

மியூச்சுவல் ஃபண்டுகளைத்தாண்டி அதிக லாபம் மற்றும் பன்முகத் தன்மைக்காக பல நவீன முதலீட்டு வழிகள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன. இவை பெரும்பாலும் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களைக் குறைத்து நிலையான வருமானத்தைத் தருகின்றன.
REITs (Real Estate Investment Trusts):
ரியல் எஸ்டேட்டில் நேரடியாக பணத்தை முடக்காமல், சிறு தொகையை முதலீடு செய்து, அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வாடகை வருமானத்தைப் பெறலாம்.
InvITs (Infrastructure Investment Trusts):
சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்து நிலையான வருமானம் பெறலாம். பங்குகளைப் போலவே இவற்றை டீமேட் கணக்கு மூலம் வாங்கி, வாடகை அல்லது வட்டி மூலம் வருமானம் ஈட்டலாம்.
அசட் லீசிங் (Asset Leasing):
பெரிய நிறுவனங்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கி வாடகைக்கு விடுவதன் மூலம் வருமானம் ஈட்டுதல். அல்லது பெரிய நிறுவனங்களுக்கு பொருட்கள் வழங்கிய சிறு வணிகர்களின் நிலுவையில் உள்ள ரசீதுகளை (Invoices) முதலீடாக வாங்கி, குறுகிய காலத்தில் லாபம் பெறுவது போன்ற புதிய முதலீட்டு முறைகள் தற்போது இந்தியாவில் பிரபலமாகி வருகின்றன.
P2P Lending (Peer-to-Peer):
வங்கிகளைத் தவிர்த்து டிஜிட்டல் தளங்கள் மூலம் நேரடியாக தனிநபர்கள் மற்ற தனிநபர்களுக்கோ அல்லது சிறு வணிகங்களுக்கோ கடன் கொடுக்கும் முறை. இது நல்ல வட்டி வருவாயை தரக்கூடியது. தனி நபர்களுக்கு கடன் வழங்குதல் அல்லது சொத்துக்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் வட்டி/வாடகை வருமானம் ஈட்டலாம்.
தனிப்பட்ட ஈக்விட்டி(Private Equity) & நேரடி பங்குச்சந்தை (Direct Equity):
வளர்ந்து வளரும் நிறுவனங்களில்(Startups) நேரடியாக அல்லது ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்யலாம். நல்ல அடிப்படை நிறுவனங்களின் பங்குகளைத் தேர்ந்தெடுத்து நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது.
டிஜிட்டல் தங்கம் (Gold Bonds):
பிசிகல் தங்கம் வாங்குவதற்கு பதிலாக காகித வடிவில் தங்கம் மற்றும் வெள்ளி ETF/SGBல் முதலீடு செய்தல். இது பாதுகாப்பானது மற்றும் எளிதாக விற்கக்கூடியது.
கிரிப்டோகரன்சி மற்றும் டிஜிட்டல் தங்கம் (Cryptocurrencies):
அதிநவீன தொழில்நுட்பத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு பிட்காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள், அதிக ரிஸ்க் மற்றும் அதிக லாபம் தரும் கிரிப்டோ எக்ஸ்சேஞ்சுகள் மூலம் முதலீடு செய்யலாம்.
நவீன முதலீடுகளின் நன்மைகள்:
பாரம்பரிய முதலீடுகளைவிட, குறிப்பாக ஸ்டார்ட்அப் அல்லது கிரிப்டோ போன்ற துறைகளில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
தங்கம், ரியல் எஸ்டேட் போன்ற சொத்துக்கள் மூலம் பண வீக்கத்தை தாண்டிய வருமானம் கிடைக்கும்.
பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து மாறுபட்ட தனித்துவமான முதலீட்டு வாய்ப்புகள்.
போர்ட்ஃபோலியோ பன்முகத்தன்மை.
பங்குச்சந்தையுடன் நேரடி தொடர்பு இல்லாததால், சந்தை சரிவின்போது போர்ட்ஃபோலியோவை பாதுகாக்கிறது.
இந்த நவீன முதலீட்டு வழிகள் ம்யூச்சுவல் ஃபண்டுகளை விட அதிக வருமானம் தந்தாலும், அதிக அபாயங்களையும் கொண்டிருக்கலாம். இவற்றில் முதலீடு செய்வதற்கு முன்பு அதன் அபாயங்களை (risk) நன்கு புரிந்துகொள்வது அவசியம். ஏனெனில் இவை மியூச்சுவல் ஃபண்டுகள்போல முழுமையாக செபி (SEBI) கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கலாம். எனவே நிதி ஆலோசகரின் ஆலோசனைகளைப் பெற்று முதலீடு செய்வது நல்லது.