ஒரே ஃபண்ட்... மூன்று லாபம்: மியூச்சுவல் ஃபண்டில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது எப்படி?

mutual fund
mutual fund
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ல்டி அசெட் அலோகேஷன் (Multi-Asset Allocation) மியூச்சுவல் ஃபண்டுகள் பங்கு சந்தை, கடன் பத்திரங்கள் மற்றும் தங்கம் ஆகிய மூன்றிலும் முதலீடு செய்வதால், சந்தை ஏற்ற இறக்கத்திலும் நிலையான லாபம் தருகின்றன. இவை ஆபத்தைக் குறைத்து, பங்குகளின் வளர்ச்சி மற்றும் தங்கத்தின் பாதுகாப்பை இணைத்து நீண்டகால முதலீட்டுக்கு சிறந்த தேர்வாக அமைகின்றது.

1) மல்டி அசெட் அலோகேஷனின் முக்கிய அம்சங்கள்:

a) பல்வகைப்படுத்துதல் (Diversification):

ஒரே சொத்து வகுப்பில் (Asset class) முதலீடு செய்யாமல், பங்கு சந்தை சரிந்தாலும் தங்கம் அல்லது கடன் பத்திரங்கள் மூலம் போர்ட்போலியோ பாதுகாக்கப்படும்.

b) 3 சொத்துகள் கட்டாயம்:

செபி(SEBI) விதிகளின்படி, பங்கு, கடன் மற்றும் தங்கம்/கமாடிட்டிகளில் தலா குறைந்தபட்சம் 10% முதலீடு செய்யப்பட வேண்டும்.

c) ஆபத்து மேலாண்மை (Risk Mitigation):

தங்கம் மற்றும் கடன் பத்திரங்கள் இருப்பதால், பங்குச்சந்தை கடும் சரிவை சந்திக்கும் காலங்களில் இந்த ஃபண்டுகள் சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன. குறைந்த ரிஸ்க் சீரான லாபம்.

சந்தை ஏற்ற இறக்கங்களின் தாக்கத்தைக் குறைத்து சீரான வருமானத்தை தரக்கூடியது.

d) நிதியாளர்களின் திறமை:

ஃபண்ட் மேலாளர்கள் சந்தை சுழலுக்கு ஏற்ப பங்குகள், தங்கம் மற்றும் கடனில் முதலீட்டு விகிதத்தை மாற்றி அமைத்து லாபத்தை அதிகரிக்கிறார்கள். கடந்த காலங்களில் இத்தகைய ஃபண்டுகள் 3 முதல் 5 ஆண்டுகளில் சுமார் 25% க்கும் அதிகமான வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளன. (எ.கா: குவாண்ட் மல்டி அசெட் அலோகேஷன் ஃபண்டு)

இதையும் படியுங்கள்:
திடீர் மரணமும் தீராத சொத்து சிக்கலும்: வாரிசு சான்றிதழ் முதல் வங்கி நடைமுறைகள் வரை!
mutual fund

e) பணவீக்க பாதுகாப்பு:

தங்கம் மற்றும் இதர சொத்துகளில் முதலீடு இருப்பதால் பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.

f) வரி நன்மை:

பெரும்பாலான மல்டி-அசெட் ஃபண்டுகள் குறைந்தபட்சம் 65% பங்குச் சந்தையில் முதலீடு செய்வதால், ஈக்விட்டி மீயூச்சுவல் ஃபண்டுக்கான வரி விதிப்பைப் பெறுகின்றன.

g) எளிதான அணுகல்:

பெரும்பாலான மல்டி-அஸெட் ஃபண்டுகள் ஓபன்-எண்டட்( Open-ended) வகை. எனவே எந்த நேரத்திலும் நுழையலாம் அல்லது வெளியேறலாம்.

2) யாருக்கு ஏற்றது?

பங்குச் சந்தையில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத, ஆனால் அதேசமயம் பங்குச் சந்தை வளர்ச்சியைப் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். குறிப்பாக முதல்முறை முதலீடு செய்பவர்களுக்கு மிகவும் ஏற்றது.

நீண்ட காலத்திற்கு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானம் தேவைப்படுபவர்களுக்கு ஏற்றது.

சந்தை ஏற்ற இறக்கங்களை சமாளித்து, நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தைவிட அதிக லாபம் பெற, மல்டி அசெட் அலோகேஷன் ஒரு புத்திசாலித்தனமான முதலீட்டு தேர்வாகும்.

இதையும் படியுங்கள்:
மார்க்கெட் சரிவில் சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் தந்திரம்… நிபுணர்கள் சொல்லும் சூப்பர் அட்வைஸ்!
mutual fund

3) 2026 ஆம் ஆண்டில் முதலீடு செய்ய சிறந்த மல்டி-அசெட் அலோகேஷன் மியூச்சுவல் ஃபண்டுகள் எவை?

Nippon India Multi Asset Fund, ICICI Prudential Multi Asset Fund, SBI Multi Asset Allocation Fund, Quant Multi Asset Fund மற்றும் UTI Multi Asset Allocation Fund ஆகியவை சிறந்த மல்டி-அசெட் ஃபண்டுகளாக கருதப்படுகின்றன.

logo
Kalki Online
kalkionline.com