மனித வாழ்க்கையின் அனுபவங்களையும் நினைவுகளையும் பதிவு செய்யும் பழக்கம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வந்தாலும், அதற்கான சரியான வடிவத்தை முதன்முதலில் உருவாக்கியவர் ஜான் லெட்ஸ் ஆவார். 1816-ஆம் ஆண்டு லண்டனில் அவர் உருவாக்கிய டயரி (John Letts diary), வணிகக் கணக்குப் பதிவு, தினசரி வேலைத் திட்டம், மற்றும் தனிப்பட்ட குறிப்புகள் அனைத்தையும் ஒரே புத்தகத்தில் இணைத்த முதல் முயற்சியாக அமைந்தது. அந்த சிறிய முயற்சிதான் இன்று உலகம் முழுவதும் பிளானர், காலண்டர், நோட்புக் ஆகியவற்றின் அடிப்படை வடிவமாக வளர்ந்துள்ளது.
லண்டனில் பேப்பர் கடை வைத்திருந்த ஜான்லெட்ஸ், 1816-ல் உலகின் முதலாவது வணிக ரீதியான டயரியை வெளியிட்டார். இதில் தினசரி குறிப்புகள், கணக்குப் பதிவு, சந்தைத் தகவல்கள் இடம் பெற்றன.
19ஆம் நூற்றாண்டு டயரி யூரோப் முழுவதும் பிரபலமானது. அது Letts of London என்ற பெயர் பிராண்டாக நிலைத்தது. வணிகர்களுக்காக சிறப்பு “அக்கவுண்ட் டயரிகள்” உருவாக்கப்பட்டன.
20ஆம் நூற்றாண்டு தனிப்பட்ட நபர்கள் பயன்படுத்தும் டயரிகள் (personal diaries) அதிகம் வெளியிடப்பட்டன. பள்ளி, அலுவலகம், அரசு துறைகள் வரை Letts டயரிகள் பரவின. உலகப்போரின்போது கூட, படைவீரர்கள் தங்கள் அனுபவங்களை Letts டயரிகளில் பதிவு செய்தனர்.
21ஆம் நூற்றாண்டு (இன்று வரை) பாரம்பரிய காகித டயரிகளுடன் சேர்த்து, டிஜிட்டல் காலண்டர்கள், பிளானர்கள் வடிவங்களில் Letts நிறுவனம் மாற்றமடைந்தது. இன்று “Letts of London” இன்னும் இயங்கிக் கொண்டு உலகம் முழுவதும் விற்பனையாகிறது.
1816-ல் லண்டனில் சிறிய காகிதக் கடையில் தொடங்கி, 19ஆம் நூற்றாண்டில் உலகளாவிய வளர்ச்சி அடைந்து 20ஆம் நூற்றாண்டில் தனிப்பட்ட & அலுவலக பயன்பாட்டுக்கு வந்து இன்று டிஜிட்டல் காலத்திலும் பிராண்டாகத் திகழ்கிறது.
பழைய ஜான் லெட்ஸ் டயரியின் (1816 காலத்தில்) மாதிரி பக்கங்கள்
வடிவமைப்பு: அந்தக் காலத்தில் டயரி சிறிய புத்தகம் போல இருந்தது. கையடக்கமாக (pocket size) வைத்துச் செல்லக்கூடிய அளவில். தோல் (Leather) அல்லது கடின அட்டைப் (Hard cover) பைண்டிங் உடன் வெளியிடப்பட்டது.
பக்க அமைப்பு: ஒவ்வொரு பக்கத்திலும் நாள், மாதம், வருடம் குறிக்கப்பட்டு இருந்தது. காலை முதல் மாலை வரை நேரங்கள் பிரிக்கப்பட்டிருந்தன. வணிகர்கள் சந்தை வேலை, வாடிக்கையாளர் சந்திப்பு, வர்த்தகச் செயல்கள் பதிவுசெய்ய இடம் இருந்தது. அன்றைய வருவாய், செலவு குறிக்க சிறிய பாகங்கள். வியாபாரிகளுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்டது.
வானிலை, முக்கிய நிகழ்வுகள், தனிப்பட்ட நினைவுகள் எழுதும் இடத்தில் பலர் பயண அனுபவம், சந்தை நிலை, குடும்ப சம்பவங்களை பதிவு செய்தனர்.
சிறப்பு அம்சங்கள்:
வர்த்தகக் காலண்டர் (Commercial calendar): இதில் முக்கிய சந்தை தினங்கள், பங்கு சந்தை விவரங்கள், அந்நாளைய வரி, சட்ட விதிமுறைகள் பற்றிய சுருக்கங்கள், அன்றைய வெப்பநிலை, மழை, காற்று குறிப்பு அனைத்தும் இடம் பெற்றுள்ளது.
பயன்பாடு: வணிகர்கள் தினசரி கணக்குப் புத்தகமாகவும், மாணவர்கள் & அரசு அதிகாரிகள் நேர அட்டவணையாகவும், சிலர் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களைச் சொல்வதற்கும் பயன்படுத்தினர்.
ஜான் லெட்ஸ் உருவாக்கிய டயரி, மனிதனின் சிந்தனைகள், செயற்பாடுகள், மற்றும் அனுபவங்களை ஒழுங்குப்படுத்திக் காப்பாற்றிய வரலாற்று கண்டுபிடிப்பாகும். காலத்தோடு காகிதத்திலிருந்து டிஜிட்டல் வடிவத்திற்குச் சென்றாலும், தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு பதிவு செய்யும் வழக்கத்தை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்திய அடித்தளமாக ஜான் லெட்ஸ் டயரி என்றும் நினைவுகூரப்படுகிறது.