

பஜாஜின் அடுத்த தலைமுறை பல்சர் 125 (Next-Gen Bajaj Pulsar 125) மோட்டர் சைக்கிள் நாளை (ஆகஸ்ட் 12-ந்தேதி) இந்தியாவில் அதிகாரப்பூர்வமான அறிமுகமாகும் நிலையில், தற்போது டீலர்ஷிப்புகளுக்கு வந்துள்ளது. இது, மேம்படுத்தப்பட்ட கிளாசிக் பல்சர் வரிசையின் அறிமுகமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
இந்தியாவில் புகழ்பெற்ற Bajaj Auto நிறுவனம், உலகின் மூன்றாவது பெரிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாகும். இது பல்சர் (Pulsar), பிளாட்டினா (Platina), டொமினார் (Dominar), சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் (ஆட்டோக்கள்) தயாரிப்பில் புகழ்பெற்றது.
இவர்களின் பைக்குகள் குறைந்த விலையில் அதிக மைலேஜ் தருவதற்கும், உறுதியான செயல்திறனுக்கும் பெயர் பெற்றவை. மேலும் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள நம்பகமான பிராண்ட் ஆகும்.
Bajaj Auto நிறுவனத்தால் கடந்த 2001-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) மோட்டார் சைக்கிள், இந்தியாவின் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக் சந்தையில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த பைக் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றதுடன், இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் பைக்கிங் கலாச்சாரத்தை மாற்றி அமைத்தது.
எதிர்பார்த்தபடியே, புதிய பல்சர் 125-ல் முழுக்க புதிய சேசி1, நவீன வடிவமைப்பு, புதிய ஃபிரேம், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் மற்றும் வண்ண டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் புதிய வடிவமைப்பு, கலர் எல்சிடி (LCD) மீட்டர் மற்றும் புளூடூத் வசதியுடன் இந்த புதிய மாடல் ஷோரூம்களை அடைந்துள்ளது. பழைய இரட்டை ஷாக் அப்சார்பர்களுக்கு பதிலாக புதிய மோனோஷாக் (Monoshock) பின் சஸ்பென்ஷன் கொண்ட முற்றிலும் புதிய மோட்டார் சைக்கிள் ஆகும்.
அந்த பைக், பஜாஜின் தயாரிப்பு வரிசையில் உள்ள மிக முக்கியமான இரண்டு மாடல்களான அடுத்த தலைமுறை பல்சர் 125 அல்லது மேம்படுத்தப்பட்ட பல்சர் 150 ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
புதிய பல்சர் அதன் பழக்கமான கம்பீரமான தோற்றத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் என்றும், ஆனால் மேலும் நவீன மற்றும் பிரீமியம் தோற்றத்துடன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பல்சர் 125-ல் வடிவமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மிகவும் கூர்மையான தோற்றம் மற்றும் புதிய எஃகு கட்டமைப்பு (Chassis), புதிய எல்இடி ஹெட்லைட், சிக்னேச்சர் பொசிஷன் லைட்கள், புதுப்பிக்கப்பட்ட பாடி பேனல்கள் மற்றும் மெலிதான பின்புற வடிவமைப்பு ஆகியவை பைக்கிற்கு புத்துணர்ச்சியான தோற்றத்தை வழங்குகின்றன.
பெரிய முன்பக்க கௌல், கூர்மையான பாடி பேனல்கள், மறுவடிவமைக்கப்பட்ட டேங்க் எக்ஸ்டென்ஷன்கள், மற்றும் அழைப்பு எச்சரிக்கைகளுடன் கூடிய கலர் எல்சிடி கன்சோல் மற்றும் புதிய LED விளக்குகள் போன்ற மாற்றங்கள் இதில் இடம்பெறலாம்.
மேம்படுத்தப்பட்ட 124.4சிசி எஞ்சின், சுமார் 50-55 கிமீ/லி மைலேஜ் தரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப அம்சங்களில் புளூடூத் இணைப்பு, ஸ்மார்ட் போன் அறிவிப்புகள், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் வழிகாட்டி வசதியுடன் கூடிய புதிய டிஜிட்டல் மீட்டர் இடம் பெற்றுள்ளது. என்ஜினை பொறுத்தவரை, 125 சிசி என்ஜின் மேம்படுத்தப்பட்டிருப்பதுடன், புதிய கிராங்க்கேஸ் மற்றும் எக்ஸாஸ்ட் அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது. எனினும், என்ஜின் திறன் மற்றும் செயல்திறன் குறித்த முழு விவரங்கள் அறிமுக நாளில் வெளியாகும்.
புதிய பஜாஜ் பல்சர் 125 மாடலின் விலை ரூ.90 ஆயிரம் முதல் ரூ.92,000 (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயிக்கப் படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: