
மஹிந்திரா இந்தியாவில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இது முக்கியமாக பயணிகள் வாகனங்கள், எஸ்யூவி, லேசான வர்த்தக வாகனங்கள், டிராக்டர்கள், மின்சார வாகனங்கள், பஸ்கள் மற்றும் டிரக்குகள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. மேலும், நிதி சேவைகள் (Mahindra Finance), தொழில்நுட்பம் (Tech Mahindra), ரியல் எஸ்டேட், உற்பத்தி, மற்றும் விண்வெளி போன்ற துறைகளிலும் ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மஹிந்திரா, உலகிலேயே மிக அதிகமான டிராக்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.
இந்நிலையில் இந்த நிறுவனம் இந்தியாவில் மஹிந்திரா தார் 3-டோர் பேஸ்லிப்ட் கார் (Mahindra Thar 3 door facelift) மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது இதன் வடிவமைப்பு மற்றும் ஓட்டுநர் வசதி அம்சங்கள் அதிநவீன முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாடல் காரில் தார் ராக்ஸ் (Thar Roxx) மாடலில் இருந்து ஈர்க்கப்பட்ட மாற்றங்களுடன் முன்புறம் ப்ரொஜெக்டர் லென்ஸ் கொண்ட வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.
ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆடியோவுடன் கூடிய புதிய 10.25-இன்ச் HD இன்ஃபோடெயின்மென்ட் டச் சிஸ்டம், பிளாக் அவுட் டேஷ்போர்டு மற்றும் பின்புற AC வென்ட்கள், கதவுகளில் பவர் விண்டோ கண்ட்ரோல்கள், எலெக்ட்ரிக் பவர் மூலமாக எரிபொருள் மூடியை திறக்கும் வசதி போன்ற மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மஹிந்திரா தார் 3-டோர் பேஸ்லிப்ட் அம்ச புதுப்பிப்புகளின் அடிப்படையில் பிரகாசிக்கிறது. இந்த என்ஜின் ஆப்ஷன்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.
புதிய தார் பேஸ்லிப்ட், பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களில் கிடைக்கிறது. 2-லிட்டர் பெட்ரோல், 1.5-லிட்டர் டீசல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் என்ஜின்களில் மூன்று பவர்டிரெய்ன் விருப்பங்களுடன் இதைப் பெறலாம்.
மஹிந்திரா நிறுவனம் தாரின் வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு வெளிப்புறத்தில் சிறிய மாற்றங்களை செய்துள்ளது. LED DRLகள், மேட் பிளாக் மற்றும் சில்வர் அம்சங்களுடன் கூடிய இரட்டை-டோன் என புதுப்பிக்கப்பட்ட பம்பர்கள், புதுமையான முன்பக்க கிரில், ஸ்டீயரிங் சக்கரத்தில் வழங்கப்பட்டுள்ள கண்ட்ரோல்கள், 18 அங்குல அலாய் சக்கரங்கள், வீல் ஆர்ச்சுகளுடன் கூடிய புதிய ஹெட்லைட், வைப்பர் மற்றும் டி-பாகர் போன்ற அதிக நவீன மேம்பாடுகள் இந்த புதிய மாடல் காரில் செய்யப்பட்டுள்ளன.
இதில் பாதுகாப்பு அம்சங்களாக இரட்டை ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ESP, HDC, பிரேக் அசிஸ்ட், பின்புறத்தில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, சீட் பெல்ட் நினைவூட்டல் அமைப்பு, பின்புற டிபோகர், வேக எச்சரிக்கை அமைப்பு மற்றும் ஒரு ரோல் கேஜ் போன்ற பாதுகாப்பான பயணத்திற்கான வசதிகள் இந்த காரில் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மஹிந்திரா தார் 3-டோர் பேஸ்லிப்ட் மாடல், ஸ்டீல்த் பிளாக் (Stealth Black), எவரெஸ்ட் ஒயிட் (Everest White), டேங்கோ ரெட் (Tango Red), பேட்டில்ஷிப் கிரே (Battleship Grey), டீப் ஃபாரஸ்ட் (Deep Forest), கேலக்ஸி கிரே (Galaxy Grey) போன்ற ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது.
வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு பல நவீன அம்சங்களுடன் தார் 3-டோர் பேஸ்லிப்ட் மாடல் காரை வடிவமைத்துள்ளது மஹிந்திரா நிறுவனம்.
மஹிந்திரா தார் 3-டோர் பேஸ்லிப்ட் மாடல் ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, மஹிந்திரா தார் காரின் அடிப்படை மாடலின் விலை ரூ. 9.99 லட்சத்தில் தொடங்கி, டாப் மாடல் விலை ரூ. 16.99 லட்சம் வரை (சராசரி எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.