

பணத்தைச் சேமிப்பது என்பது வெறும் எண்ணிக்கையின் விளையாட்டு அல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி. ஜப்பான் நாட்டின் முன்னோடியான பெண் ஊடகவியலாளர் ஹானி மொதோகோ உருவாக்கிய 'காக்கெய்போ' (Kakeibo) எனப்படும் நிதி மேலாண்மை முறை, பணத்தை எவ்வாறு சிந்தனையுடன் பயன்படுத்தி, மனஅமைதியுடனும் திட்டமிட்டவாறும் சேமிக்கலாம் என்பதை கற்றுக்கொடுக்கும் ஒரு கலை.
1904-ஆம் ஆண்டில் தோன்றிய இந்த முறை, இன்றும் உலகம் முழுவதும் பொருளாதார ஒழுக்கத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. பணம் வருவது இயல்பு, ஆனால் அதைச் சிறப்பாக கையாளும் அறிவை வழங்கியவர் தான் ஹானி மொதோகோ.
Hani Motoko 'Kakeibo' (The Japanese Art of Saving Money) என்ற முறையை உருவாக்கி, குடும்ப வரவு-செலவுகளை திட்டமிட்டு வைத்திருப்பதில் மற்றும் சேமிப்பில் உதவினார்.
Kakeibo (காக்கெய்போ) முறை:
Kakeibo என்பது நேரடியாக 'குடும்ப நிதி பதிவேடு' என மொழி பெயர்க்கப்படுகிறது. இது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் முக்கிய கட்டளைகள் என்ன என்பதையும் பார்க்கலாம்.
முக்கிய அம்சங்கள்: மாத தொடக்கத்தில் உங்கள் மாத வரவு (income) மற்றும் மாதம் செலவாக கூடிய செலவுகள், குறித்த பதிவுகளை எழுதுங்கள். இந்த வரவிலிருந்து மாற்ற முடியாத செலவுகளை கழித்து, மீதமுள்ள பணத்தை சேமிக்க அல்லது செலவழிக்க திட்டமிடலாம். ஜப்பான் மக்கள் ஒவ்வொரு ரூபாயும் (Coins) எங்கே போகிறது என்பதில் தெளிவாக இருப்பார்கள். இந்த ஒரே ஒரு நோக்கம் தான் இந்த Kakeibo வின் மிகப்பெரிய மைண்ட் செட்.
செலவுகளை நான்கு பிரிவுகளில் வகைப்படுத்தவும்:
அவசியங்கள் – அடிப்படை வாழ்க்கை செலவுகள்.
விருப்பங்கள் - வாழ்க்கையை சிறிது ரசிக்க உதவும் செலவுகள்.
கலாச்சார செலவுகள் – படிப்பு, கலை-மொழி சம்பந்தமானவை.
எதிர்பாராதவை – உடனடி சரிசெய்தல்கள், அவசரச் செலவுகள்.
மாதம் முடிவில் மதிப்பாய்வு
நான் எவ்வளவு பணம் வைத்திருக்கிறேன்?
எவ்வளவு சேமிக்க நினைக்கிறேன்?
எவ்வளவு செலவு செய்துள்ளேன்?
எப்படி நன்றாக செய்வது?
என்று நான்கு கேள்விகளில் தன்னைத் தாக்கிக்கொள்ளுங்கள். கடந்த மாத செலவுகளைப் பார்வையிட்டு, அடுத்த மாதத்திற்கு மேம்படுத்தும் வகையில் திட்டமிடுங்கள்.
முக்கிய மனப்பான்மைகள்:
சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது தவறான விடைகளை 10 முறை imposition எழுத சொன்ன காரணமே நம் மூளையில் அந்த விடைகள் நன்கு பதிவதற்காகத் தான். Kakeibo இன்று வரைக்கும் அதை தொடர்ந்து செய்வதால் தான் அவர்களால் பணத்தை சேமிக்க முடிகிறது. எழுத்து மூலம் பதிவுசெய்தல் (Pen & Paper) முக்கியம். அது செலவுகளை சரியாக உணர்ச்சியுடன் பார்த்து விட உதவுகிறது. செலவு செய்யும் முன் 'நான் இதை உண்மையில் விரும்புகிறேனா?, பயன்படுத்தப் போகிறேனா?' போன்ற கேள்விகளை கேட்க வேண்டும். 'சிறப்பாக செலவிடுதல்' வழியாக 'சேமித்தல்' என்பது இந்திய சூழலுக்கு பொருத்தமான ஒன்றாகும். மாத வரவு, முழு செலவுகள், சேமிப்பு இலக்கு என்று தமிழ் மொழியிலும் தயார் செய்யலாம்.
ஸ்மார்ட் போனில் செயலிகள் அதிகம் இருந்தாலும் நாமாக எழுதுவதில் மூலம் பதிவேடு செய்வது மனதில் நிறைவானதும் அறிவு பூர்வீகமாகவும் இருக்கும்.
மாதம் முடிவு நாளில் செலவுகளைப் பார்வையிட்டு, அடுத்த மாதத்திற்கான இலக்குகளை வகுக்கலாம்.
'விருப்பங்கள்' மற்றும் 'அவசியங்கள்' என்ற பிரிவுகளில் செலவுகளை பிரித்து சிந்தித்தால், அதிக செலவு செய்யாமல் கட்டுப்படுத்த முடியும். முதலில் சிறிய இலக்குகள் (மாதம் 5000 ரூபாய், 10000 ரூபாய்) வைத்துப் தொடங்கி, வெற்றியை அனுபவித்து பிறகு அதிகமாய் செல்லலாம்.
Hani Motoko-வின் Kakeibo முறை சேமிப்பு மட்டும் அல்ல. அதன் மூலம் வாழ்வில் மனஅமைதியும் கட்டுப்பாடும் கொண்டு வருதல் என்பது தான். 'எப்போதும் சேமிக்க முடியுமா?' என்பது பதில் அல்ல; 'எப்படி நன்றாக செலவிட்டு, எங்கு சேமிப்பது?' என்பதை எண்ணுவதே முக்கியம்.
