அதிரடியாக குறையும் கார்களின் விலை... எந்த கார்களின் விலை எவ்வளவு குறையும்? முழு அட்டேட்..!

புதிய வரிவிதிப்பில் குறைக்கப்பட்டுள்ள கார்கள் மீதான ஜிஎஸ்டி வரியால், இனி கார்களின் விலைகள் குறைய வாய்ப்புள்ளதால் நடுத்தர மக்களின் கார் வாங்கும் கனவும் நனவாகிப்போகிறது.
Prices of cars to drop dramatically
Prices of cars to drop dramatically
Published on

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், கடந்த 3-ம்தேதி நடந்த ஜிஎஸ்டிகவுன்சில் கூட்டத்தில், சாமானிய மக்கள் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. இந்த அதிரடி வரிக்குறைப்பு இந்திய மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

சாமானிய மக்கள் தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி, மின்னணு சாதனங்கள், காப்பீடு போன்ற பலவற்றிற்கும் சலுகைகள் வழங்கப்பட்டிருப்பது அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதேபோல் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கார்கள் மீதான வரியும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்திய கார் சந்தையில் ஒரு புதிய விடியல் பிறக்கவிருக்கிறது என்றே சொல்லலாம். இந்த வரிச் சீர்திருத்தம், வாகனங்களின் விலையை குறைத்து, நுகர்வோர் மத்தியில் தேவையை அதிகரித்து, ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறைக்கும் புத்துயிர் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஜிஎஸ்டி சலுகை: ரெஸ்டாரன்ட் போனாலும், விமானத்தில் பறந்தாலும் இனி சேமிக்கலாம்!
Prices of cars to drop dramatically

இந்த வரி குறைப்பால் தொடக்கநிலை பைக்குகள் மற்றும் கார்களின் விலைகள் குறைய வாய்ப்புள்ளதால் நடுத்தர மக்களின் கார் வாங்கும் கனவும் நனவாகிப்போகிறது. மறுசீரமைக்கப்பட்ட புதிய ஜிஎஸ்டி வரியானது செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய வரி விதிப்பால் எந்தெந்த கார்கள் மீது எவ்வளவு வரி தற்போது விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை சற்று விரிவாக இங்கே பார்க்கலாம்.

சிறிய கார்கள் மீதான வரியும் குறையும் விலையும்:

மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், மஹிந்திரா XUV 3XO, டாடா நெக்ஸான், ஸ்கோடா கைலாக் உள்ளிட்ட சப்-காம்பேக்ட் கார்கள் மற்றும் அதற்கு கீழ் விற்பனை செய்யப்படும் சிறிய கார்களுக்கு தற்போது விதிக்கப்படும் 28% வரியானது 18% ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, 4 மீட்டர்களுக்கும் (4,000 மிமீ) குறைவான நீளம் கொண்ட, 1,200 சிசி அல்லது அதற்கும் கீழ் உள்ள பெட்ரோல் & பெட்ரோல் ஹைபிரிட், எல்பிஜி, சிஎன்ஜி கார்கள், அதேபோல் 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளத்துடன், 1,500 சிசி அல்லது அதற்கும் கீழான டீசல் & டீசல் ஹைபிரிட் சிறிய கார்கள் மீது செப்டம்பர் 22-ம்தேதி முதல் தற்போது விதிக்கப்படும் 28% வரியில் இருந்து 18% வரம்பிற்கு கொண்டு வரப்படும்.

இதையும் படியுங்கள்:
12%, 28% ஜிஎஸ்டி நீக்கம், காப்பீட்டிற்கு ஜிஎஸ்டி இல்லை...எந்தெந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லை தெரியுமா?
Prices of cars to drop dramatically

இதன் விளைவாக, சிறிய கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலை 12 முதல் 12.5% வரை குறைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, ரூ.5,00,000 விலை கொண்ட ஒரு சிறிய ரக கார், புதிய வரி குறைப்புக்குப் பிறகு காரின் விலையில் ரூ.62,500 வரை குறைக்கப்படும். இதனால் நடுத்தர மக்களும் இனிமேல் கார் வாங்க முடியும். இதன்மூலம் வரும் தீபாவளிக்கு கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய கார்கள் மீதான வரியும் குறையும் விலையும்:

ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்டு விட்டாரா, விக்டோரியஸ், எர்டிகா, கேரன்ஸ் எம்பிவி கார்கள், இன்னோவா ஹைகிராஸ், இன்னோவா கிரெஸ்டா, கேம்ரி, இன்விக்டோ, கியா செல்டோஸ், டாடா நிறுவனத்தின் கர்வ், ஹாரியர், சஃபாரி, மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி 700, டொயோட்டாவின் அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ரூமியான், ஃபார்ச்சூனர், லெஜென்டர் உள்ளிட்ட கார்கள் மற்றும் அதற்கு மேலே விற்பனை செய்யப்படும் கார்கள் எல்லாம் பெரிய கார்கள் பிரிவில் வரும்.

இந்தக் கார்கள் மீது இன்ஜின் திறன் மற்றும் காரின் அளவைப் பொறுத்து 48% முதல் 50% வரையில் தற்போது வரை வரி விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தக் கார்கள் மீது ஜிஎஸ்டி வரி என்னவோ 28% தான். ஆனால் இழப்பீட்டு வரி Compensation Cess) கூடுதலாக என 17% வரை விதிக்கப்பட்டு வந்தது.

அதாவது ஒரு மெர்சிடஸ் காரின் விலை ரூ.1 கோடி என்றால், ரூ.50 லட்சம் வரி செலுத்த வேண்டும். இந்த வரி தற்போது மாற்றப்பட்டு இனிமேல் 40% மட்டுமே சொகுசு கார்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளதால் இந்தக் கார்களின் விலையும் குறைவதற்கே வாய்ப்புகள் இருக்கிறது.

அதாவது பழைய வரி விகிதத்தில் 50% வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 40% மட்டுமே வரி செலுத்த வேண்டும். அதாவது ஒரு மெர்சிடஸ் காரின் விலை ரூ.1 கோடி என்றால், ரூ.40 லட்சம் மட்டும் வரி செலுத்தினால் போதும். எனவே புதிய ஜிஎஸ்டி வரி விகிதத்தில் 40 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தாலும் சொகுசு கார்களின் விலை குறையும் என எதிர்பார்க்கலாம்.

முக்கியமாக இன்னோவா, ஹாரியர், உள்ளிட்ட கார்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பில் சொகுசு கார்களுக்கு பெரியளவில் வரி விதிப்பில் மாற்றம் இல்லை என்றே சொல்லலாம்.

அதே நேரம் சில கார்களுக்கு செஸ் வரி மாறுபடும். சில வாகனங்களுக்க 31 சதவீதமாக இருந்த வரி தற்போது 40 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரி:

புதிய வரி விதிப்பின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரியும் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதன் மீதான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இதுவரை விதிக்கப்பட்டு வந்த 5% ஜிஎஸ்டி வரியே இனியும் அப்படியே தொடரவிருக்கிறது. இது மக்களிடையே எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஜிஎஸ்டி வரியில் வரப்போகும் அதிரடி மாற்றம்.. எந்தெந்த பொருட்களின் விலை குறையும் தெரியுமா?
Prices of cars to drop dramatically

பெரும்பாலான கார்களுக்கு விலை குறைய வாய்ப்புள்ள அதேவேளையில் சில கார்களுக்கு மிக குறைவாகவே விலையேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இது விற்பனையை பாதிக்கும் அளவிற்கு அதிகமாக இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் மாருதி, டாடா மற்றும் மஹிந்திரா போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் இந்த வரி குறைப்பால் அதிக லாபம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com