மின்சார கார் சந்தையில் புதிய அதிரடி: பெரிய பேட்டரியுடன் களமிறங்கிய புதிய ‘Hyundai Ioniq 5 facelift’!

ஹூண்டாய் நிறுவனம், தனது பிரபல மின்சார SUV மாடலான ஐயோனிக் 5-ன் 2026 பேஸ்லிப்ட் பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Hyundai Ioniq 5 Facelift
Hyundai Ioniq 5 Faceliftimage credit-carwale.com
Updated on

1996-ல் இந்தியாவில் நிறுவப்பட்ட ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகும்.

சென்னையில் உள்ள இருங்காட்டுக் கோட்டையில் உற்பத்தி ஆலையுடன், இது இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் மற்றும் ஏற்றுமதி மையமாக உள்ளது. மேலும் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் பிற நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்கிறது. கிரெட்டா, வென்யூ, எக்ஸ்டர், மற்றும் ஐ20 ஆகியவை இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹூண்டாய் மாடல்களாகும்.

2026-ல் டியூசன் ஃபேஸ்லிஃப்ட் (Tucson Facelift), ஸ்டார்கேசர் (Stargazer), மற்றும் புதிய சாண்டா ஃபே (Santa Fe) போன்ற புதிய மாடல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஹூண்டாய் கார்கள் அவற்றின் நவீன வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு (குறிப்பாக வென்யூ மற்றும் கிரெட்டா) இந்தியாவில் பெயர் பெற்றவை.

இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம், தனது பிரபல மின்சார SUV மாடலான ஐயோனிக் 5-ன் 2026 பேஸ்லிப்ட் பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சுமார் ரூ.55.7 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வந்துள்ள இந்த புதிய மாடல் அதிக ரேஞ்ச் மற்றம் மேம்பட்ட தொழில் நுட்ப அம்சங்களுடன் கவனம் ஈர்க்கிறது. ஹூண்டாய் அயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட், முந்தைய மாடலைவிட அதிக தூரம் பயணிக்கக்கூடிய பெரிய பேட்டரி பேக்குடன் வருகிறது.

இதையும் படியுங்கள்:
டெஸ்லாவின் புதிய வரவு 'Model Y L': இந்தியாவில் முன்பதிவு தொடங்கியது - சிறப்பம்சங்கள் என்ன?
Hyundai Ioniq 5 Facelift

E-GMP பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட ஹூண்டாய் அயோனிக் 5 ஃபேஸ்லிஃப்ட் மாடலில், முந்தைய மாடலில் இருந்த 72.6 kWh பேட்டரிக்கு பதிலாக, பெரிய 84 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் முக்கிய அப்பேட் அதன் 84.0 கிலோ வாட்ஸ் ஹவர் திறன் கொண்ட பேட்டரி பேக் ஆகும். இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 690 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் நீண்ட தூர பயணங்கள் கூட சாத்தியமாகும். இவை அனைத்து அம்சங்களுடன், இந்த எஸ்யூவி இந்திய சந்தையில் கியா EV6, வோல்வோ EX30, BYD சீலியன் 7 மற்றும் BMW iX1 LWB போன்ற மாடல்களுடன் போட்டியிடுகிறது.

இந்த பிராண்ட் புதிய ஸ்கிட் பிளேட்டுகள், வடிவமைப்பில் முன் மற்றும் பின் பம்பர்கள் அலாய் வீல்களுக்கான ஒரு புத்தம் புதிய வடிவமைப்பு, ரியர் ஸ்பாய்லர், பின்புற ஸ்பாய்லர் மற்றும் லைட்டிங் கூறுகளுக்கான வி-கார்னிஷ் போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம் ஐயோனிக் 5-ன் அடையாளமான பாராமெட்ரிக் பிக்சல் லைட்டிங் டிசைன் தொடர்கிறது. இவை அனைத்தும், கிராவிட்டி கோல்ட் மேட், மிட்நைட் பிளாக் பேர்ல், டைட்டன் கிரே மற்றும் ஆப்டிக் ஒயிட் உள்ளிட்ட பெயிண்ட் ஸ்கீம் ஆப்ஷன்களால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

உள்ளமைப்பில் டூயல் 12.3 அங்குல திரைகள், புதுப்பிக்கப்பட்ட ஸ்டீயரிங், வயர்லெஸ் சார்ஜிங், ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் சீட்கள் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சென்டர் கன்சோல் புதுப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் வயர்லெஸ் சார்ஜிங் பேடில் இப்போது வெப்பமூட்டப்பட்ட மற்றும் காற்றோட்டமான இருக்கைகளுக்கான ஃபிசிக்கல் கண்ட்ரோல்கள் இடம்பெற்றுள்ளன. இரட்டை 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டிஸ்ப்ளே கட்டமைப்பு தக்கவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
926 கிமீ ரேஞ்ச் கொடுக்கும் எலக்ட்ரிக் கார்: 85 லட்சத்தில் வெளிவந்த ஆடம்பரத்தின் உச்சம்!
Hyundai Ioniq 5 Facelift

மேலும் கனெக்டட் கார் தொழில் நுட்பம், ஓவர்-தி-ஏர் அப்டேட்ஸ், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே போன்ற நவீன அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. பாதுகாப்பு அம்சங்களாக பார்க்கிங் அசிஸ்ட், மோதல் தவிர்ப்பு வசதிகள் மற்றும் பல ஸ்மார்ட் எச்சரிக்கை அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக, மேம்படுத்தப்பட்ட திருட்டுத் தடுப்புப் பாதுகாப்பிற்காக, ஹூண்டாயின் ப்ளூலிங்க் பிளாட்ஃபார்ம் மூலம் ஒரு புதிய ரிமோட் இமொபிலைசேஷன் அம்சம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com