எச்சரிக்கை! போதும் இந்த நகை சீட்டு... முதலீடு செய்யும் முன் இதை கவனிக்கலனா ஏமாந்து போவீங்க!

Profitable ideas
jewels chit scheme vs other investment
Published on

கை சீட்டுகள் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாதந்தோறும் ஒரு தொகையை செலுத்தி, இறுதியில் தங்கம் வாங்கும் முறையாகும். இது பொதுவாக செய்கூலி, சேதாரம் இல்லாமல் தங்கம் பெற உதவுகிறது. இதுவே இதன் முதன்மை லாபமாகும். எனினும், இந்த திட்டங்களில் பல சூட்சமங்கள் உள்ளன. அதனால் லாபம் ஈட்டுவது நாம் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை பொறுத்தது. ஒவ்வொரு நகைக்கடையின் திட்டமும் வித்தியாசமாக இருக்கும். இதில் சேரும் முன் அதன் விதிமுறைகளை கவனமாக படித்து தெரிந்து கொள்வது நல்லது.

நகைச் சீட்டு சேமிக்க ஒரு நல்ல வழி. ஆனால், அதன் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியாது. அவசர தேவைகளுக்கு நகைச் சீட்டு உதவியாக இருக்கும். ஆனால் நகைச் சீட்டை விட அதிக லாபம் பெற ரிஸ்க் எடுத்து பங்குகள், தங்கம், ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது பிற முதலீடுகளில் முதலீடு செய்யலாம். ஏனெனில் இவற்றில் பணவீக்கத்தை விட அதிக வளர்ச்சி விகிதம் உள்ளது. அதிக ரிஸ்க் எடுக்கும் முதலீடுகளில் அதிக வருவாய் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

அதிக லாபம் தரும் சில முதலீட்டு வழிகள்

1. பங்குகள்

நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை ஈட்டலாம். இதன் மூலம் பங்கு சந்தையின் வளர்ச்சியை பயன்படுத்திக் கொள்ள முடியும். பங்கு முதலீடுகள் நீண்ட கால அடிப்படையில் லாபம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. வளரும் நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் நம் பங்குகளின் மதிப்பை அதிகரிக்கலாம். ஈவுத்தொகை பெறலாம்.

2. தங்கம்

தங்கம் ஒரு நிலையான முதலீடு. தங்கம் முதலீடு என்பது அனைவருக்கும் பாதுகாப்பான விருப்பங்களில் ஒன்றாகும். நகைகள் அல்லது தங்க நாணயங்கள் போன்ற உடல் தங்கத்தில் முதலீடு செய்யலாம் அல்லது ஆன்லைன் இ-வாலெட்டுகள் மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம். நிதி ரீதியாக லாபம் ஈட்ட தங்க பத்திரங்கள், தங்க ETF, தங்கப் பங்குகள் மற்றும் தங்கக் கட்டிகள் போன்ற முதலீடுகள் சிறந்த தேர்வுகளாக இருக்கும். தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கங்களில் முதலீடு செய்வது லாபம் ஈட்ட வழிவகுக்கும்.

3. ரியல் எஸ்டேட்

வீடு அல்லது நிலம் வாங்குவது நீண்ட காலத்திற்கு நல்ல லாபத்தை தரும் சொத்துக்களில் முதலீடு செய்வது. வீடு அல்லது வணிக வளாகம் போன்ற சொத்துகளில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால லாபம் பெறலாம். ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்டுகள்(REITs) மூலம் சிறிய தொகையிலும் முதலீடு செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
நகை வாங்க போறீங்களா? கொஞ்சம் நில்லுங்க... இத படிங்க!
Profitable ideas

4. பிற முதலீடுகள்

சிறு வணிகங்கள், டிஜிட்டல் சொத்துகள் அல்லது ரத்தினங்கள் போன்ற பிற முதலீடுகளும் அதிக லாபத்தை அளிக்கலாம். கைவினைப் பொருட்கள் மற்றும் இரத்தினங்களின் விலையை உயர்த்தி விற்க முடியும்.

இதையும் படியுங்கள்:
லாபம் தரும் பங்கு முதலீடுகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது எப்படி ?
Profitable ideas

எந்தவொரு முதலீட்டையும் செய்வதற்கு முன்பு அதன் ஆபத்துக்கள் மற்றும் சாத்தியமான லாபங்களைப் பற்றி முழுமையாக ஆராய்வது அவசியம். நம் நிதி இலக்குகள் மற்றும் ஆபத்து சகிப்புத்தன்மையை கருத்தில் கொண்டு முதலீட்டு முறையை தேர்வு செய்ய வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com