

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) என்பது கார்ப்பரேட் அல்லாத, விவசாயம் அல்லாத சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு ரூபாய் 20 லட்சம் வரை முத்ரா கடன் உதவி வழங்குவதற்காக இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முதன்மை திட்டமாகும்.
இத்திட்டம் உற்பத்தி, வர்த்தகம், சேவைத்துறைகள் மற்றும் விவசாயம் சார்ந்த உபதொழில்களில் (கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை போன்றவை) ஈடுபடும் சிறு வணிகர்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. பிரதம மந்திரி முத்ரா திட்டம் (Pradhan Mantri Mudra Yojana) மூலம் சிறு மற்றும் குறு தொழில்களைத் தொடங்க அல்லது மேம்படுத்த ரூபாய் 10 லட்சம் வரை பிணையமில்லாமல் கடன் வழங்கப்படுகிறது.
பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம் கோழி வளர்ப்பு, பால் பண்ணை, தேனீ வளர்ப்பு போன்ற வேளாண்மை சார்ந்த செயல்பாடுகள் உட்பட, உற்பத்தி, வர்த்தகம் அல்லது சேவைத் துறைகளில் ஈடுபட்டுள்ள, வேளாண்மை அல்லாத துறையில் வருமானம் ஈட்டும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 20 லட்சம் வரையிலான கடன் வழங்க வழிவகை செய்கிறது.
இத்திட்டம் பெருநிறுவனம் சாராத, வேளாண்மை அல்லாத துறையில் வருமானம் ஈட்டும் சிறு, குறு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு நிதி வழங்குகிறது.
முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்கள் வணிகத்தின் வளர்ச்சி மற்றும் தேவையின் அடிப்படையில் நான்கு முக்கிய வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
கடன் வகைகள்:
சிசு (Shishu):
புதிய தொழில் தொடங்க ரூபாய் 50,000 வரை கடன்கள் வழங்கப்படுகிறது.
கிஷோர் (Kishore):
வளர்ந்து வரும் தொழிலை விரிவுபடுத்த 50,000 முதல் ஐந்து லட்சம் (5,00,000) வரை கடன்கள் வழங்கப்படுகின்றன.
தருண் (Tarun):
தொழிலை மேலும் விரிவுபடுத்த 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன.
தருண்+ (Tarun+):
தருண் கடனை வெற்றிகரமாகச் செலுத்திய தொழில் முனைவோருக்கான விரிவாக்கமாக ரூ.10,00,000 முதல் ரூ. 20,00,000 வரை.
முக்கிய அம்சங்கள்:
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வழிகாட்டுதல்களின்படி வட்டி விகிதம் மாறுபடும். பொதுவாக 9.50% முதல் 12% வரை வங்கிகளைப் பொறுத்து மாறுபடும்.
இக்கடனை பெறுவதற்கு எந்த விதமான அடமானம் அல்லது உத்திரவாதம் தேவையில்லை. அதாவது சொத்து அல்லது தனிநபர் பிணையம் தேவையில்லை.
சிசு கடன்களுக்குப் பெரும்பாலான வங்கிகளில் செயலாக்கக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.
வணிகத்தின் தேவையைப் பொறுத்து அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்த கால அவகாசம் வழங்கப்படும்.
பெண் தொழில்முனைவோருக்கு இத்திட்டத்தில் சிறப்பு சலுகைகளும் வட்டி விகிதக் குறைப்புகளும் முன்னுரிமையும் வழங்கப்படுகின்றன.
கடன் பெற தகுதியானவர்கள்:
தனிநபர் அல்லது சுயதொழில் செய்யும் 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள்.
உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் சிறு குறு நிறுவனங்கள், உணவு சேவை அலகுகள், பழுது பார்க்கும் கடைகள், உணவு பதப்படுத்து பவர்கள், கடைக்காரர்கள், பழம்/காய்கறி விற்பனையாளர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் கைவினைஞர்கள் போன்றோர் இக்கடனைப் பெறலாம்.
எங்கு எப்படி விண்ணப்பிப்பது?
அருகிலுள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், கிராமப்புற வங்கிகள், அரசு கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) நிறுவனங்களை அணுகலாம். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
அல்லது அருகில் உள்ள எந்தவொரு வணிக வங்கிக்கும் தேவையான அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் வணிகத் திட்ட விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க மேலாளரை அணுகலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: