லாபம் தரும் பங்கு முதலீடுகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வது எப்படி ?

நம் முதலீட்டு நோக்கம் என்ன, எவ்வளவு காலத்தில் பணத்தை எடுக்க வேண்டும் என்பதைப் பொறுத்து பங்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
stock investments
stock investments
Published on

அதிக லாபம் தரும் பங்கு முதலீடுகள் என்பது என்ன?

அதிக லாபம் தரும் பங்கு முதலீடுகள் என்பது நிறுவனத்தின் நிலையான லாபத்தை அடிப்படையாகக் கொண்டு, சந்தை ஏற்ற இறக்கங்களைத் தாண்டி வளர்ச்சிக்கான திறனைக் கொண்ட பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் ஈட்டப்படும் லாபமாகும். இது ஒரு குறிப்பிட்ட பங்கு அல்லாமல், துறை சார்ந்த பல்வகைப்படுத்தல், நீண்ட கால முதலீட்டுத் திட்டமிடல் மற்றும் நிறுவனத்தின் அடிப்படைகளை ஆராய்வதன் மூலம் அடையப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில் லாபம் பார்க்க பங்குகள் ஒரு சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது. இது குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கங்களை சமாளித்து, நீண்ட காலத்தில் லாபம் பார்க்க உதவிகரமாக இருக்கும்.

அதிக லாபம் தரும் பங்குகளின் வகைகள்:

வளர்ச்சிப் பங்குகள் (Growth Stocks):

வேகமான விற்பனை வளர்ச்சி, லாப வளர்ச்சி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்குதல் மற்றும் AI, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற எதிர்காலப் போக்குகளுடன் இணைந்த நிறுவனங்கள் விரைவாக வளரும் ஆற்றலை கொண்டுள்ளன. எனவே இவை அதிக லாபத்தை ஈட்டக்கூடும்.

இதையும் படியுங்கள்:
நமது முதலீடுகள் ஓநாய்களிடம் மாட்டிக் கொள்ளாமல் எவ்வாறு பாதுகாப்பது?
stock investments

ஈவுத்தொகை பங்குகள் (Dividend Stocks):

நீண்ட காலமாக ஈவுத்தொகையை தொடர்ந்து செலுத்தும் மற்றும் ஈவுத்தொகையை அதிகரிக்கும் திறன் கொண்ட நிறுவனங்கள், வலுவான நிதிநிலை மற்றும் தங்கள் லாபத்தை பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையாக திருப்பித் தரும் நிறுவனங்கள் நல்ல லாபத்தை அளிக்கும். இது முதலீட்டாளர்களுக்கு வழக்கமான வருவாயைத் தருகிறது.

கையடக்கப் பங்குகள் (Small Cap Stocks):

சிறிய சந்தை மூலதனம் கொண்ட இந்த நிறுவனங்கள் எதிர்காலத்தில் பெரிய வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டிருக்கலாம். குறைந்த விலையில் பல பங்குகளை வாங்க அனுமதிப்பதால், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக்கூடிய வாய்ப்பை வழங்குகின்றன.

உயர் விலை பங்குகள் (High-Priced Stocks):

அதிக லாபம் தரும் உயர் விலை பங்குகள் என்பவை, ஒரு நிறுவனம் லாபகரமாக செயல்பட்டு, நிலையான அல்லது வளர்ந்து வரும் வருவாயை ஈட்டி, அதன் பங்குகள் அதிக விலையில் வர்த்தகமாகும் ஒன்றாகும். இவை மிகவும் சிறப்பான மற்றும் அதிக லாபத்தைக் காட்டுகின்றன. ஆனால் முதலீடு செய்ய கணிசமான முதலீடு தேவைப்படும்.

தொழில்துறை தலைவர்கள் (Industrial Leaders):

பொதுவாக தொழில் துறையில் நிலையான செயல்திறன் கொண்ட நிறுவனங்கள்.

எப்படி முதலீடு செய்வது?

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய முதலாவதாக ஒரு டீமேட் (Demat) மற்றும் வர்த்தகக் கணக்கை (trading account) தொடங்க வேண்டும். இதற்குத் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் ஆன்லைன் தரகர்கள் அல்லது வங்கிகள் மூலம் பங்குகளை வாங்கலாம். முதலீடு செய்வதற்கு முன் பங்குகளின் கடந்த கால செயல்திறன், சந்தை போக்குகள் மற்றும் நிறுவனத்தின் அடிப்படை அம்சங்களை ஆய்வு செய்து முதலீடு செய்ய முடிவு எடுக்க வேண்டும்.

முதலீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை:

* நிறுவனம் நல்ல நிதி முடிவுகளை தொடர்ந்து அளிக்கிறதா என்று ஆராய வேண்டும். இது நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் லாபத்தைக் குறிக்கும்.

* உற்பத்தி செலவைவிட அதிகமாக விலை நிர்ணயம் செய்யும் திறன், நிலையான அல்லது வளர்ந்து வரும் லாப வரம்பு போன்றவற்றை ஆராய வேண்டும்.

* சாத்தியமான இழப்பு அபாயங்களைக் குறைக்க, பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் முதலீடு செய்து போர்ட்ஃபோலியோவை பன்முகப்படுத்த வேண்டும்.

* குறைந்த ரிஸ்க் குறைந்த வருமானத்தை அளிக்கும். அதே சமயம் அதிக ரிஸ்க் அதிக வருமானத்தைத் தரலாம். எனவே நம் ஆபத்தை ஏற்கும் திறனுக்கு ஏற்ப பங்கைத் தேர்வு செய்ய வேண்டும்.

* சந்தை ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வணிக நிதி முதலீடுகள் - முக்கியத்துவம் அறிவோமா?
stock investments

* நம் முதலீட்டு நோக்கம் என்ன, எவ்வளவு காலத்தில் பணத்தை எடுக்க வேண்டும் என்பதைப் பொறுத்து பங்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது குறுகிய கால அல்லது நீண்ட கால முதலீட்டுத் திட்டமிடலுக்கு ஏற்ப பங்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com