பொழுதுபோக்கை லாபகரமான பிசினஸாக மாற்றுவது எப்படி?

business-guide
business-guide
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

உங்கள் பொழுதுபோக்கை (Hobby) பிசினஸாக மாற்ற கைவினைப் பொருட்கள் போன்ற தனித்துவமான தயாரிப்புகளை சிறிய அளவில் தொடங்கி, சமூக வலைதளங்கள் மூலம் சந்தைப்படுத்தலாம். சந்தை ஆராய்ச்சி, தரமான தயாரிப்பு மற்றும் சரியான விலை நிர்ணயம் மூலம் இந்த தொழிலை நன்கு விரிவுபடுத்த முடியும்.

பிடித்தமான ஒரு பொழுதுபோக்கை லாபகரமான தொழிலாக மாற்றுவது என்பது ஒரு சிறந்த முயற்சியே. கைவினைப் பொருட்கள், சமையல், ஓவியம் என எதுவாக இருந்தாலும் அதனை பிசினஸாக மாற்ற முடியும். உங்கள் பொழுதுபோக்கை தொழிலாக மாற்ற முதலில் ஒரு தெளிவான திட்டமிடல் என்பது மிகவும் அவசியம். தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் எங்கிருந்து கிடைக்கும்? லாபகரமாக நடத்துவது எப்படி? எந்த மாதிரியான கைவினைப் பொருட்களுக்கு சந்தையில் வரவேற்பு உள்ளது என்பதை ஆராய்ந்து சரியாக ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

சந்தை ஆராய்ச்சி:

உங்கள் தயாரிப்பு அல்லது சேவைக்கு சந்தையில் வரவேற்பு உள்ளதா என்பதை முதலில் நன்கு உறுதி செய்துகொள்ள வேண்டும். அத்துடன் போட்டியாளர்களை பகுப்பாய்வு செய்யவும் வேண்டும்.

தரமான தயாரிப்பு:

கைவினைப் பொருட்கள் என்றால் அதன் தரம் மற்றும் தனித்துவம் இரண்டும் மிகவும் முக்கியம். எனவே தரத்தில் சமரசம் செய்யாதீர்கள். இது வாடிக்கையாளர்களை தக்க வைக்கும்.

தனித்துவத்தை கண்டறிவது:

மற்றவர்களிடமிருந்து உங்கள் தயாரிப்பு எப்படி மாறுபடுகிறது என்பதை முடிவு செய்யுங்கள். தரமான மூலப்பொருட்களை பயன்படுத்துவதும், சரியான விலையை நிர்ணயிப்பதும் உங்கள் தொழிலின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.

சமூக ஊடகப் பயன்பாடு:

சமூக வலைதளங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் தொழிலை விளம்பரப்படுத்த சிறந்த இடங்களாகும். எனவே அவற்றைப் பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி, தொழிலை நன்கு விரிவுபடுத்தி லாபம் காணமுடியும்.

இதையும் படியுங்கள்:
வேலையை விடுங்க பாஸ்! 2025-ல் தமிழ்நாட்டில் இந்த தொழிலை ஆரம்பிச்சா நீங்க தான் அடுத்த கோடீஸ்வரர்!
business-guide

சிறிய முதலீடு:

ஆரம்பத்திலேயே பெரிய அளவில் முதலீடு செய்யாமல் குறைந்த முதலீட்டில் தொடங்கி, ஆர்டர்கள் அதிகரிக்க அதிகரிக்க உற்பத்தியை பெருக்கிக்கொள்ளலாம். அவ்வப்பொழுது வாடிக்கையாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதும் தொழிலை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும்.

விலை நிர்ணயம்:

உங்கள் உழைப்பு, மூலப்பொருட்களின் செலவு மற்றும் லாபம் ஆகியவற்றை கணக்கிட்டு சரியான விலையை நிர்ணயம் செய்வது மிகவும் அவசியம். இது நம் தொழிலின் மீது நம்பகத் தன்மையை அதிகரிக்க உதவும்.

முறையான பதிவு:

பிசினஸ் வளரத் தொடங்கும்பொழுது அதை சட்டபூர்வமாக பதிவு செய்வது மற்றும் தேவையான உரிமங்களைப் பெறுவது நல்லது.

தொடர் கற்றல்:

நாம் ஈடுபட்டுள்ள தொழிலை லாபகரமாக நடத்துவதற்கு அந்தத் துறையில் நடக்கும் மாற்றங்களையும், புதிய நுட்பங்களையும் அவ்வப்போது கற்றுக்கொண்டே இருந்தால்தான் வியாபாரத்தில் செழித்து வளரமுடியும்.

நேர மேலாண்மை:

பொழுதுபோக்காக செய்யும்போது இருந்த சுதந்திரம் வணிகமாக மாறும் பொழுது பொறுப்பாக மாறும். எனவே குறித்த நேரத்தில் ஆர்டர்களை முடித்துக்கொடுக்க திட்டமிட வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com