லட்சங்களில் சம்பாதிக்கலாம்! தற்போதைய ட்ரெண்டில் பட்டையைக் கிளப்பும் போட்டோ ஷூட் பிசினஸ்!

Photo Shoot Business - போட்டோ ஷூட்
Photo Shoot Business - போட்டோ ஷூட்AI Image
Updated on

ற்பொழுது போட்டோ ஷூட் பிசினஸ் மிக வேகமாகவும், அதிக லாபத்தோடும் கலக்கி வரும் ஒரு முதன்மையான தொழிலாக உருவெடுத்துள்ளது. பிராண்ட் இமேஜ், விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளதால், தொழில்முறை போட்டோகிராபர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சமூக ஊடகங்களின் பெருக்கமும், டிஜிட்டல் பிராண்டிங் தேவைகளும் இந்தத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன.

குறைந்த முதலீட்டில் புதிய போட்டோ ஷூட் தொழிலை தொடங்குவது எப்படி?

போட்டோ ஷூட் பிசினஸ் (Photo Shoot Business) என்பது வாடிக்கையாளர்களின் பிராண்ட், தொழில் அல்லது தனிப்பட்ட மதிப்பை உயர்த்தும் போட்டோகிராபி மற்றும் தொழில் முறை காட்சிகளை உருவாக்கும் ஒரு அதிவேகமாக வளரும் தொழிலாகும். போட்டோ ஷுட் பிசினஸ் தற்போதைய சந்தையில் பல்வேறு புதிய பரிமாணங்களை எடுத்துள்ளது.

தொழில்முறை புகைப்படக் கலைஞராகவும், சிறந்த வருமானம் ஈட்டவும் இந்த பிசினஸ் ஒரு அருமையான வாய்ப்பாக உள்ளது. இன்றைய ட்ரெண்டில் அதிக வருமானம் தரும் முக்கிய போட்டோ ஷுட் வகைகள் மற்றும் இந்த பிசினஸை எப்படி வெற்றிகரமாக நடத்துவது என்பதை பற்றியும் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
பொழுதுபோக்கை லாபகரமான பிசினஸாக மாற்றுவது எப்படி?
Photo Shoot Business - போட்டோ ஷூட்

1) கலக்கி வரும் டாப் போட்டோ ஷூட் ட்ரெண்டுகள்:

*வணிக போட்டோ ஷுட்(Corporate & Branding shoot):

நிறுவனங்களின் தரம், அதன் நோக்கம் மற்றும் ஊழியர்களின் முகப்புப் படங்கள் போன்றவற்றை விளம்பரப்படுத்த இந்த வகை போட்டோ ஷுட்கள் உதவுகின்றன.

*பேஷன் மற்றும் விளம்பர போட்டோ ஷுட்(Fashion & Commercial Shoot):

துணிக்கடைகள் அழகு சாதன பொருட்கள் மற்றும் மாடலிங் துறைக்கு உயர்தர படங்கள் தேவைப்படும்.

*இ-காமர்ஸ் தயாரிப்பு போட்டோ ஷூட்:

அமேசான், மீஷோ, இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பொருட்கள் விற்கும் ஆன்லைன் வணிகர்களுக்காக ஆடைகள், நகைகள் மற்றும் பொருட்களை அழகாகப் படம் பிடிக்கும் தொழில் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தங்கள் தயாரிப்புகளை விற்கும் சிறு வியாபாரிகளுக்கான பிராண்டிங் போட்டோ ஷுட்களும் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றன.

*நிகழ்வு புகைப்படம்(Event Photography):

கார்ப்பரேட் மீட்டிங், கருத்தரங்குகள் மற்றும் தயாரிப்பு வெளியீட்டு விழாக்களை கவர்ச்சியாக படம் எடுத்துக் கொடுப்பது.

*தனிநபர் போட்டோ ஷூட்:

மெட்டர்னிட்டி & பேபி போட்டோ ஷூட், திருமணத்திற்கு முந்தைய (Pre-Wedding) குடும்ப போட்டோ ஷூட் மற்றும் பிறந்தநாள் நிகழ்வுகள். திருமணத்திற்கு முன்பும் பின்பும் அழகிய சுற்றுலாத் தலங்கள் அல்லது பிரத்யேக செட்டிங்குகளில் எடுக்கப்படும் இந்த ஷூட்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம்தான்.

கர்ப்பகால நினைவுகள் மற்றும் குழந்தைகள் பிறந்து சில மாதங்களில் எடுக்கப்படும் "நியூ பார்ன் பேபி" ஷூட்களுக்கு தற்போதைய சந்தையில் மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது.

Photo Shoot Business - போட்டோ ஷூட்
Photo Shoot Business - போட்டோ ஷூட்AI Image

2) பிசினஸை எப்படி தொடங்குவது மற்றும் லாபகரமாக மாற்றுவதற்கான வழிகள்:

*நல்ல குவாலிட்டியான கேமராக்கள், பல்வேறு லென்ஸ்கள், ஸ்டுடியோ லைட்டிங் உபகரணங்கள் மற்றும் எடிட்டிங் செய்ய சக்திவாய்ந்த கம்ப்யூட்டர் ஆகியவை தேவைப்படும்.

*ஆரம்பத்திலேயே எல்லாவற்றையும் செய்யாமல் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெறுவது நம்மை எளிதாக அடையாளப்படுத்தும்.

*போர்ட்ஃபோலியோ தயாரிப்பு மற்றும் சமூக வலைதள மார்க்கெட்டிங்.

நாம் எடுத்த சிறந்த புகைப்படங்களை வைத்து ஒரு டிஜிட்டல் போர்ட்ஃபோலியோ உருவாக்கலாம். நம் திறமையை வாடிக்கையாளர்களுக்கு காட்டுவதற்காக பிரத்தியேக instagram, பேஸ்புக் பக்கங்களை உருவாக்கி மற்றும் ஒரு தனி இணையதளத்தில் (website) நாம் எடுத்த சிறந்த புகைப்படங்களை அழகாக பதிவேற்றலாம். இது வாடிக்கையாளர்களிடம் நம் திறமையை வெளிப்படுத்தும்.

*வெறும் புகைப்படங்கள் மட்டும் எடுக்காமல், போட்டோஷுட் நடக்கும் போது எடுக்கப்படும் "பிஹைண்ட் தி சீன்ஸ்" (Behind the Scenes) வீடியோக்களை இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக போட்டால் வாடிக்கையாளர்கள் தானாகவே நம்மைத் தேடிவருவார்கள்.இந்தத் தொழில்முறை வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் ஒரு சாதாரண புகைப்படக் கலைஞரிலிருந்து, தற்போதைய டிஜிட்டல் சந்தையின் தேவைகளைப் புரிந்துகொண்டு, பிராண்டுகளும் வாடிக்கையாளர்களும் தேடி வரும் ஒரு வெற்றிகரமான மற்றும் அதிக லாபம் ஈட்டும் வணிக உரிமையாளராக மாற முடியும்.

இதையும் படியுங்கள்:
2026-ல் தமிழ்நாட்டில் செம டிமாண்ட் உள்ள 5 சிறு தொழில்கள்.. மாசம் நல்ல லாபம் பார்க்கலாம்!
Photo Shoot Business - போட்டோ ஷூட்

*ஆரம்பத்திலேயே லட்சக்கணக்கில் முதலீடு செய்து கேமரா, லென்ஸ்கள் வாங்குவதற்கு பதிலாக, ஆரம்ப காலத்தில் கேமராக்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி முதலீட்டை குறைக்கலாம்.

*உண்மையிலேயே போட்டோகிராபியில் ஆர்வம் அதிகம் இருந்தால் முறையான பயிற்சியுடன் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ இந்தத் தொழிலைத் தொடங்கி நல்ல வருமானம் பார்க்கலாம்.

இந்தத் தொழில்முறை வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் ஒரு சாதாரண புகைப்படக் கலைஞரிலிருந்து, தற்போதைய டிஜிட்டல் சந்தையின் தேவைகளைப் புரிந்துகொண்டு, பிராண்டுகளும் வாடிக்கையாளர்களும் தேடி வரும் ஒரு வெற்றிகரமான மற்றும் அதிக லாபம் ஈட்டும் வணிக உரிமையாளராக மாற முடியும்.

Reference: How To Start a Photography Business From Scratch

logo
Kalki Online
kalkionline.com