

இந்திய அரசால் முழுமையாக ஆதரிக்கப்படும் அஞ்சல் அலுவலக நிலையான வைப்புத் திட்டம் ரூ.1000 முதல் வரம்பில்லாமல் முதலீடு செய்யும் வசதியுடன், 1,2,3,5 ஆண்டு காலங்களுக்கு 6.90% முதல் 7.50% வரை வட்டி வழங்குகிறது. 5 ஆண்டு FD-க்கு வருமான வரிச் சட்டம் 80Cன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு, மூத்த குடிமக்களுக்கு வட்டி வருமானத்தில் கூடுதல் சலுகை, TDS இல்லாத பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பு.
அஞ்சல் அலுவலக நிலையான வைப்புத் தொகை (Post Office Fixed Deposit அல்லது Time Deposit) என்பது இந்திய அரசால் முழுமையான பாதுகாப்பு மற்றும் உறுதியான வருமானம் அளிக்கப்படும் சிறந்த முதலீட்டு திட்டமாகும்.
குறைந்தபட்ச வைப்புத்தொகை:
குறைந்தபட்சம் ரூபாய் 1000 முதலீடு செய்யவேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். (ரூபாய் 100 மடங்குகளில் இருக்க வேண்டும்).
வைப்புக் காலம் மற்றும் வரிச்சலுகை:
1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகள் முதலீடு செய்யும்போது வருமான வரிச் சட்டம் பிரிவு 80Cன் கீழ் வரிவிலக்குப் பெறலாம். 5 ஆண்டு அஞ்சலக நிலையான வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்தால், வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி-ன் கீழ் ரூபாய் 1.5 லட்சம் வரை வரிவிலக்கு பெறலாம். இது இந்திய அரசால் முழுமையாக ஆதரிக்கப்படும் மிகவும் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானம் தரப்படும் ஒரு சிறந்த முதலீட்டுத் திட்டமாகும். அரசுடைமை என்பதால் முதலீட்டுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வட்டி வருமானத்தில் வரிவிலக்கு உண்டு.
பிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் மற்றும் வரிவிலக்கு பலன்கள்:
முதலீட்டு காலம் வட்டி விகிதம்
1 ஆண்டு 6.90%
2 ஆண்டுகள் 7.00%
3 ஆண்டுகள் 7.10%
5 ஆண்டுகள் 7.50%
தேர்ந்தெடுக்கப்படும் கால அளவைப் பொறுத்து வட்டி விகிதங்கள் மாறுபடும். 6.90% முதல் 7.50% வரை வட்டி வழங்கப்படுகிறது.
5 ஆண்டுகளில் முதிர்வடையும் வைப்புத் தொகை களுக்கான தபால் அலுவலக நிலையான வைப்புநிதியின் (FD) அதிகபட்ச வட்டி விகிதம் 7.50 ஆகும். வட்டித் தொகையானது ஒவ்வொரு ஆண்டும் நம் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
வங்கி நிலையான வைப்புத் தொகையா அல்லது தபால் நிலைய நிலையான வாய்ப்புத்தொகையா, எது சிறந்தது?
இவை இரண்டுமே ஏறக்குறைய ஒன்றுதான். ஆனால் அவற்றுக்கிடையே சில வேறுபட்ட அம்சங்கள் உள்ளன. வங்கி நிலையான வாய்ப்புகள் தனிப்பட்ட வங்கிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
எனவே அவற்றின் வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடும். தபால் அலுவலக நிலையான வைப்பு, தபால் அலுவலகங்களால் இயக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் வட்டி விகிதங்கள் சரி செய்யப்படுகின்றன. வங்கி நிலையான வைப்புகள் குறைந்தபட்சம் 4 நாட்கள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை கிடைக்கின்றன.
தபால் அலுவலக நிலையான வைப்புகள் 1, 2, 3 அல்லது 5 வருட கால அளவிற்கு கிடைக்கின்றன. தபால் அலுவலக நிலையான வைப்புகளை ஒரு தபால் அலுவலகத்திலோ அல்லது வங்கியிலோ நேரடியாகத் தொடங்கவேண்டும்.
ஆனால் வங்கி நிலையான வைப்புகளை ஆன்லைனில் உருவாக்கலாம். மேலும் தபால் அலுவலக நிலையான வைப்புகள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றிருப்பதால் அவை அதிக பாதுகாப்பானவை.
தபால் அலுவலக நிலையான வைப்புத்தொகையை ஆன்லைனில் தொடங்கலாம். ஆனால் அதற்கு தனிநபர் அல்லது கூட்டு சேமிப்புக் கணக்கை வாடிக்கையாளர்கள் வைத்திருக்க வேண்டும். நிலையான வைப்புத் தொகையை முறிப்பதற்கு, கணக்கைத் திறந்த நாளிலிருந்து 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகு முன்கூட்டியே பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. தபால் நிலையங்களில் செய்யப்படும் கால வைப்பு / நிலையான வைப்பு / தொடர் வைப்புத்தொகைக்கு TDS வசூலிக்கப்படுவதில்லை.
தபால் நிலையத்தில் பிக்ஸட் டெபாசிட் கணக்கு தொடங்குவது எப்படி?
அடையாளச் சான்று -ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் அட்டை , முகவரிச் சான்று - சமீபத்திய மின்சார கட்டண ரசீது, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படங்கள், முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கணக்கு தொடக்க படிவம்.
கணக்கைத் திறக்கும் பொழுது இந்த ஆவணங்களின் நகல்களுடன் சரிபார்ப்பிற்காக (verification) அசல் ஆவணங்களையும் உடன் எடுத்துச்செல்ல வேண்டும்.
இந்தத் தகவல்களை அறிவதன் மூலம், உங்கள் கடின உழைப்பில் வந்த பணத்தை எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக முதலீடு செய்து, அதிகபட்ச வட்டி வருமானத்தையும் வரிவிலக்கு சலுகைகளையும் முழுமையாகப் பெற முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: