அட்டகாசமான லுக்: இன்று வெளியாகும் Oben Electric நிறுவனத்தின் 'Rorr EZ'

ஓபென் எலெக்ட்ரிக் நிறுவனம் தனது நியூ ஜெனரேசன் ‘Rorr EZ’ பைக்கை இன்று (ஆக.5) சந்தையில் அறிமுகப்படுத்துகிறது.
Oben Rorr EZ
Oben Rorr EZImg Credit: Oben Electric
Published on

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஓபன் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனமாகும். இந்நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் பைக் ஒன்றை இன்று அறிமுகப்படுத்த உள்ளது. பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய ‘Rorr EZ’ விலை மற்றும் செயல்திறனில் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஓபென் எலெக்ட்ரிக் நிறுவனம் தனது நியூ ஜெனரேசன் ‘Rorr EZ’ பைக்கை இன்று (ஆக.5) சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. மோட்டார் சைக்கிளுக்கான முன்பதிவும் இன்று முதலே தொடங்கப்படும் என்றும் இன்று முன்பதிவு செய்பவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் டெலிவரி கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி நகர்புற பயணத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Rorr EZ பைக் அடுத்த தலைமுறையை கவரும் மாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் சவாரி அனுபவத்தை மேம்படுத்த இந்த பைக்கில் சில நவீன தொழில்நுட்பங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது நகர்ப்புற சூழலில் 125 CC - 135 CC பைக்குகளில் நாம் பெறுவதற்கு சமமான செயல்திறனை வழங்குவதாக உறுதியளிக்கிறது.

ஓபென் ‘Rorr EZ’ மின்சார மோட்டார் சைக்கிள் உள்ளமைக்கப்பட்ட ஜிபிஎஸ் வழிசெலுத்தல் அமைப்புடன் வருகிறது. ஓபென் Rorr EZ இன் ARAI வரம்பு, மாறுபாட்டைப் பொறுத்து 110 கிமீ முதல் 175 கிமீ வரை மாறுபடும். உண்மையான வரம்பு, சவாரி செய்பவரின் எடை, சாலையின் நிலை, வானிலை உள்ளிட்ட பல காரணிகளால் மாறுபடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. முன் வட்டு மற்றும் பின்புற டிரம் பிரேக்குகளுடன், ஓபன் Rorr EZ இரண்டு சக்கரங்களின் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டத்துடன் வருகிறது.

‘Rorr EZ’ தற்போது மூன்று வகைகளில் கிடைக்கிறது. 2.6 kWh, 3.4 kWh மற்றும் 4.4 kWh ஆகிய 3 பேட்டரி பேக்குகளுடன் வருகிறது. LFP பேட்டரி தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்த பைக்கின் IDC வரம்பு, மிகப்பெரிய பேட்டரி கொண்ட மாறுபாட்டிற்கு 175 கிமீ ஆகும். 2.6kWh மற்றும் 3.4kWh வகைகளின் IDC வரம்பு முறையே 110km மற்றும் 140km ஆகும். LFP பேட்டரி பாரம்பரிய பேட்டரிகளுக்கு எதிராக 50 சதவீதம் அதிக வெப்பநிலை எதிர்ப்புடன் இரட்டிப்பு ஆயுட்காலத்தை வழங்குகிறது.

மேலும் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் 45 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜிங் செய்ய முடியும். இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 95 கி.மீ., டாப் வேரியண்ட் சிங்கிள் சார்ஜில் 175 கிமீ. 40 கிமீ வேகத்தை வெறும் 3.3 விநாடிகளில் அடையும் திறன் கொண்டது.

4 வண்ணங்களிலும் கிடைக்கும் ‘Rorr EZ’ எலக்ட்ரோ அம்பர், சர்ஜ் சியான், லுமினா கிரீன் மற்றும் ஃபோட்டான் ஒயிட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

‘Rorr EZ’ மின்சார மோட்டர் பைக்கின் மின்சார இயக்க செலவு ஒரு கிலோமீட்டருக்கு ரூ 0.15 மட்டுமே செலவாகும். கூடுதலாக, ‘Rorr EZ’ க்கான மாதாந்திர சார்ஜிங் செலவு ரூ.225 ஆகும். இந்த செலவு வாகனத்தை 6.5/யூனிட் மின்சாரம் என்ற விகிதத்தில் சார்ஜ் செய்து, தினசரி 50 கிலோமீட்டர் வரை ஓட்டுவதை வைத்து கணக்கிடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட, சகல வசதிகளுடன் கூடிய ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - Honda Activa E
Oben Rorr EZ

ஜியோஃபென்சிங், புனிஃபைட் பிரேக்கிங் அசிஸ்டன்ஸ் (UBA), திருட்டு பாதுகாப்பு, டிரைவர் அலர்ட் சிஸ்டம் (DAS) ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளது. வண்ணமயமான LED டிஸ்ப்ளே மூலம் முக்கியமான தகவல்களை வழங்கும் தொழில்நுட்பமும் இதில் உள்ளது.

அசத்தலான வடிவமைப்பில் வந்துள்ள இந்த ‘Rorr EZ’ மின்சார மோட்டர் பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்களுக்கு ‘Rorr EZ’ சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படியுங்கள்:
எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! 
Oben Rorr EZ

பெங்களூரு, புனே, டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் கேரளாவில் ஓபன் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு விற்பனை நிலையங்கள் உள்ளது. தற்போது இந்தியா முழுவதும் 60 புதிய ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com