
ஆசியாவிலேயே பணக்கார கிராமம் இந்தியாவில், குஜராத்தில் உள்ளது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் பூஜ் நகருக்கு அருகே உள்ள மாதப்பூர் கிராமம் தான் இந்த பணக்கார கிராமம்.
ஆரம்பத்தில் 32,000 மக்கள் தொகை கொண்ட கிராமமாக இருந்தது தற்போது 92 ஆயிரம் மக்கள் கொண்ட கிராமமாக உள்ளது. முன்னர் குஜராத் என்றால் நினைவுக்கு வருவது டேப்லா, டோக்கலா, கிர் தேசிய பூங்கா, துவாரகேஷ் கோவில் ஆகியன தான். ஆனால் அந்த விஷயங்களை எல்லாம் இந்த கிராமம் தூக்கி சாப்பிட்டு விட்டது.
இந்த கிராமத்தில் உள்ள 75% மக்கள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, அரபு நாடுகள், பிரிட்டன், வளைகுடா நாடுகள் போன்றவற்றில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களது வருமானம் இங்குள்ள 17 வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகையாக, 7000 கோடி தொகையுடன் உலகத்தில் முன்னணியில் உள்ளது. உலகமே வியந்து பார்க்கக்கூடிய அளவில் உள்ளது.
1993 முதல் இவர்கள் இந்த நிலையை எட்டி உள்ளனர். இந்த கிராமத்தில் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது கிளைகளை திறந்து உள்ளனர். அதில் தனியார் வங்கிகள், ஆக்சிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ, ஹச்.டி.எஃப்.சி, யூனியன் பாங்க் போன்றவையும் அடங்கும்.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் இங்குள்ள நபர்கள் மூலம், இந்த கிராமத்தில் கல்வி சுகாதாரம், குடிநீர் வசதி, பள்ளி கல்லூரிகள், மருத்துவமனைகள், சாலை வசதி, மின் வசதி ஏற்படுத்தி கொடுத்து உள்ளனர்.
எண்பது சதவீதம் உள்ள வீடுகளில் சோலார் மின் உற்பத்தி உள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் சுமித்ரி சமூகம் இந்த கிராமத்தை உருவாக்கினர். அதன் பின்னர் பல சமூகத்தினரும் இவர்களுடன் இணைந்து கொண்டனர் .
1968 ஆம் ஆண்டு மாதாபூர் கிராம அமைப்பு தொடங்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரில் இங்குள்ள விமான நிலையம் சேதமடைந்தது. அப்போது இங்கு இருந்த 300 பெண்கள் சேதமடைந்த இந்த விமான நிலையத்தை 72 மணி நேரத்தில் சரி செய்தனர்.
இந்த செயலை பாராட்டும் வகையில் 2018 ஆம் ஆண்டு இந்திய அரசு இங்கு ஒரு போர் நினைவுச் சின்னம் அமைத்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் சராசரியாக 15 லட்சம் முதல் இருபது லட்சம் வரை சேமிக்கிறார்கள். இந்த கிராமத்தில் பட்டேல் சுமித்ரி சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் கட்டுமானத்துறையில் சிறந்து விளங்கிவருகிறார்கள்.
இவர்களின் நிதி சேமிப்பு சர்வதேசத்தை உற்றுநோக்கி உள்ளது . இங்குள்ள பெரும்பாலான மக்கள் NRI ஆக உள்ளனர். வீட்டுக்கு வீடு ஆடம்பர கார்கள் கண்டிப்பாக இடம் பெறும்.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏழாயிரம் கோடி ரூபாயை இங்கு உள்ள வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகையாக வைத்து இங்குள்ள மக்கள் பாதுகாத்து வருகிறார்கள்.
இதன் மூலம் சர்வதேச அளவில் இந்த கிராமம் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றால் மிகையாகாது. இது இந்தியாவுக்கு கிடைத்த பெருமைதானே!