

Loan Repayment: சுதன் சிறிது நாள்களாகவே மிகவும் சோகமாகவும்,குழப்பமாகவும் இருந்தான். இதைப் பார்த்த மதன் என்ன ஆச்சு..? என்று விசாரித்தான்.
சுதன்: அண்ணே..! அதுவா எங்க அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்ததுதா உங்களுக்கு தெரியுமே..!
மதன்: ஆமாண்டா தெரியும் இப்ப உனக்கு என்ன ஆச்சு..?
சுதன்: இல்லண்ணே.. அப்பா பேங்க்ல கொஞ்சம் கடன் வாங்கிட்டாரு..! அத திருப்பி அடைக்கிறதுக்குள்ளேயும் அப்பாக்கு இந்த மாதிரி ஆயிருச்சே..! இப்ப நான் தான் அந்த கடனை அடைக்கணுமா..!
மதன்: டேய் சுதனு, உங்க அப்பா வாங்குனா கடன நீ தான் அடைக்கனும்னு எந்த ஒரு கட்டாயமும் இல்லை.. அதேபோல எந்த ஒரு அவசியமும் இல்லை..!
ஆச்சரியத்தோடு சுதன்: என்னன்ண்ணே சொல்றீங்க..! உண்மையாவா அப்போ நா கடன் அடைக்க தேவை இல்லையா..?
மதன்: இங்க பாரு இப்ப நான் உனக்கு டீடைலா சொல்றேன்..! கேளு, அதாவது உங்க அப்பா ஏதாவது ஒரு தேவைக்காக பேங்க்ல போய் கடன் வாங்கி இருப்பார்ன்னு வச்சுக்கோ.. அந்தக் கடன் எந்த மாதிரி கடனா இருக்குன்னு முதல்ல பாக்கணும்,தனி நபர் கடனா இல்ல வேற ஏதாவது கடனான்னு பாக்கணும்…இப்போ உங்க அப்பா தனிநபர் கடன் வாங்கி இருந்தார்னா அதுக்கு நீ பொறுப்பாக முடியாது,இப்போ உங்க அப்பாவும் தவறிட்டதனால, இந்த கடனை நீ தான் அடைக்கனும்னு எந்த ஒரு அவசியமும் இல்லை..!
சுதன்: ஓ அப்படியாண்ணே..! ஆனா எங்க அப்பா நீங்க சொன்ன மாதிரி பெர்சனல் லோன் தான் வாங்குனாருண்ணே..உண்மையாவே கடனை அடைக்க வேண்டாம் தானே..!
மதன்: டேய் தம்பி..! உங்க அப்பா இப்போ உங்க வீட்டு பத்திரம் இல்ல ஏதாவது ஒரு சொத்தை வச்சு வங்கியில்ல இருந்து கடன வாங்கி இருந்தார்னா.. அந்தக் கடன கட்டாம போகும் போது அந்த வங்கி ஊழியர்களே நீங்க எதை வச்சு கடன் வாங்கினீங்களோ அந்த ப்ராப்பர்ட்டியை ஏலத்துக்கு விட்டுடுவாங்க.. மத்தபடி உங்க அப்பா வாங்குனது பெர்சனல் லோன் தான அதனால நீ அடைக்கணும்கிற எந்த ஒரு தேவையும் இல்ல..!
சுதன்: அண்ணே அதெல்லாம் ஓகே இருந்தாலும் எனக்கு கொஞ்சம் பயமா இருக்குண்ணே..! ஒருவேள பேங்க்ல இருந்து வீட்டுக்கு வந்துட்டாங்கனா..!
மதன்: உங்க அப்பா கடன் வாங்கும் போது அவர்கூட போயி நீ எதுவும் கையெழுத்து போட்டியா..?
சுதன்: இல்லண்ணே.. அவர் கூட நான் போகவே இல்ல..
மதன்: இங்க பாரு மறுபடியும் சொல்றேன்.. உங்க அப்பா பெர்சனல் லோன் வாங்கி இருந்து அவர் கூட போயி கையெழுத்து போட்டாலும் கூட அந்த கடன் உன்னைய சாராது..! சரியா, அதேபோல உங்க அப்பாவே.. என்னோட மகன் கிட்ட இந்த பணத்தை வசூலிச்சுக்கோங்கன்னு கையெழுத்து போட்டாலும் கூட அது செல்லாது..!இனிமே நீ பயப்படாம இருக்கலாம்..! அதே மாதிரி வங்கியில் இருந்து கையெழுத்து போட சொன்னா கூட, நீ உடனே கையெழுத்த போட்டுடக்கூடாது சரியா..அதனால இனிமே நீ பயப்படாம இருக்கலாம்..!
மதன் கூறியதற்கு பிறகு தான் சுதனுக்கு ஒரு தெளிவான மனநிலை வந்தது..!
முக்கிய குறிப்பு: உங்கள் தந்தையோ கணவரோ வாங்கும் பர்சனல் லோனுக்கு நீங்கள் (மகன்/மகள்) பொறுப்பல்ல..! வங்கியானது கடன் வாங்குபவர்களின் எலிஜிபிலிட்டியை பார்த்து தான் கடன் கொடுத்திருக்கும். அவர்கள் வாங்கும் தனிநபர் கடனுக்காக நீங்கள் பொறுப்பேற்க தேவையில்லை. வாரிசிடம் நீங்கள் அந்த பணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று அவர்கள் கையெழுத்து போட்டாலும், அது செல்லாது..! எனவே நீங்கள் அந்த கடனை திரும்ப செலுத்த தேவையில்லை.