பனோரமிக் சன்ரூப் வசதியுடன்...அல்கஸார் கார்ப்பரேட்

ஹூண்டாய் அல்கசார் கார்ப்பரேட் வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது... விலை ரூ. 17.86 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
Hyundai Alcazar
Hyundai Alcazarimg credit - hyundai.com
Published on

ஹூண்டாய் நிறுவனம் கார்கள், பேருந்துகள், டிரக்குகள் மற்றும் பிற மோட்டார் வாகனங்களை தயாரிக்கும் ஒரு பெரிய நிறுவனமாகும். இந்தியாவில், ஹூண்டாய் நிறுவனத்தின் பல மாடல் கார்கள் உள்ளன, அவற்றில் க்ரெட்டா, வென்யூ, ஐ20, ஐ20 என் லைன், வெர்னா, க்ராண்ட் ஐ10 நியோஸ், எக்ஸ்டர் மற்றும் அவ்ரா போன்றவை குறிப்பிடத்தக்கவை. அந்தவகையில் தற்போது ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், புதிய மேம்படுத்தப்பட்ட அல்கஸார் கார்ப்பரேட் வேரியண்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 116 எச்.பி. பவரையும், 250 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. 7 இருக்கைகள் கொண்ட இந்த காரில் புதிய மேம்படுத்தப்பட்ட அம்சமாக குரல் உதவியுடன் கூடிய பனோரமிக் சன்ரூப் இடம் பெற்றுள்ளது.

இதுதவிர, எல்.இ.டி. ஷெட்லாம்ப், டூயல் ஜேன் ஏ.சி., ஆம்பியன்ட் லைட்டிங், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய டிஸ்பிளே, 6 ஏர்பேக்குகள் ஆகிய அம்சங்கள் உள்ளன. வயர்லெஸ் சார்ஜர், இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுப்புற விளக்குகள் ஆகியவையும் உள்ளன.

இதையும் படியுங்கள்:
என்னது! இந்த கார் 360 டிகிரி கோணத்தில் சுழலுமா?
Hyundai Alcazar

எடை குறைவு, எரிபொருள் சிக்கனம், விலை குறைவு கருதி டீசல் வேரியண்டில் இதற்கு முன்பு பனோரமிக் சன்ரூப் வசதி இல்லை. தற்போது வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்காக இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. பனோரமிக் சன்ரூஃப் மிகவும் பெரியது மற்றும் கேபினுக்குள் கூடுதல் வெளிச்சத்தைக் கொண்டுவருகிறது, இது வாங்குபவர்களை ஈர்க்கிறது. பனோரமிக் சன்ரூஃப், குறிப்பாக அல்காசர் போன்ற அதிக பிரீமியம் குடும்ப எஸ்யூவிகளில் அதிக தேவை உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இது அல்கசார் வரிசையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் DCT வேரியண்டாக அமைகிறது. முந்தைய அல்காசர் டீசலுடன் ஒப்பிடும்போது கார்ப்பரேட் மாறுபாடு விற்பனையை அதிகரிக்கும் என்றே சொல்ல வேண்டும்.

ஆரம்ப ஷோரூம் விலையாக அல்கஸார் டீசல் கார்ப்பரேட் வேரியண்ட் சுமார் ரூ.17.87 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் புதிய அல்கஸார் பிரஸ்டீஜ் பெட்ரோல் டி.சி.டி. கியர்பாக்ஸ் வேரியண்ட் ஷோரூம் விலை சுமார் ரூ.18.64 லட்சம். முன்பு பெட்ரோல் பிளாட்டினம் டிரிம்மில் மட்டுமே டி.சி.டி வேரியண்ட் இடம் பெற்றிருந்தது. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.20.94 லட்சம். அதே வசதி கொண்ட புதிய பெட்ரோல் வேரியண்ட் சுமார் ரூ.2.3 லட்சம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய வகையின் அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்டின் முழுநேர இயக்குநரும் தலைமை இயக்க அதிகாரியுமான தருண் கார்க், ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்டில், நாங்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களைக் கேட்டு, அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் எங்கள் தயாரிப்புகளை உருவாக்கி வருகிறோம்.

இதையும் படியுங்கள்:
மாருதி சுசுகியின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்த டாடா மோட்டார்ஸ்!
Hyundai Alcazar

தற்போது குரலில் இயக்கக்கூடிய ஸ்மார்ட் பனோரமிக் சன்ரூஃப் கொண்ட புதிய மேம்படுத்தப்பட்ட அல்கஸார் கார்ப்பரேட் வேரியண்ட் காரை அறிமுகம் செய்துள்ளோம். இந்த புதுப்பிப்புகள் மூலம், தங்கள் வாகனங்களில் செயல்திறன், தொழில்நுட்பத்தை நாடும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக மகிழ்ச்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்’ என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com