிறோமா என்பதைப் பொறுத்து அமைகிறது.
எந்த ஒரு முதலீடும் நம் நிதி இலக்குகளையும், இடர் எடுக்கும் திறனையும் பொறுத்தது. முதலீடு செய்வதற்கு முன் தகுந்த ஒரு நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை கேட்பது நல்லது.