டீமேட் கணக்கைத் தொடங்கி விட்டு, அதனை பயன்படுத்தாமல் இருக்கலாமா?

Service Charges in Demat
Demat Account
Published on

இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் பலரும் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எல்ஐசி, வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் பாதுகாப்பான முதலீடுகளில் மட்டுமே பலரும் கவனம் செலுத்தி வந்தனர்.

ஆனால் யுபிஐ மற்றும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்த பிறகு, முதலீட்டு வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதற்கேற்ப பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், எஸ்ஐபி மற்றும் இடிஎஃப் என பல்வேறு வகையான முதலீடுகளை பொதுமக்கள் நாடுகின்றனர்.

பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டுமெனில், டீமேட் கணக்கைத் தொடங்க வேண்டியது அவசியம். டீமேட் கணக்கில் தான் நீங்கள் முதலீடு செய்யும் பங்குகள் டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கப்படும்.

சுருக்கமாக சொல்வதென்றால் இதுவொரு வங்கிக் கணக்கு போன்றே செயல்படும். வங்கிக் கணக்கில் பணத்தை பாதுகாப்பது போலவே, நாம் முதலீடு செய்த பத்திரங்களை டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கிறது டீமேட் கணக்கு.

முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் டீமேட் கணக்கைத் தொடங்கி விட்டு, பிறகு அதனை பயன்படுத்தாமலேயே பலர் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் டீமேட் கணக்கில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.

பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அனைத்தும் செபி (SEBI) அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளன. சிறு முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில், அடிப்படை சேவை டீமேட் கணக்கு (Basic Services Demat Account) என்ற வசதியை செபி கொண்டு வந்துள்ளது. இதன்படி சிறு முதலீட்டாளர்கள் டீமேட் கணக்கை நிர்வகிக்க சேவைக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவார்கள். உங்கள் டீமேட் கணக்கில் உள்ள பங்குகளின் மதிப்பு ரூ.4 லட்சம் வரை இருந்தால் மட்டுமே சேவைக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

பங்குகளின் மதிப்பு ரூ.4 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இருந்தால் ஆண்டு சேவைக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஒருவேளை டீமேட் கணக்கைத் தொடங்கும் போது, அடிப்படை சேவைத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்காமல், நீங்கள் சாதாரண திட்டத்தை தேர்ந்தெடுத்து இருந்தால் ஆண்டு சேவைக் கட்டணமாக ரூ.300 முதல் ரூ.900 வரை செலுத்த வேண்டும்.

இருப்பினும் உங்கள் டீமேட் கணக்கில் உள்ள பங்குகளின் மதிப்பு ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், அதனை அடிப்படை சேவை டீமேட் கணக்காக மாற்றிக் கொள்ள முடியும். வங்கிக் கணக்கை போல, டீமேட் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படியுங்கள்:
2026-ல் அதிக லாபத்தை தரப்போகும் முதலீடு இதுதான்.! பிரபல முதலீட்டாளர் பளீச்..!
Service Charges in Demat

டீமேட் கணக்கைத் தொடங்கி விட்டு முதலீடு செய்யாமல் இருந்தால், Closure Form வாயிலாக மூடி விடுவது நல்லது. டீமேட் கணக்கை மூடவில்லை என்றால், எதிர்காலத்தில் நிலுவைத்தொகையை செலுத்தக் கோரி நோட்டீஸ் வர அதிக வாய்ப்புள்ளது. ஆண்டு சேவைக் கட்டணம் தவிர்த்து, கணக்குத் திறப்பு கட்டணம் மற்றும் பரிவர்த்தனை கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. டீமேட் கணக்கத் திறக்க தரகர்களுக்கு ஒருமுறை மட்டும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதுதவிர பங்குகளை வாங்கும் போதும், விற்கும் போதும் சிறிய அளவில் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.20+GST என்ற அளவில் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கிரெடிட் கார்டு பெறுவதற்கும் சிபில் ஸ்கோர் முக்கியமா?
Service Charges in Demat

கட்டணங்களைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

1. முதலில் அடிப்படை சேவை டீமேட் கணக்கைத் தொடங்குவது அவசியம். இதன்மூலம் சிறு முதலீட்டாளர்களுக்கு கட்டண விலக்கு கிடைப்பதோடு, சலுகைகளும் கிடைக்கும்.

2. வங்கிக் கணக்கு இருக்கும் வங்கியிலேயே டீமேட் கணக்கை தொடங்கினால், சலுகைகள் கிடைக்க அதிக வாய்ப்புண்டு.

3. முதல் வருடத்திற்கு ஆண்டு சேவைக் கட்டணத்தை தள்ளுபடி செய்யும் தரகர்களைத் தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும் 2-ம் ஆண்டு கட்டணம், எங்கு குறைவாக உள்ளது என்பதையும் ஆராய வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com