ஐடிஆர் தாக்கல் செய்தாச்சு... அடுத்து என்ன? ரீஃபண்ட்Status-ஐ செக் செய்வது எப்படி?

Income Tax Refund
Income Tax Refund
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ருமான வரி ரீீஃபண்ட் (Income Tax Refund) விரைவாக கிடைக்க, ITR தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் மின் சரிபார்ப்பை (e-Verification) முடித்து, வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரி பார்க்க (Pre-validate) வேண்டியது அவசியம். வழக்கமாக நான்கு ஐந்து வாரங்களில் ரீஃபண்ட் வரும். தாமதமானால் இ-ஃபைலிங் தளத்தில் நிலையை (Status) சரிபார்த்து மின்னஞ்சலில் ஏதேனும் அறிவிப்பு உள்ளதா என்பதையும் பார்க்கவும்.

பொதுவாக வருமான வரி கணக்கினை தாக்கல் செய்த சில நாட்களிலேயே அந்த நபருடைய வங்கிக் கணக்கில் ரீபண்ட் வந்துவிடும். சிலருக்கு அதே நாளில் கூட அந்தத் தொகையானது ரீபண்ட் ஆகிவிடும். நமக்கு வரவேண்டிய தொகை சிறிய அளவிலான தொகையாக இருந்தால் விரைவில் வந்து சேரும். சற்று அதிகமான தொகை என்றால் வருமான வரித்துறை அதிகாரிகள் கவனமாக நம் கணக்கினை முழுவதுமாக ஆய்வு செய்த பிறகு தான் ரீபண்ட் செய்யப்படும்.

ஒருவேளை நம்முடைய வருமான வரி கணக்கு தாக்கலில் ஏதேனும் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நமக்கு முறைப்படி அது தொடர்பாக தகவல் அளிக்கப்படும். நாம் மீண்டும் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யவேண்டி இருக்கும் அல்லது அவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டி இருக்கும்.

சீக்கிரம் ரீஃபண்ட் பெற முக்கிய வழிகள்:

இ-வெரிஃபிகேஷன்(e-Verification):

ITR தாக்கல் செய்தவுடன் ஆதார் ஒடிபி அல்லது நெட் பேங்கிங் மூலம் உடனே இ-வெரிஃபை செய்யவும். இது ரீபண்ட் செயல்முறைக்கு முதல் படி.

வங்கி கணக்கு சரிபார்ப்பு (Bank Validation):

இ-ஃபைலிங் போர்ட்டலில் நம் வங்கிக் கணக்கு பான் கார்டுடன்(PAN) இணைக்கப்பட்டு, வேலிடேட்(Pre-validate) செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யவும்.

தவறுகளை சரி செய்தல்:

ITRல் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும். அதை சரி பார்த்து உடனே பதில் அளிக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
மிடில் கிளாஸ் குடும்பங்கள் நிம்மதியாக வாழ ஒரு 'பக்கா' பட்ஜெட் கைடு!
Income Tax Refund

முன்கூட்டியே தாக்கல் செய்தல்:

ஜூலை 31 க்கு முன்பு தாக்கல் செய்பவர்களுக்கு விரைவாக ரீபண்ட் கிடைக்கிறது. கடைசி நேரத்தில் தாக்கல் செய்தால் தாமதமாகலாம்.

தொடர்பு தகவல்:

நம் பான் கார்டில் உள்ள முகவரி மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்யவும்.

ரீஃபண்ட் நிலையை சரி பார்ப்பதற்கு வருமானவரி இ-ஃபைலிங் போர்ட்டல்(E-filing portal) மூலம் 'View Filed Returns' பகுதியில் செக் செய்யலாம். பொதுவாக சிறிய தொகைகள் விரைவாகவும், பெரிய தொகைகள் கூடுதல் ஆய்வுக்குப் பின்பும் ரீபண்ட் செய்யப்படும். ஒருவேளை நமக்கு ரீபண்ட் தொகையை வருமானவரித்துறை தாமதமாக வழங்குகிறது என்றால் ஓராண்டிற்கு 6% வட்டி என்ற அளவில் கணக்கிட்டு அந்த வட்டி தொகையும் நமக்கு வழங்கப்படும் என்பதால் ரீஃபண்ட் வரவில்லை என்ற கவலைவேண்டாம்.

logo
Kalki Online
kalkionline.com