ஹேட்ச்பேக் விலையில் 7 சீட்டர் கார்! நிசான் கொடுத்த செம ஷாக் - மைலேஜிலும் கிங்!

Nissan Gravite car
7 seater Nissan Gravite car
Published on

ஹேட்ச்பேக் காரை விட மிகக்குறைவான விலையில் 7 சீட்டர் (MPV) கார் கிடைக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கும். இந்த ஆச்சரியத்தை நிசான் நிறுவனம் தனது புதிய கிராவைட் (Nissan Gravite) கார் மூலம் வழங்குகிறது. இனி நடுத்தரரக இந்திய குடும்பங்கள் நெருக்கி அடித்துக்கொண்டு சிறிய காரில் செல்ல தேவையில்லை. 5.65 லட்ச ரூபாய் தொடக்க விலையில் 7 பேர் செல்லக்கூடிய காரினை நிசான் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த கார், 7 இருக்கைகள் கொண்ட எம்பிவி (MPV) ரகத்தைச் சார்ந்தது.

வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்தியாவின் பொருளாதார சூழலில், சொந்தக் கார் என்பது தற்போது அத்தியாவசிய தேவைகளின் ஒன்றாக மாறிக்கொண்டு வருகிறது. கார்களின் வாடகையும் தற்போது தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்போதெல்லாம் பலரும் காருக்கு வாடகை கொடுப்பதற்கு பதிலாக சொந்தமாக கார் வாங்குவது லாபம் என்று நினைக்கத் தொடங்கிவிட்டனர்.

சமீபத்திய ஐந்து ஆண்டு காலங்களில் புதிய காரின் விலையும் தொடர்ச்சியாக உயர்ந்த வண்ணம் இருந்தது. நான்கு பேர் சொல்லக்கூடிய ஹேட்ச்பேக் ரக சிறிய கார்களின் அடிப்படை விலையே 7 லட்ச ரூபாயைத் தாண்டி வருகிறது. நிசான் கிராவைட்டின் குறைந்தபட்ச விலை, நிச்சயம் பல இந்தியர்களின் பெரிய காரின் கனவை நனவாக்கும்.

எஞ்சின் மற்றும் மைலேஜ்:

நிசான் கிராவைட் 1.0 லிட்டர் பதிப்பு, 3 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் எஞ்சின் மூலம் இயங்குகிறது. இது 72 PS ஆற்றலையும், 96 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. மேனுவல் கியர் பதிப்பு லிட்டருக்கு 19.3 கிமீ மற்றும் ஆட்டோமேடிக் பதிப்பு லிட்டருக்கு 19.6 கி.மீ வரை செல்லும். CNG மைலேஜ் பற்றி நிறுவனம் இன்னும் குறிப்பிடவில்லை. எரிபொருள் செலவை குறைக்க இரட்டை சிலிண்டர் சிஎன்ஜி (CNG) மாடலையும் விரைவில் நிசான் அறிமுகம் செய்ய உள்ளது. இது கார் மட்டுமல்லாமல், அதன் சவாரியையும் உங்களுக்கு மலிவானதாக மாற்றும்.

இதையும் படியுங்கள்:
WOW ! யமஹாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
Nissan Gravite car

சிறப்பம்சங்கள்:

• 8 அங்குல தொடுதிரை வசதி

• ஒருங்கிணைந்த டிஆர்எல்களுடன் ஆட்டோ LED ஹெட்லேம்ப்கள்

• JBL ஸ்பீக்கர்கள்

• வயர்லெஸ் சார்ஜர்

• ஏர் பியூரிபையர்

• குரூஸ் கண்ட்ரோல்.

• ஆட்டோமேடிக் வைப்பர்கள்

• முன்பக்க , பின்பக்க பார்க்கிங் சென்சார்கள்,

• இரட்டை டேஷ் கேமராக்கள்

காரின் வண்ணங்கள்:

ஃபாரஸ்ட் கிரீன், ஓனிக்ஸ் பிளாக், மெட்டாலிக் கிரே, பிளேட் சில்வர் மற்றும் ஸ்டார்ம் ஒயிட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

வடிவமைப்பு:

பார்ப்பதற்கு இது ரெனால்ட் டிரைப்பர் கார் போல இருந்தாலும், இதன் வடிவமைப்பு சிறிது மாறுபடுகிறது. இதன் முன்புற தோற்றம் தற்போதைய வழக்கமான நிசான் கார்களை நினைவுபடுத்துகிறது. ஆயினும் இதன் அடிப்படையான ரெனால்ட் டிரைப்பரை விட கம்பீரமாகவே உள்ளது. மலிவான விலையில் வெளிப்புறத் தோற்றம் உயர் ரக கார் போல தோற்றமளிக்கிறது.

பாதுகாப்பு:

6 ஏர்பேக்குகள், ABS, EBD , ESC, TCS, HSA போன்ற 30க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இதிலுள்ளன.

விலை மற்றும் முன்பதிவு:

நிசான் கிராவைட் பதிப்புகளின் எக்ஸ் ஷோரூம் விலை

லிசியா - ₹5.65 லட்சம்

அசன்டா - ₹6.59 லட்சம்

N- கனெக்டா MT- ₹7.20 லட்சம்

N- கனெக்டா AMT- ₹7.80 லட்சம்

டெக்னா MT - ₹7.91 லட்சம்

டெக்னா AMT - ₹8.49 லட்சம்

லாஞ்ச் எடிசன் MT - ₹8.35 லட்சம்

லாஞ்ச் எடிசன் AMT - ₹8.93 லட்சம்

இதையும் படியுங்கள்:
ஐடிஆர் தாக்கல் செய்தாச்சு... அடுத்து என்ன? ரீஃபண்ட்Status-ஐ செக் செய்வது எப்படி?
Nissan Gravite car

சிறப்பு திட்டத்தின் கீழ் முதலில் முன்பதிவு செய்யும் 5,000 நபர்களுக்கு மட்டும் இந்த குறைந்த விலை பொருந்தும். மேலும் 5 ஆண்டுகள் வரை சர்வீஸ்களுக்கு பூஜ்ஜிய சேவை கட்டணத்தையும் வழங்குகிறது. கார் வாங்க நிசான் பைனான்ஸ் மூலம் 5.55% வட்டியில் நிதியுதவியும் கிடைக்கிறது.

உத்தரவாதம்:

வழக்கமாக கார்களுக்கு 3 ஆண்டுகள் அல்லது1 லட்சம் கி.மீ வரை உத்தரவாதம் வழங்கப்படும் வேளையில், நிசான் கிராவைட் அதை 10 ஆண்டுகள் அல்லது 2 லட்சம் கிமீ வரை நீட்டித்துக்கொள்ள சிறப்பு வசதியை வழங்கியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com