ரூ.19,800 வரை அதிரடி சலுகைகள்! ‘Suzuki e-Access’ வாங்குவோருக்கு ஜாக்பாட்!

சுசுகி நிறுவனம் அதன் ‘Suzuki e-Access’ என்ற புதிய மின்சார ஸ்கூட்டரை வாங்கினால் ரூ.19,800 வரை சலுகைகளை வழங்குகிறது.
Suzuki e-Access
Suzuki e-Accessimage credit-autocarindia.com
Published on

சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் (Suzuki Motor Corporation) என்பது ஜப்பானை தலைமையிடமாகக் கொண்ட ஒரு முன்னணி பன்னாட்டு வாகன உற்பத்தியாளர் ஆகும். இது கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் படகு மோட்டார்களை தயாரிக்கிறது. இதன் இந்திய துணை நிறுவனமான மாருதி சுசுகி (Maruti Suzuki) இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளராகவும், குறைந்த விலை, அதிக மைலேஜ் கொண்ட கார்களுக்கு பெயர் பெற்றதாகவும் விளங்குகிறது.

சுசுகி நிறுவனம் இறுதியாக இந்திய மின்சார இரு சக்கர வாகன சந்தையில் நுழைந்துள்ளது. இந்நிறுவனம் சுசுகி இ-அக்சஸ் (Suzuki e-Access) என்ற புதிய மின்சார ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

சுசுகி இ அக்சஸ் மாடல் அதிகபட்சமாக மணிக்கு 71 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். சுசுகி இ-ஆக்சஸ் 3.07 kWh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச்(Range) வழங்குகிறது.

இது தினசரி பயன்பாட்டிற்கு போதுமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஸ்கூட்டரை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் நான்கு மணி நேரங்கள் மட்டுமே ஆகும்.

இதையும் படியுங்கள்:
இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட, சகல வசதிகளுடன் கூடிய ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - Honda Activa E
Suzuki e-Access

சுசுகி இ-அக்சஸ் ஸ்கூட்டர் 4.1 kW மோட்டார் மற்றும் 51.2 V பேட்டரி திறனுடன், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றவாறு, ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வெளிவந்துள்ளது.

சுசுகி E-Access, பொதுவாக ஸ்கூட்டர்களில் காணப்படும் NMC பேட்டரிகளுக்கு மாற்றாக LFP (லித்தியம்-இரும்பு-பாஸ்பேட்) பேட்டரியைக் கொண்டுள்ளது. LFP பேட்டரிகள் நீண்ட ஆயுளையும் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கின்றன.

செயல்திறன் அடிப்படையில், சுசுகி இ-ஆக்சஸ் 5.49 bhp மற்றும் 15 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. இது வசதியான மற்றும் மென்மையான சவாரியை ஓட்டுபவருக்கு வழங்குகிறது.

சுசுகி இ அக்சஸ் ஒரு வேரியண்ட் மற்றும் 4 வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும் ஒரு மின்சார ஸ்கூட்டர் ஆகும். முன் டிஸ்க் மற்றும் பின்புற டிரம் பிரேக்குகளுடன், சுசுகி இ அக்சஸ் இரண்டு சக்கரங்களின் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்துடன் வருகிறது.

சுசுகியின் நம்பகமான பெயர் மற்றும் சமநிலையான செயல்திறன் கொண்ட ப்ரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், சுசுகி இ-அக்சஸ் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அக்சஸ் எலக்ட்ரிக் LED ஹெட்லேம்ப், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, பிரேக்கிங் சிஸ்டம்களில் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் போன்றவை உள்ளன. பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஸ்கூட்டரில் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் தரநிலையாக இடம்பெற்றுள்ளது.

சுசுகி இ-ஆக்சஸ், இந்தியாவின் மிகவும் பிரபலமான பிரீமியம் மின்சார ஸ்கூட்டர்களான டிவிஎஸ் ஐக்யூப், ஓலா எலக்ட்ரிக் எஸ்1, பஜாஜ் சேடக் எலக்ட்ரிக் மற்றும் ஏதர் 450 அபெக்ஸுடன் நேரடியாக போட்டியிடுகிறது.

இந்திய சந்தையில் புதிய சுசுகி இ அக்சஸ் மாடல் ரூ. 1.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சுசுகி நிறுவனம், இ-ஆக்சஸ் வாங்கினால் ரூ.19,800 வரை சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகைகள் ஃபைனான்ஸ், நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்(வாரண்டி) மற்றும் பிற போனஸ்கள் வடிவில் வருகின்றன.

இதையும் படியுங்கள்:
பெட்ரோல் வண்டிக்கு குட்பை.! வந்துவிட்டது யமஹாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.!
Suzuki e-Access

சுசுகி வாடிக்கையாளர்கள் இ அக்சஸ் மாடலை வாங்கும் போது ரூ. 10,000 வரை லாயல்டி போனஸ் மற்றும் ரூ.4000 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இ அக்சஸ் ஸ்கூட்டரை வாங்குவோருக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் அல்லது 80,000 கிலோமீட்டர்கள் வரை வாரண்டி பொருந்தும் என்பது சிறப்பு சலுகையாகும். அதேபோல் புதிய வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் அறிமுக போனஸ் ரூ.7,000 வழங்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com