புதிய ‘Citron Yellow’ நிறத்தில் ஜொலிக்கும் மஹிந்திராவின் ‘Thar Roxx Star Edition’...

மஹிந்திரா நிறுவனமானது ‘தார் ராக்ஸ் எஸ்யூவி’ மாடலின் சிறப்பு எடிஷன் மாடலை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது.
Mahindra Thar Roxx
Mahindra Thar Roxximage credit-autocarindia.com
Published on

1945-ல் நிறுவப்பட்ட மஹிந்திரா & மஹிந்திரா (M&M) லிமிடெட், இந்தியாவின் முன்னணி பன்முகத்தன்மை கொண்ட ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமாகும். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், எஸ்யூவி (SUV), டிராக்டர்கள், வர்த்தக வாகனங்கள் மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் உள்ளது.

இந்நிலையில் இந்நிறுவனம் மகிந்திரா நிறுவனம் தார் எஸ்.யூ.வி. வரிசையில் புதிய தார் ராக்ஸ் ஸ்டார் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மெக்கானிக்கலாகவும், வசதிகள் ரீதியாகவும் எந்த வேறுபாடுகளும் இன்றி காஸ்மெடிக் அப்டேட்களுடன் மட்டும் இந்தப் புதிய எடிஷனை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

காஸ்மெடிக்காக வழக்கமான தார் ராக்ஸ் மாடலில் இருந்து உட்புறமும், வெளிப்புறமும் தனித்துவமான டிசைன் அம்சங்களைக் கொண்டு வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் இந்த சிறப்பு எடிஷன் மாடலை உருவாக்கியிருக்கிறது மஹிந்திரா நிறுவனம்.

ஏற்கனவே மஹிந்திராவின் தார் ராக்ஸ் மாடலுக்கு வாடிக்கையாளர்களிடையே அமோக வரவேற்பு இருந்து வரும் நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த ஸ்டார் எடிஷனானது கூடுதல் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படியுங்கள்:
மஹிந்திராவின் ‘XEV 9e pack TWO’ முன்னாடி மத்ததெல்லாம் ஜூஜூபி...
Mahindra Thar Roxx

177 எச்.பி. பவரையும், 380 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் இரண்டிலும் வருகிறது. 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 175 எச்.பி. பவரையும், 400 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆகிய என்ஜின் வேரியண்ட்களில் கிடைக்கும். பெட்ரோல் வேரியண்டில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மட்டும் உள்ளது. சிறப்பு எடிஷன் மாடலில் 4 வீல் டிரைவ் வசதி கொடுக்கப்படவில்லை, ரியர் வீல் டிரைவ் வசதி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏ.எக்ஸ்.7.எல் வேரியண்ட் அடிப்படையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. பளபளப்பான கருப்பு வண்ண கிரில்கள், அலாய் வீல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த தார் ராக்ஸ் மாடலில் அலாய் வீல்கள் கிளாஸ் பிளாக் நிறத்தில் கொடுக்கப்பட்டிருப்பதுடன், ஆங்காங்கே கருப்பு நிற ட்ரீட்மென்டைக் கொடுத்திருப்பது காருக்கு அட்டகாசமான தோற்றத்தைக் கூடுதலாகக் கொடுக்கிறது. மேலும் வழக்கமான தார் ராக்ஸ் மாடலின் உட்புறம் மென் நிறத்தில் இருக்கும் நிலையில், இந்த மாடலில் காரின் உட்புறமும் முழுவதுமாக கருப்பு நிறத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி சிறப்பு எடிஷன் மாடல் என்பதைக் குறிப்பிடும் விதமாக காரின் ‘C’ பில்லரில் ஸ்டார் எடிஷன் பேட்ச் இடம் பெற்றுள்ளது.

இந்த மாடல் மொத்தம் நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. புதிய சிட்ரான் எல்லோ என்ற புதிய மற்றும் தனித்துவமான வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறத்தைத் தவிர்த்து, டாங்கோ ரெட், எவரெஸ்ட் ஒயிட், ஸ்டீல் பிளாக் ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கும்.

LED லைட்டுகள், கருவிகள் மற்றும் இன்ஃப்டோடெயினுக்கான இரண்டு 10.25 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே, மற்றும் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. முன்புறம் காற்றோட்டமான இருக்கைகள், 360 டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூப், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ப்ரீமியமான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூன்று விதமான பவர்ட்ரெயின் தேர்வுகளுடன் தார் ராக்ஸ் ஸ்டார் எடிஷன் மாடல் வெளியாகியிருக்கிறது. இந்திய சந்தையில் புதிய தார் ராக்ஸ் ஸ்டார் எடிஷன் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் சுமார் ரூ.17.85 லட்சம் ஷோரூம் விலையிலும், டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் சுமார் ரூ.16.85 லட்சம் ஷோரூம் விலையிலும் மற்றும் டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் சுமார் 18.35 லட்சம் ஷோரூம் விலையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கார்களின் விலையை உயர்த்தியது மஹிந்திரா நிறுவனம்!
Mahindra Thar Roxx

குடும்பத்துடன் நீண்ட தூரம் பயணம் செல்ல விரும்புபவர்களுக்கும், கரடுமுரமான பாதைகளில் பயணம் மேற்கொள்வதற்கும், குறைந்த விலையில் அட்டகாசமான வசதிகளுடன் கார் வாங்க விரும்புபவர்களுக்கும் இந்த தார் ராக்ஸ் எஸ்யூவி’ மாடல் கார் அட்டகாசமான தேர்வாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com