

பிட்காயின் , டாலர் , தங்கம் ,ரூபாய் இதில் எதில் அதிகமாக முதலீடு செய்தால் அதிக அளவிலான லாபத்தை பெற முடியும் என்பதை பார்க்கலாம். உலக அளவில் அதிக முதலீடுகள் பிட்காயினில் செய்யப்படுகிறது .உலக வர்த்தகம் அனைத்தும் பெரும்பாலும் டாலரில் தான் செய்யப்பட்டு வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு ஏறுவதில்லை. ஆனால், அதை வைத்து எப்படி முதல் முதலீடு செய்யலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா? என்பதையும் பார்ப்போம்.
பிட்காயின்:
முதலீட்டைப் பொறுத்தவரையில் முதல் இடத்தில் அனைவருக்கும் ஞாபகம் வருவது பிட்காயின் தான். பிட்காயின் என்பது ஒரு டிஜிட்டல் வகை முதலீடு, பொதுவாக இதை கிரிப்டோ கரன்சி என்று வகைப்படுத்துவார்கள். பிட்காயினை பொருத்தவரை முதலீடு செய்து விட்டால் போதும், அதன் மதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே சென்று கொண்டே இருக்கிறது. 2010 ஆண்டு வாக்கில் 10 ஆயிரம் பிட்காயின் கொடுத்து ஒருவர் 2 பீஸாக்களை மட்டுமே வாங்க முடிந்தது. பிட்காயினை ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே ஆரம்பிதில் ஏற்றுக் கொண்டன, அது டாலருக்கு மாற்றாக சில இடங்களில் பயன்பட்டது.
2013 ஆம் ஆண்டு 22 டாலருக்கு ஒரு மில்லியன் பிட் காயின்கள் கிடைத்தது. இன்று ஒரு பிட்காயினின் மதிப்பு பத்து லட்சத்தை நெருங்கியுள்ளது. இன்று பத்து பிட்காயின் வைத்திருந்தால் கோடீஸ்வரர் ஆக முடியும். ஆனால் , பிட்காயின் பாதுகாப்பானது அல்ல ,இந்தியாவின் ரிசர்வ் பேங்க் இதை ஆதரிப்பதும் இல்லை. பல கிரிப்டோ கரன்சி நிறுவனங்கள் போலியாக ஆரம்பிக்கப்பட்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றி உள்ளனர். பிட்காயினை பொறுத்தவரையில் அதற்கு கொடுக்கப்படும் ஓவர் ஹைப் மூலம் அதன் மதிப்பு உயர்கிறது. இந்தியர்கள் அதை விற்று விட்டு பணம் பெற சரியான வழிமுறைகள் இல்லை.
அமெரிக்க டாலர்கள்:
உலக நாடுகள் அனைத்தும் வியாபாரத்திற்கு பயன்படுத்துவது யூ.எஸ் டாலர்களை தான். டாலர் அதன் ஸ்திரத் தன்மையால் நீண்ட காலமாக உலகை ஆண்டு கொண்டு இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரையில் டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் , டாலரின் மதிப்பு மிகவும் பொறுமையாக வருடத்திற்கு 1 அல்லது 2 ரூபாய் அளவிற்கு தான் உயர்கிறது.
டாலரில் முதலீடு செய்வது அதிக பலன்கள் அளிக்க வாய்ப்புகள் இல்லை. பண வீக்கத்திற்கு தகுந்தவாறு தான் அதன் மதிப்பும் உயர்கிறது. அதனால் டாலர் பெரிய லாபமும் தருவது இல்லை , அதனால் , நஷ்டமும் ஏற்படுவது இல்லை. தற்போதைய சூழலில் ரஷ்யா , சீனா , இந்தியா ஆகிய நாடுகள் டாலரை ஓரங்கட்ட முயற்சிகள் செய்து வருகின்றன.எதிர் காலத்தில் டாலரின் மதிப்பு குறைய அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்திய ரூபாய் :
டாலரை போல ரூபாயின் மதிப்பு உயர்வதில்லை என்று நாம் அறிவோம்.வெளிநாட்டு கரன்சிக்கு எதிராக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே தான் வருகிறது.இதில் எப்படி ரூபாய் மீது முதலீடு செய்யலாம் என்று யோசிக்கலாம்.ரூபாயின் முதலீடு என்பது நாம் வங்கிகளில் பிக்ஸட் டெபாசிட் செய்வது போன்ற முதலீடுகளில் பாதுகாப்பான முறையில் லாபம் பெற முடியும்.மற்றபடி ரூபாயை அதிகம் சேர்த்து வீட்டு லாக்கரில் பூட்டி வைப்பதால் நஷ்டம் தான் ஏற்படும் .
தங்கத்தில் முதலீடு:
இருப்பதிலேயே சிறப்பான முதலீடு என்பது தங்கம் தான். இந்த ஆண்டு தொடக்கத்தில் 60 ஆயிரம் ரூபாய் அருகில் இருந்த தங்கத்தின் விலை, இந்த ஆண்டு முடியும் முன்னரே 1 லட்ச ரூபாயை தாண்டியுள்ளது. மிகவும் அதிவேகமாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. தங்கம் ஆதி காலத்தில் இருந்தே பாதுகாப்பான ஒரு முதலீடாக இருந்துள்ளது. இப்போதும் தங்கம் பாதுகாப்பான முதலீடாக தான் இருக்கிறது.
நாட்டின் பொருளாதாரத்தையே தங்கம் தான் நிர்ணயம் செய்கிறது. அதனால் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்தது. சமீபத்தில் தங்கம் விலை இறங்கினாலும் அது ஏறிய வேகத்தை கணக்கிட்டால் பெரிய குறைவும் அல்ல. இரண்டு உலகப் போரை சந்தித்த பின்னரும் கூட தங்கத்தின் மதிப்பு எப்போதும் குறைவது இல்லை. சில நேரங்களில் தற்காலிக இறக்கங்கள் இருக்கலாம் , ஆனால் , நஷ்டப்படுத்தும் அளவிற்கு இருந்தது இல்லை. தங்கத்தை ஆபரணமாக வாங்குவதை விட காயின் அல்லது பிஸ்ட்கட்டாக வாங்குவது தான் விற்பனை செய்யும் அதிக லாபம் தரும்.