
1967-ல் நிறுவப்பட்ட ஹூண்டாய் நிறுவனம் தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு வாகன உற்பத்தியாளர் நிறுவனமாகும். ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் செயல்படும் இதன் துணை நிறுவனமாகும். ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் நடுத்தர மக்களின் வசதிக்காக இந்திய சந்தையில் நிறைய பட்ஜெட் கார்களையும் அறிமுகம் செய்துள்ளது.
அவ்வகையில், ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் அம்சங்கள் நிறைந்த ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்:
ஹூண்டாய் ஐ20 கார் 16 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில் அதி நவீன வசதிகளுடன் கிடைக்கிறது. இந்த காரில் புதிய பம்பர் அமைப்பு, புரொஜெக்டர் பனி விளக்குகள், பெரிய ஏர் இன்டேக் அமைப்பு, முன்புறத்தில் கருப்பு வண்ண ஸ்கர்ட் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.
இதில் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மாடல் லிட்டருக்கு 20.35 கிமீ மைலேஜையும், ஐவிடி ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 19.65 கிமீ மைலேஜையும் வழங்குகிறது. இந்த காரின் டிசைன், வசதிகள் என அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் பெரிய அளவில் நிறைவை தரும். இதன் விலை ரூ.6.80 லட்சம்(எக்ஸ்-ஷோரூம்).
சென்னையில் ஹூண்டாய் ஆரா விலை ரூ.5.98 லட்சம் இருந்து தொடங்குகிறது. குறைந்த விலை மாடல் ஹூண்டாய் ஆரா இ மற்றும் டாப் மாடல் விலை ஹூண்டாய் ஆரா எஸ்எக்ஸ் சிஎன்ஜி விலை ₹8.42 லட்சம்.
பட்ஜெட் குறைவாக கார் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த காரில் உள்ளன. இந்த காரின் சிஎன்ஜி வேரியன்ட் லிட்டருக்கு 28 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. இது ஆறு மோனோடோன் கலர்களில் கிடைக்கிறது. இதில் 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், உயரம் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவை உள்ளன.
ஹூண்டாய் எக்ஸ்டர் 1.2 லி பெட்ரோல் இன்ஜினுடன் AMT மற்றும் CNG ஆப்ஷனுடன் வருகிறது. இந்த காரில் பவர் டெலிவரி மிகவும் மென்மையானது மற்றும் ஆக்சலரேஷனும் சீராக இருக்கிறது. கிளட்ச் இலகுவானது, கியர் ஸ்லாட்டை எளிதாக மாற்றுகிறது மற்றும் வாகனம் ஓட்டும் வசதி எளிமையானதாக இருக்கிறது.
டாஷ்கேம் மற்றும் சன்ரூஃப் போன்ற பிரத்யேக அம்சங்களுடன் கூடிய சிறப்பான அம்சங்கள் இந்த காரில் இடம்பெற்றுள்ளது. இதில் உள்ள பூட் ஸ்பேஸ் மிகவும் அகலமாகவும் நீளமாகவும் இருப்பதால் நீங்கள் பெரிய லக்கேஜ்களையும் இந்த காரில் ஏற்றலாம். ஹூண்டாய் எக்ஸ்டரை ஏழு வேரியன்ட்களில் வழங்குகிறது. ஹூண்டாய் Exter ஆரம்ப விலை ரூ.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஹூண்டாய் Grand i10 Nios மிகவும் வசதியாகவும் சிறந்த பயண அனுபவத்தையும் தரும். காரின் கேபின் வெளிர் நிற உட்புற தீம், மிகவும் காற்றோட்டமான உணர்வை தருகிறது. ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட்டின் சிறப்பம்சங்கள், ஸ்மூத்தான 8 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமெட்டிக் ஏசி மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் ஆகியவை அதிநவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் Grand i10 Nio ஆரம்ப விலை ரூ.5.47 லட்சம் முதல் ரூ. 7.92 வரை (எக்ஸ்-ஷோரூம்).
ஹூண்டாய் i20 N லைனின் செயல்திறன் மிக்க ஸ்டைலிங் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தின் சரியான சமநிலை, ஒவ்வொரு பயணத்தையும் வேறு எந்த அனுபவத்தையும் விட சிறந்ததாக மாற்றுகிறது. நீங்கள் ஒவ்வொரு முறை வாகனம் ஓட்டும்போதும் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. i20 N லைன் நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது: தண்டர் ப்ளூ, ஃபயரி ரெட், டைட்டன் கிரே மற்றும் போலார் ஒயிட். இது 8.0-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் புளூடூத் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் வழங்குகிறது.
இதில் உள்ள பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் தெளிவான மற்றும் துல்லியமான ஆடியோ தரத்தை வழங்குகிறது. இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் கிடைக்கிறது, மேலும் இது 6.4 வினாடிகளில் மணிக்கு 0-60 கிமீ வேகத்தை எட்டும். இந்த கார் எரிபொருள் திறன் கொண்டது, லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது. ஹூண்டாய் i20 N-Line ஆரம்ப விலை ரூ.9.15 லட்சம்(எக்ஸ்-ஷோரூம்).
இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இதில் 1.5லி 4 சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 116 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்னுஷன்களில் கிடைக்கிறது.
அடுத்தாக மைலேஜை பொருத்தவரை ஹூண்டாய் வென்யூ காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வேரியன்ட் 20.99 கி.மீ மைலேஜையும், 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் வேரியன்ட் 17.9 கி.மீ மைலேஜையும் வழங்குகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.7.90 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.