குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தே இமிடேஷன் ஜுவல்லரி பிசினஸ்!

ட்ரெண்ட் டிசைன்கள், தரமான புகைப்படங்கள், கவர்ச்சிகரமான பேக்கேஜிங், சரியான டெலிவரி மற்றும் வலுவான பிராண்டிங் மூலம் இமிடேஷன் ஜுவல்லரி பிசினஸை லோ ரிஸ்க், ஹை பிராஃபிட் தொழிலாக மாற்றலாம்.
jewellery-business
jewellery-business
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

நிறைய பேருக்கு மாதச் சம்பளத்தில் வேலை பார்ப்பது பிடிப்பதில்லை. ஏதேனும் ஒரு பிசினஸ் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால் எங்கிருந்து தொடங்குவது, எப்படி தொடங்குவது? நம்மால் லாபகரமாக நடத்த முடியுமா போன்ற சந்தேகங்களும் குழப்பங்களும் ஏற்பட்டு பிசினஸ் தொடங்குவதை தவிர்த்துக்கொண்டே வருவார்கள்.

பிசினஸ் செய்ய ஆசை இருந்தால் மட்டும் போதாது, அதில் தைரியமாக இறங்கவேண்டும். அதற்காக எடுத்த எடுப்பிலேயே அதிக அளவில் முதலீடு செய்து வியாபாரத்தை தொடங்கினால் அது சரியாக ஓடவில்லை என்றால் நஷ்டத்தை சந்திக்க வேண்டிவரும். எனவே அதிக முதலீடு செய்யாமல் சிறிய அளவில் அதாவது குறைந்த முதலீட்டில் தொடங்குவதே நல்லது.

அதிகரித்து வரும் ஃபேஷன் பற்றிய விழிப்புணர்வும், தங்கத்துடன் ஒப்பிடும்பொழுது அதிக விலையின்றி கட்டுப்பாடியாகும் விலையும் செயற்கை நகைகள் வணிகத்தை அதிக லாபம் தரக்கூடியதாக ஆக்குகிறது.

இமிடேஷன் ஜுவல்லரி பிசினஸ் என்பது குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தே தொடங்கக்கூடிய அதேசமயம் அதிக லாபம் தரக்கூடிய ஒரு அருமையான தொழிலாகும். சென்னை போன்ற இடங்களில் சிறிய அளவில் தொடங்கி whatsapp, instagram, பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.

ரூ.5,000 முதல் ரூ.10,000க்குள், குறைந்த முதலீட்டில் சிறிய அளவில் தொடங்கி தேவைக்கேற்ப முதலீட்டை அதிகரிக்கலாம். மொத்த விற்பனையாளர்களிடம் நகைகளை வாங்குவது அதிக லாபத்திற்கு வழிவகுக்கும்.

விற்கும் பொருட்களின் டிசைன் மற்றும் தரத்தைப் பொறுத்து, கொள்முதல் விலையை விட 1.5 முதல் 2.5 மடங்கு வரை லாபம் பெறலாம். முறையான மார்க்கெட்டிங் மூலம் நல்ல லாபம் பெறலாம்.

இதையும் படியுங்கள்:
நீங்களும் முதலாளி ஆகலாம்! புதிய பிசினஸ் தொடங்க சில கோல்டன் டிப்ஸ்!
jewellery-business

தொழிலை தொடங்கும் முறை: 

தற்போதைய ட்ரெண்ட் என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப பொருட்களை தேர்ந்தெடுக்கலாம். டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர் அல்லது நாம் வசிக்கும் ஊரிலேயே உள்ள மொத்த விற்பனையாளர் களிடமிருந்து குறைந்த விலைக்கு நகைகளை வாங்கி இன்ஸ்டாகிராம் பக்கங்கள் அல்லது whatsapp மூலம் புகைப்படங்களை பகிர்ந்து ஆர்டர்களைப் பிடிக்கலாம். 

நகைகளின் நல்ல தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது விற்பனையை அதிகரிக்க உதவும். ஆரம்பத்தில் மிகக் குறைந்த அளவில் பொருட்களை வாங்கி, வாடிக்கையாளர்களின் விருப்பத்தை அறிந்து பின்பு முதலீட்டை அதிகரிப்பதே சிறந்த முறையாகும்.

1 கிராம் தங்கம், குந்தன், ஆக்சிடைஸ் நகைகள்(Oxidized) மற்றும் திருமண நகைகள் (Bridal Jewellery) ஆகியவற்றிற்கு அதிக வரவேற்பு உள்ளது. கவர்ச்சிகரமான பேக்கேஜிங் மற்றும் சரியான நேரத்தில் டெலிவரி செய்வது வாடிக்கையாளர்களை உங்கள் பக்கம் அதிகம் ஈர்க்கும்.

சந்தையை புரிந்துகொண்டவுடன் அதில் தனித்துவமான ஒரு அடையாளத்தை உண்டாக்கி கொள்வது போட்டியாளர்களிடமிருந்து உங்களை தனித்துக்காட்டும். நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் (மணிகள், உலோகம், குந்தன் கற்கள், களிமண் போன்றவை), கவனம் செலுத்தும் பாணி ஆகியவை உங்களுடைய தனித்துவத்தை காட்டும் விதத்தில் இருக்கவேண்டும்.

மூலப்பொருட்கள், கருவிகள், சந்தைப்படுத்தல் மற்றும் பதிவுக் கட்டணங்கள் போன்றவற்றிற்கான செலவுகளை மதிப்பிட்டு அதற்கேற்ப பொருளின் விலையை நிர்ணயிப்பதும், வரவுசெலவு திட்டத்தை உருவாக்குவதும் அவசியம்.

பிராண்டிங் மிகவும் முக்கியம். பிராண்ட் என்பது வெறும் சின்னம் மட்டுமல்ல; அது வலுவான வாடிக்கை யாளர்களை இணைக்கவும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் பெற உதவுகிறது. உங்கள்  கடைக்கு ஒரு நல்ல பெயரை வைத்து அந்தப் பெயரிலேயே நகைகளை விற்பதும், ஆன்லைனில் விற்கும் போது தரமான புகைப்படங்களும் மிகவும் அவசியம். குறைந்த ஆபத்து, அதிக லாபம் தரும் இந்தத் தொழிலை வீட்டிலிருந்தே செய்து அதிகம் சம்பாதிக்கலாம்.

முக்கியமாக ஃபேஷன் மற்றும் ஆபரணத் துறையின் சமீபத்திய போக்குகளுடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருக்க வேண்டியது அவசியம். எந்தப் பாணிகள் பிரபலமாக உள்ளன என்பதை தெரிந்து கொள்வதற்கு சமூக ஊடகங்கள், ஃபேஷன் வலைப்பதிவுகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுடன் இயற்கையை ரசிக்க இதோ சில 'அட்வென்ச்சர்' இடங்கள்!
jewellery-business

சந்தைப்படுத்துதல்தான் அழகான உங்கள் நகைகளை வாடிக்கையாளர்களின் கைகளில் கொண்டு சேர்க்கும். இதற்கு உள்ளூர் சந்தைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சிகளில் பங்கேற்பது, வாடிக்கையாளர்களுடன் நேரில் தொடர்பு கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கும். இது மக்களின் ரசனையைப் புரிந்துகொள்ளவும், நேரடி கருத்துக்களைப் பெறவும், விற்பனையை அதிகரிக்கவும் சிறந்த வழியாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com