மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக ஆசையா? - இதோ உங்கள் வெற்றிக்கான வரைபடம்!

makeup-industry-tamil
makeup-industry-tamil
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

மேக்கப் (ஒப்பனை) துறையில்  வருமானம் ஈட்ட பல வழிகள் உள்ளன. நம் திறமை மற்றும் அனுபவத்தைப் பொறுத்து இத்துறையில் கணிசமான வருமானத்தைப் பெற முடியும். மேக்கப் துறையில் தொழில்முறைப் பயிற்சி, வலுவான போர்ட்ஃபோலியோ  மற்றும் சமூக ஊடக மார்க்கெட்டிங் மூலம் மாதத்திற்கு 50,000 முதல் 1 லட்சம் வரை வருமானம் குறிப்பாக பிரைடல் மேக்கப்பில் ஈட்ட முடியும். சலூன்களில் பணிபுரிவது அல்லது ஃப்ரீலான்ஸராக (freelancer) திருமணங்கள், ஃபேஷன் ஷூட்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு மேக்கப் செய்து கொடுப்பதன் மூலமும் அதிக லாபம் பெறலாம்.

பிரைடல் மேக்கப்(Bridal Makeup):

இது இத்துறையில் அதிக லாபம் தரும் பிரிவுகளில் ஒன்றாகும். திருமண சீசனகளில் அதிக லாபம் தரும். ஒரு திருமணத்திற்கு பத்தாயிரம் ரூபாய் முதல் கட்டணம் பெறலாம். மணப்பெண் அலங்காரத்துடன் கூந்தல் அலங்காரம் (Hairstyling) மற்றும் புடவை கட்டுதல் (Saree Draping) போன்ற கூடுதல் சேவைகளை செய்து அதிக வருமானம் ஈட்டலாம்.

ஃப்ரீலான்ஸ் கலைஞர் (Freelance Makeup Artist):

சொந்தமாக வாடிக்கையாளர்களை தேடி வீடு அல்லது படப்பிடிப்பிடங்களுக்கு சென்று மேக்கப் சேவையை வழங்குவது முதலீடற்ற சிறந்த வழியாகும். அனுபவம் பெற்ற பின் சொந்தமாக பியூட்டி சலூன் அல்லது ஸ்டுடியோவை ஆரம்பிக்கலாம். அனுபவத்தைப் பொறுத்து அதிக சம்பளம் பெற முடியும். போட்டோ ஷூட்கள், பார்ட்டி மேக்கப், விளம்பரங்கள் மற்றும் ஃபேஷன் ஷோக்கள் மூலம் வருமானம் பெறலாம்.

சலூன்/ஸ்பா வேலை: 

ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இது நிலையான மாதச் சம்பளம் மற்றும் போனஸ் போன்ற வருமானத்தை பெற்று தரும். நிலையான மாத சம்பளத்துடன் வாடிக்கையாளர்களிடமிருந்து டிப்ஸ் மற்றும் கமிஷன் பெறலாம்.

மேக்கப் வகுப்புகள்: 

போதிய அனுபவம் பெற்ற பின், புதியவர்களுக்கு மேக்கப் பயிற்சி அளிப்பதன் மூலம் வருமானம் ஈட்டலாம். சிறிய அகாடமி அல்லது தனிப்பட்ட நேரடி வகுப்புகளை நடத்தலாம். ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம். யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராம் மூலம் டுடோரியல்கள் பதிவேற்றி விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப்கள் மூலம்  சம்பாதிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஸ்மார்ட் முதலீட்டாளரா நீங்கள்? வைப்பு நிதியில் அதிக லாபம் ஈட்டுவது எப்படி?
makeup-industry-tamil

சமூக ஊடகங்கள்: 

இன்ஸ்டாகிராம், யூடியூப் மூலம் மேக்கப் வீடியோக்களைப் பகிர்ந்து, பிராண்ட் விளம்பரங்கள் (Influencer Marketing) மூலம் சம்பாதிக்கலாம்.

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மேக்கப் சாதனங்களை பரிந்துரைப்புதன் மூலமோ அல்லது அவற்றை விற்பனை செய்வதன் மூலமோ கூடுதல் வருமானம் பெறலாம்.

அதிக வருமானம் பெறுவதற்கான வழிகள்: 

அதிக வருமானம் பெறுவதற்கு புகழ்பெற்ற மேக்கப் அகாடமியில் படித்து சான்றிதழ் பெறுவது முக்கியம். இது நம் மீதான நம்பிக்கையை அதிகரித்து அதிக கட்டணம் வசூலிக்க உதவும். சிறந்த படைப்புகளை புகைப்படங்களாக எடுத்து சமூக ஊடகங்களில் பகிரலாம்.

இது அதிக வாடிக்கையாளர்களை பெற்றுத் தரும். லேட்டஸ்ட் ட்ரெண்டுகள் மற்றும் புதிய மேக்கப் நுட்பங்களை கற்றுக்கொண்டு அவற்றை சமூக ஊடகங்களில் பகிரலாம். முக்கியமாக போட்டோ கிராபர்கள், ஃபேஷன் டிசைனர்கள் மற்றும் ஈவென்ட் பிளானர்களுடன் தொடர்பில் இருப்பது அதிக வாய்ப்பு பெற்றுத் தந்து வருமானத்தையும் ஈட்ட உதவும். ஏதாவது ஒரு குறிப்பிட்ட மேக்கப் பிரிவில் நிபுணத்துவம் (Specialisation) பெற்று சிறந்து விளங்கலாம். 

சரியான பயிற்சி மற்றும் திறமையான சந்தைப் படுத்துதல் மூலம் இந்தத் துறையில் மிக விரைவாக முன்னேற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com