அட்வென்ச்சர் பைக் லுக்... மேக்ஸி ஸ்கூட்டர் வசதி! இந்தியாவில் களம் கண்டது ‘Honda ADV 160’!

ஹோண்டா நிறுவனம் தனது புதிய ஏடிவி 160 (Honda ADV 160) அட்வென்ச்சர் ஸ்டைலிங்கைக் கொண்ட தனது முதல் மேக்ஸி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஹோண்டா ADV 160
ஹோண்டா ADV 160image credit-powersports.honda.com
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

ஹோண்டா மோட்டார் நிறுவனம் (Honda Motor Company) என்பது ஒரு புகழ்பெற்ற ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமாகும். இது கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல இயந்திர தயாரிப்புகளுக்கு உலகளவில் அறியப்படுகிறது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம், இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் நுழைந்ததில் இருந்தே நம்பகத்தன்மை, தரம் மற்றும் நவீன வடிவமைப்பு ஆகியவற்றிற்கு ஒரு புதிய இலக்கணத்தை வகுத்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு, அவர்கள் வழங்கும் தயாரிப்புகள் வாகனத் துறையையே மாற்றி அமைத்துள்ளன. சத்தமில்லாத, அதிர்வில்லாத மற்றும் நீண்ட காலம் உழைக்கும் எஞ்சின்களுக்கு ஹோண்டா எப்போதும் பெயர் பெற்றது.

இதுவே வாடிக்கையாளர்களின் முதன்மைத் தேர்வாக இருப்பதற்குக் காரணம். இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு உறுதியாகவும், அதே நேரத்தில் ஸ்டைலாகவும் வாகனங்களை வடிவமைப்பதில் ஹோண்டா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் தனது புதிய ஏடிவி 160 (Honda ADV 160) அட்வென்ச்சர் ஸ்டைலிங்கைக் கொண்ட தனது முதல் மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியா சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது. நகர பயன்பாடு மட்டுமின்றி நீண்டதூர பயணங்களுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரில் உயரமான விண்ட்ஸ்கிரீன், நீண்ட சஸ்பென்ஷன் மற்றும் அட்வென்ச்சர் பைக்குகளை நினைவூட்டும் கம்பீரமான தோற்றம் வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டாவின்புதிய ஏடிவி 160 மாடலானது, 'FlexTech' தொழில்நுட்பத்துடன் கூடிய 156.93cc லிக்விட்-கூல்டு (liquid-cooled) சிங்கிள் சிலிண்டர் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இது E85 (E85-compatible) வரையிலான ஃளெக்ஸ்-எரிபொருள் (Flex-fuel) கலவைகளை ஆதரிக்கும் இந்தியாவின் முதல் ஸ்கூட்டராகும். இதன் செயல்திறனைப் பொறுத்தவரை, இது 16.3bhp ஆற்றலையும் 14.9Nm டார்க் திறனையும் வழங்குகிறது; மேலும் இது 'Smart Stop-Start' தொழில்நுட்பம் கொண்ட CVT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஒரு மேக்ஸி-ஸ்கூட்டர் ஆகும். அத்துடன் இது ஏற்றுமதி செய்யப்படும் என்றும் ஹோண்டா நிறுவனம் கூறுகிறது.

Honda ADV 160
Honda ADV 160image credit-reddit.com

இந்த பைக் ஒரு சாகசப் பயணத்திற்கான (Adventure-style) மேக்சி-ஸ்கூட்டர் வடிவமைப்புடன் முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொண்டுள்ளது.

ஏடிவி 160-ன் இருக்கை உயரம் 780 மிமீ ஆக உள்ளது. இருக்கைக்கு கீழே 27 லிட்டர் பொருட்கள் வைக்க சேமிப்பு இடவசதி (Under-seat storage) மற்றும் 8 லிட்டர் பெட்ரோல் டேங்க் (Petrol Tank) கொடுக்கப்பட்டுள்ளதால் இது அன்றாடப் பயன்பாட்டிற்கு மிகவும் நடைமுறைக்கு ஏற்றதாக அமைகிறது. அதேவேளையில், வெளிப்புற எரிபொருள் நிரப்பும் வசதி (external fuel filler) டூயல்-டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை கூடுதல் வசதியையும் நவீனத் தன்மையையும் அளிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
விபத்து அபாயம்: 4 லட்சம் கார்களை திரும்ப பெற்ற ஹோண்டா நிறுவனம்..!
ஹோண்டா ADV 160

இதன் முக்கிய தொழில்நுட்ப அம்சங்களில் RoadSync நேவிகேஷன் வசதி கொண்ட 5-அங்குல TFT திரை, ஹோண்டா ரோட்சின்க் (Honda RoadSync) இணைப்பு, புளூடூத் இணைப்பு, டூயல்-சேனல் ஏபிஎஸ் (ABS), HSTC டிராக்‌ஷன் கண்ட்ரோல், SmartKey கீலெஸ் (keyless) இக்னிஷன் சிஸ்டம், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் அனைத்து எல்இடி (LED) விளக்குகளையும் கொண்டுள்ளது.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, முன்புறம் மற்றும் பின்புறம் என இரண்டிலும் டிஸ்க் பிரேக்குகளைக் கொண்டுள்ள இந்த மேக்ஸி-ஸ்கூட்டரில், ஏபிஎஸ் (ABS - Anti-locking Braking System) வசதியும் இடம்பெற்றுள்ளது.

உயரமான விண்ட்ஸ்கிரீன் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பு ஆகியவை நகர சாலைகள் மட்டுமின்றி நீண்ட தூர பயணங்களிலும் சவுகரியத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளன.

ஹோண்டா நிறுவனம் ADV 160-ஐ தனது ரெங்விங் (Redwing) மற்றும் பிக்விங் (Bigwing) டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ₹1,70,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் சிறப்பான அம்சங்கள் நிறைந்த மற்றும் எதிர்கால தேவைக்கு தயாரான ஒரு ஸ்கூட்டரைத் தேடுகிறீர்கள் என்றால், ஹோண்டா ஏடிவி 160 ஒரு சிறந்த தேர்வாகும்.

இதையும் படியுங்கள்:
வாவ்.. ஒரே நேரத்தில் 10 புதிய பைக்குகள்: வாகன சந்தையை அதிர வைத்த ஹோண்டா!
ஹோண்டா ADV 160

ஹோண்டா ADV 160 ஸ்கூட்டரின் முழு விவரக்குறிப்புகளையும் இன்னும் வெளியிடவில்லை. அவை அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும் என்றும், அதைத் தொடர்ந்து விரைவில் விநியோகம் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com