இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் புக்கிங் ஓபன்: 600 கி.மீ மைலேஜ், ₹10 லட்சத்தில் முன்பதிவு!

ஆடம்பர எலக்ட்ரிக் SUV சந்தையில் தடம் பதிக்கும் ஜாகுவார் லேண்ட் ரோவர், இந்தியாவில் முன்பதிவை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் - Range Rover EV,
ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் - Range Rover EV,
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக், சோலிஹல் ஆலையில் தயாராகி, முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட காராக இந்தியாவுக்கு வருகிறது. 550 hp பவர், 850 Nm டார்க், 0-100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் எட்டும் திறன், 900 மில்லி மீட்டர் ஆழமுள்ள தண்ணீரிலும் செல்லும் ஆஃப்-ரோடு வசதி கொண்ட இந்த மாடல் 2027 தொடக்கத்தில் விற்பனைக்கு வரும்.

பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரேஞ்ச் ரோவர் தனது முதல் முழுமையான மின்சார மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. இது நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி திட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இந்த புதிய ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் மாடல், இங்கிலாந்தின் சோலிஹல் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 10,500 பணியாளர்கள் மின்சார வாகன உற்பத்திக்காக புதிதாகப் பயிற்சி பெற்றுள்ளனர். ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் முழு மின்சார ரேஞ்ச் ரோவர் வாகனத்திற்கான முன்பதிவு இந்தியாவில் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளது.

இந்த ஆடம்பர மின்சார காரை ரூபாய் 10 லட்சம் முன்பணத்துடன் முன்பதிவு செய்யலாம் என்றும், ஸ்டாண்டர்ட் வீல் பேஸ் (Standard wheelbase) அமைப்பில் Autobiography மற்றும் First Edition மாடல்களும் லாங் வீல்பேஸ் அமைப்பில் SV, SV Ultra மற்றும் SV Black மாடல்களும் கிடைக்கின்றன.

இதன் முக்கிய அம்சங்கள்:

இந்த ஆடம்பர மின்சார எஸ்யூவி (SUV) கார் உலகளவில் இன்றுதான் முழுமையாக பொதுவெளியில் காட்சிப் படுத்தப்பட்டது. அதே நாளில் இந்தியாவிலும் இதற்கான புக்கிங் உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
முரட்டுத்தனமான லுக்...ராயல் என்ஃபீல்டு ‘Classic 350 Gorkha Edition’ ராணுவ பாணியில் மாஸ் என்ட்ரி!
ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் - Range Rover EV,

பேட்டரி மற்றும் மைலேஜ் (Range):

இதில் 118.5kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிலோ மீட்டர் தூரம் வரை (WLTP சான்றளிக்கப்பட்டது) பயணம் செய்யும் திறன்கொண்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக், Mercedes -Maybach EQS மற்றும் Lotus Eletre போன்ற சொகுசு மின்சார SUVகளுடன் போட்டியிடும். 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக சார்ஜிங்:

இதன் 800V தொழில்நுட்பம் மூலம் 350kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தினால், வெறும் 22 நிமிடங்களில் 10% முதல் 80% வரை சார்ஜ் செய்துவிடலாம்.

வேகம் மற்றும் திறன்:

இதில் உள்ள இரண்டு மின்சார மோட்டார்கள் இணைந்து 550 hp பவர் மற்றும் 850 Nm டார்க்கையும் உருவாக்குகின்றன. இது 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடும்.

ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் - Range Rover EV,
ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் - Range Rover EV,

ஆஃப்-ரோடு (Off-road) வசதி:

மின்சார காராக இருந்தாலும், ரேஞ்ச் ரோவருக்கே உரிய ஆஃப்-ரோடு திறனுடன் வருகிறது. இது 900 மில்லி மீட்டர் ஆழமுள்ள தண்ணீரிலும் எளிதாகச் செல்லும்.

இதில் கிடைக்கும் மாடல்கள்:

இந்தியாவில் இந்த கார் Standard Wheelbase அமைப்பில் Autobiography மற்றும் First Edition டிரிம்களிலும், Long Wheelbase அமைப்பில் SV, SV Ultra மற்றும் SV Black ஆகிய சொகுசு மாடல்களிலும் முன்பதிவு செய்ய கிடைக்கிறது. இங்கிலாந்தில் உள்ள JLR -இன் சோலிஹல் (Solihull) ஆலையில் தயாரிக்கப்பட்டு, முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட (CBU) காராக இது இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.

நிறுவனம் கடந்த ஆண்டு சைபர் தாக்குதல் மற்றும் சப்ளை சேன் சிக்கல்கள் காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் இந்த மாடல் அறிமுகம் ஒரு வருடம் தாமதமானது. இருப்பினும் புதிய மின்சார மாடல், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. ரேஞ்ச் ரோவர் மேலாளர் Martin Limpert, இது 10 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சி மற்றும் பொறியியல் முயற்சியின் விளைவு என்றும், இது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இது புதிய அனுபவத்தை வழங்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த விரிவான செய்திக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், புதிதாக அறிமுகமாகியுள்ள ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் காரின் பேட்டரி திறன், மைலேஜ், அதிவேக சார்ஜிங் வசதிகள் மற்றும் இந்தியாவில் அதனை முன்பதிவு செய்வதற்கான முழுமையான வழிமுறைகளைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு உங்கள் ஆடம்பர கார் வாங்கும் முடிவை உடனடியாக எடுக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
2026 முதல் 6 மாதங்களில் மாஸ் காட்டிய முன்னணி EV கார்கள் லிஸ்ட்....
ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் - Range Rover EV,
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com